ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, October 12, 2009

நீ யார் தெரியுமா ?

ராதேக்ருஷ்ணா

உன்னை நீ அறிந்துகொள் !
நீ யார் தெரியுமா ?
நீ ஆணில்லை ! நீ பெண்ணில்லை !
நீ ஏழையில்லை ! நீ பணக்காரனில்லை !
நீ முட்டாளில்லை ! நீ அறிவாளியில்லை !
நீ நோயாளியில்லை ! நீ பைத்தியமில்லை ! 
நீ  உடலில்லை ! நீ மனமில்லை !
யாரும் உன்னை கட்டுப்படுத்தவில்லை !

  நீயே உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய் !
இனியாவது தெரிந்துகொள் !  

நீ ஆத்மா  !
அழியாத ஆத்மா !
யாராலும் அழிக்கமுடியாத ஆத்மா ! 
நீ பகவானுடைய சொத்து !
நீ பகவான் கிருஷ்ணனுக்கு மிகவும் 
பிடித்த சுத்தமான ஆத்மா !
இதைப் புரிந்துகொண்டு உன் 
உடல் என்னும் கருவியை 
நல்லவழியில் உபயோகப்படுத்தி 
வாழ்க்கையை ஜெயிப்பாயாக !

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP