ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, October 5, 2009

இனி நிம்மதி உண்டு ! ! ! ! ! !

 பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவின் ஆசியினால்,
04.10.2009  அன்று இரவு 12.௦௦ மணி அளவில் 
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன், 
உலக ஜனங்களின் நன்மைக்காக 
குருஜீ அம்மாவின் சிஷ்யர் கோபாலவல்லிதாசருக்கு அருளிய 
"வேத கீதா சாரம்" 
 


இனி ஒரு பயமில்லை ! 
தைரியமுண்டு  !
 இனி ஒரு தடையில்லை !
வழியுண்டு !
இனி ஒரு குழப்பமில்லை !
தெளிவுண்டு !
இனி ஒரு பலவீனமில்லை !
பலமுண்டு ! 
 இனி ஒரு பிரச்சினையில்லை !
தீர்வு  உண்டு ! 
இனி ஒரு பொய்யில்லை !
நிஜமுண்டு ! 
இனி ஒரு அவசரமில்லை !
நிதானமுண்டு !
 இனி ஒரு தொந்தரவில்லை !
முயற்சியுண்டு !
இனி ஒரு வியாதியில்லை ! 
ஆரோக்கியமுண்டு !
இனி ஒரு பஞ்சமில்லை !
வளமுண்டு ! 
இனி ஒரு விரோதமில்லை ! 
அன்பு உண்டு !
இனி ஒரு சோம்பலில்லை !  
விழிப்புண்டு !
இனி ஒரு அறியாமையில்லை !
 ஞானமுண்டு !
இனி ஒரு சந்தேகமில்லை ! 
சமாதானமுண்டு !
இனி ஒரு வீழ்ச்சியில்லை !
எழுச்சி உண்டு ! 
இனி ஒரு நஷ்டமில்லை !
லாபமுண்டு !
இனி ஒரு கடனில்லை !
  தானமுண்டு ! 
இனி ஒரு அதர்மமில்லை ! 
தர்மமுண்டு ! 
இனி ஒரு தோல்வியில்லை ! 
வெற்றியுண்டு !
இனி ஒரு துக்கமில்லை ! 
ஆனந்தமுண்டு !
இனி ஒரு ஏமாற்றமில்லை !
மாற்றமுண்டு !
இனி ஒரு அவமானமில்லை !
மரியாதையுண்டு !
இனி ஒரு ஏழ்மையில்லை ! 
நீங்காத செல்வமுண்டு !
இனி ஒரு ஆபத்தில்லை !
அமைதியுண்டு !
இனி ஒரு இருட்டில்லை !
விடியலுண்டு !
இனி ஒரு விபத்தில்லை !
முன்னேற்றமுண்டு !
இனி ஒரு கோபமில்லை !
குணமுண்டு ! 
இனி ஒரு மன உளைச்சலில்லை !
தியானமுண்டு !
இனி ஒரு ஊமில்லை !
உறுதியுண்டு !
இனி ஒரு தயக்கமில்லை !
சந்தர்ப்பமுண்டு !
இனி ஒரு அசட்டுத்தனமில்லை !
சாமர்த்தியமுண்டு ! 
இனி ஒரு பசியில்லை !
ஆகாரமுண்டு ! 
இனி ஒரு துரோகமில்லை !  
உதவியுண்டு ! 
இனி ஒரு தீமையில்லை !
நன்மை உண்டு ! 
இனி ஒரு அழிவில்லை !
ஆக்கமுண்டு ! 
இனி ஒரு அழுகையில்லை !
பிரார்த்தனையுண்டு ! 
இனி ஒரு குறையில்லை !
 நிறையுண்டு !
இனி ஒரு வெறுப்பில்லை !
 பக்தியுண்டு !  
இனி ஒரு பாவமில்லை !
சத்சங்கம் உண்டு !
இனி ஒரு தனிமையில்லை !
பக்தர்களுண்டு ! 
இனி ஒரு கவலையில்லை !
சரணாகதி உண்டு ! 
இனி ஒரு தேவையில்லை !
வாழ்வு உண்டு !
இனி ஒரு காமமில்லை !
பிரேமையுண்டு ! 
இனி ஒரு மரணமில்லை !
மோக்ஷமுண்டு ! 
பகவான் க்ருஷ்ணன் உண்டு ! 
 "ராதேக்ருஷ்ணா " நாமஜபம் உண்டு !
சத்குருநாதன் துணை என்றும் உண்டு! 
இனி நிச்சயம் நிம்மதி உண்டு! 

2 comments:

Guru October 6, 2009 at 11:30 AM  

Iam tankfull amma giving this wonderfull things to read after reading this am blessed by amma

Radhekrishna

Venkat October 8, 2009 at 2:02 AM  

RK - Right message at a Right time for sure.

Venkat (US)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP