ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, November 30, 2009

ரசிப்பாயா !ராதேக்ருஷ்ணா
தாயை ரசிக்கின்றாய் !
தந்தையை ரசிக்கின்றாய் !
மனைவியை ரசிக்கின்றாய் !
கணவனை ரசிக்கின்றாய் !
குழந்தைகளை ரசிக்கின்றாய் !
சகோதரனை ரசிக்கின்றாய் !
சகோதரியை ரசிக்கின்றாய் !
பந்துக்களை ரசிக்கின்றாய் ! 
பூவை ரசிக்கின்றாய் !
செடியை ரசிக்கின்றாய் !
நந்தவனத்தை ரசிக்கின்றாய் ! 
நிழலை ரசிக்கின்றாய் !
சூட்டை ரசிக்கின்றாய் ! 
வானத்தை ரசிக்கின்றாய் !
மேகத்தை ரசிக்கின்றாய் !
மழையை ரசிக்கின்றாய் !
குளிரை ரசிக்கின்றாய் !
அருவியை ரசிக்கின்றாய் !
மலையை ரசிக்கின்றாய் !
வானவில்லை ரசிக்கின்றாய் ! 
நாயை ரசிக்கின்றாய் !
கோலத்தை ரசிக்கின்றாய் !
இளநீரை ரசிக்கின்றாய் ! 
சாப்பாட்டை ரசிக்கின்றாய் !
துணிமணிகளை ரசிக்கின்றாய் !
துணி துவைப்பதை ரசிக்கின்றாய் ! 
விடியற்காலையை ரசிக்கின்றாய் !
இசையை ரசிக்கின்றாய் ! 
நடனத்தை ரசிக்கின்றாய் !
சண்டையை ரசிக்கின்றாய் !
நகைச்சுவையை ரசிக்கின்றாய் !நடிப்பை ரசிக்கின்றாய் ! 
பேச்சை ரசிக்கின்றாய் !
பேசுவதை ரசிக்கின்றாய் ! 
நடையை ரசிக்கின்றாய் !
செருப்பை ரசிக்கின்றாய் ! 
சிரிப்பை ரசிக்கின்றாய் !
ஓவியத்தை ரசிக்கின்றாய் !
கேலிச் சித்திரத்தை ரசிக்கின்றாய் ! 
விளம்பரத்தை ரசிக்கின்றாய் !
அழைப்பிதழை ரசிக்கின்றாய் ! 
அலங்காரத்தை ரசிக்கின்றாய் !
அலங்கரிப்பதை ரசிக்கின்றாய் ! 
நட்பை ரசிக்கின்றாய் !
உன் பொருட்களை ரசிக்கின்றாய் !
அடுத்தவரின் உடலை ரசிக்கின்றாய் !
மற்றவரின் பொருட்களை ரசிக்கின்றாய் !
புத்தகத்தை ரசிக்கின்றாய் !
எழுதுகோலை ரசிக்கின்றாய் !
இளந்தளிரை ரசிக்கின்றாய் ! 
உதிர்ந்த இலைகளை ரசிக்கின்றாய் !
மற்றவரின் பைத்தியக்காரத்தனத்தை
ரசிக்கின்றாய் !
கூட்டத்தை ரசிக்கின்றாய் !
இளமையை ரசிக்கின்றாய் !
முதுமையை ரசிக்கின்றாய் !
மழலையை ரசிக்கின்றாய் !
பிரயாணத்தை ரசிக்கின்றாய் !
வண்டிகளை ரசிக்கின்றாய் !
 தேனை ரசிக்கின்றாய் ! 
சிற்றுண்டியை ரசிக்கின்றாய் !
நொறுக்குத்தீனிகளை ரசிக்கின்றாய் !
அழைப்புமணியை ரசிக்கின்றாய் !
பரிசை ரசிக்கின்றாய் !
பழைய நினைவுகளை ரசிக்கின்றாய் !
புகைப்படங்களை ரசிக்கின்றாய் !
தொழில்நுட்பத்தை ரசிக்கின்றாய் !
குறுந்தகவல்களை ரசிக்கின்றாய் !
வதந்தியை ரசிக்கின்றாய் !
அழகு சாதன பொருட்களை ரசிக்கின்றாய் !
உன்னையே அங்குலம் அங்குலமாக
ரசிக்கின்றாய் !


இதுவே போதுமென்று
நினைக்கின்றேன் !
இதற்கு மேல்
சொல்ல வேண்டுமோ ! ? !

இத்தனையையும்,
இதற்கு மேலும்
ரசிக்கத்தெரிந்த
உனக்கு
க்ருஷ்ணனை
ரசிக்கமுடியாதா ! ? !

இத்தனைக்குள்ளும்
நீ எதை ரசிக்கின்றாயோ
அவையனைத்தும்
க்ருஷ்ணனின் ஒரு துளியே !

இத்தனையையும்
இவ்வளவு ரசிக்கும்படியாக
படைத்திருக்கிறானென்றால்
அவன் எவ்வளவு பெரிய
ரசிகனாக இருப்பான் ! ! !

இத்தனையையும்
ரசிப்பதில் நீ உன் க்ருஷ்ணனை
ரசிக்க மறந்துவிட்டாயே ! ? !

இனி க்ருஷ்ணனை ரசிப்பாய் !

எல்லாவற்றிற்குள்ளும்
இருக்கும் உன்
க்ருஷ்ணனை
இனியாவது ரசிப்பாயா !

க்ருஷ்ணனைத்தவிர
ரசிக்கும்படியாக
எது இந்த உலகில்
நிரந்தரமாக உள்ளது ? ! ! 
 
 

Read more...

Sunday, November 29, 2009

க்ருஷ்ணனை நம்பு !


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனை நம்பு ! 
க்ருஷ்ணனைப் புரிந்து கொள் !

க்ருஷ்ணன் உனக்கு  என்றுமே 
நல்லது மட்டுமே செய்கின்றான் !

க்ருஷ்ணனைத் தவிர
யார் உனக்கு என்ன
நல்லது செய்துவிட முடியும் ? ! ?

இன்று வரை நீ தான்
உனக்குக் கஷ்டத்தைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய் !

அதையும் தாண்டி
உன் க்ருஷ்ணன் உனக்கு
நல்லது மட்டும்தான் செய்கிறான் !

நீயே நினைத்தாலும் உன்னை
உன் க்ருஷ்ணன் உன்னை துக்கத்தில்
வாழ விடுவதில்லை !

நீ கேட்காவிட்டாலும் உன் 
க்ருஷ்ணன் உனக்கு
ஆனந்தத்தை மட்டுமே
தருகிறான்  !

நீ நம்பாவிட்டாலும் உன்
க்ருஷ்ணன் உன்னிடத்தில்
திடமான நம்பிக்கை
வைத்திருக்கிறான் !

நீ மறந்தாலும் உன்
க்ருஷ்ணன் உன்னை
ஒருநாளும் மறக்கப்
போவதில்லை !

நீ வெறுத்தாலும் உன்
க்ருஷ்ணன் உன்னை
ஒருபொழுதும்
வெறுக்கப் போவதில்லை !

நீயே துரத்தினாலும்
உன் க்ருஷ்ணன் 
உன்னைவிட்டு 
ஒரு சமயத்திலும்
விலகப்போவதில்லை ! 
 
 எத்தனை பேரிடத்தில்
எவ்வளவு ஆழமான
நம்பிக்கை வைத்திருக்கிறாய் !

உன் உடலுக்கு சுகம்
தருபவர்களை எத்தனை
த்ருடமாக நம்புகிறாய் . . .

வெளியூருக்குச் செல்லும்போது
அந்த வண்டியை ஓட்டுபவரை
எத்தனை அற்புதமாக
நம்புகிறாய் . . .

நீ அமரும் நாற்காலி
உன்னைத் தாங்கும் என்பதை
எத்தனை தைரியமாக
நம்புகிறாய் . . .

வீட்டைக் காக்கும்
வாலை ஆட்டிக்கொண்டுவரும்
நாயை எத்தனை சத்தியமாக
நம்புகிறாய் . . .

உனக்கு சம்மந்தமேயில்லாத
உணவு விடுதியின் உணவில்
விஷம் இருக்குமா என்று
சந்தேகமேபடாமல்
நிம்மதியாக நம்புகிறாய் . . .

இரவை நம்புகின்றாய் . . .
பகலை நம்புகின்றாய் . . .
சூரியனை நம்புகின்றாய் . . .
சந்திரனை நம்புகின்றாய் . . .
காற்றை நம்புகின்றாய் . . .
கடலை நம்புகின்றாய் . . .
செடியை நம்புகின்றாய் . . .
கொடியை நம்புகின்றாய் . . .
மரத்தை நம்புகின்றாய் . . .
பூட்டை நம்புகின்றாய் . . .
செருப்பை நம்புகின்றாய் . . .
துணியை நம்புகின்றாய் . . .
இரயில் சினேகத்தை நம்புகின்றாய் . . .
ஆகாயவிமானத்தை நம்புகின்றாய் . . .
மலரை நம்புகின்றாய் . . .
பணத்தை நம்புகின்றாய் . . .
வீட்டுமனையை நம்புகின்றாய் . . .
தங்கத்தை நம்புகின்றாய் . . .
வைரத்தை நம்புகின்றாய் . . .
சர்க்கரையை நம்புகின்றாய் . . .
உப்பை நம்புகின்றாய் . . .
மிளகாயை நம்புகின்றாய் . . .
விரல் நகத்தை நம்புகின்றாய் . . .
தலைமுடியை நம்புகின்றாய் . . .
துடைப்பத்தை நம்புகின்றாய் . . .
கடிகாரத்தை நம்புகின்றாய் . . .
தொலைபேசியை நம்புகின்றாய் . . .
பத்திரத்தை நம்புகின்றாய் . . . 
விளம்பரங்களை நம்புகின்றாய் . . .
விஞ்ஞானத்தை நம்புகின்றாய் . . . 
உன் கண்ணை நம்புகின்றாய் . . .
உன் காதை நம்புகின்றாய் . . .
உன் மூக்கை நம்புகின்றாய் . . .
உன் கையை நம்புகின்றாய் . . .
உன் வலியை நம்புகின்றாய் . . .
 உன் தலையணையை நம்புகின்றாய் . . .
உன் போர்வையை நம்புகின்றாய் . . .
உன் குளிர்சாதனப்பெட்டியை நம்புகின்றாய். . .
உன் நாக்கின் ருசியை நம்புகின்றாய் . . .
உன் காமத்தை நம்புகின்றாய் . . .
உனக்குப் பிடித்தவர்களை நம்புகின்றாய் . . .
உடல் வியாதியை நம்புகின்றாய் . . .
 அழியக்கூடிய உன் உடலை நம்புகின்றாய் . . .
உன் தன்னம்பிக்கையை நம்புகின்றாய் . . . 
உன் புத்தியை நம்புகின்றாய் . . .
உன் மனதை நம்புகின்றாய் . . .

 இன்னும் எத்தனையோ 
 கேவலங்களை அப்படியே
நம்புகின்ற உன்னால்
க்ருஷ்ணனை நம்பமுடியாதோ ! ? !

முடியும்...உன்னால் முடியும்...

உன்னால் க்ருஷ்ணனை 
நம்பவம் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனை
பார்க்கவும் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனுடன்
பேசவும் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனை
அனுபவிக்கவும் முடியும் . . .

க்ருஷ்ணனை நம்பித்தான் பாரேன் ! ! !

பிறகு பலருக்கு நீயே சொல்வாய் . . .
"க்ருஷ்ணனை நம்பு "

Read more...

Saturday, November 28, 2009

முடிவல்ல ஆரம்பம் ....


ராதேக்ருஷ்ணா


முடிவல்ல ஆரம்பம் ....
விடியலின் ஆரம்பத்தில்
இருளின் முடிவு . . .பணிவின் ஆரம்பத்தில்
அகம்பாவத்தின் முடிவு . . .


தைரியத்தின் ஆரம்பத்தில்
பயத்தின் முடிவு . . .


சுறுசுறுப்பின் ஆரம்பத்தில்
சோம்பேறித்தனத்தின் முடிவு . . .


சத்தியத்தின் ஆரம்பத்தில்
பொய்யின் முடிவு . . .


உழைப்பின் ஆரம்பத்தில்
திருட்டுத்தனத்தின் முடிவு . . .


விளைச்சலின் ஆரம்பத்தில்
பசியின் முடிவு . . .பொதுநலத்தின் ஆரம்பத்தில்
சுயநலத்தின் முடிவு . . .


பதிலின் ஆரம்பத்தில்
கேள்வியின் முடிவு . . .


தெளிவின் ஆரம்பத்தில்
சந்தேகத்தின் முடிவு . . .


விழிப்பின் ஆரம்பத்தில்
தூக்கத்தின் முடிவு . . .


நிதானத்தின் ஆரம்பத்தில்
அவசரத்தின் முடிவு . . .


தானத்தின் ஆரம்பத்தில்
கஞ்சத்தனத்தின் முடிவு . . .

அன்பின் ஆரம்பத்தில்
பிரிவினையின் முடிவு . . .


தீர்வின் ஆரம்பத்தில்
ப்ரச்சனைகளின் முடிவு . . .தர்மத்தின் ஆரம்பத்தில்
அதர்மத்தின் முடிவு . . .ஆனந்தத்தின் ஆரம்பத்தில்
துன்பத்தின் முடிவு . . .

ஆக்கத்தின் ஆரம்பத்தில்
அழிவின் முடிவு . . .

சத்சங்கத்தின் ஆரம்பத்தில்
வீழ்ச்சியின் முடிவு . . .த்யானத்தின் ஆரம்பத்தில்
சஞ்சலத்தின் முடிவு . . .

பக்தியின் ஆரம்பத்தில்
குழப்பத்தின் முடிவு . . .


நாமஜபத்தின் ஆரம்பத்தில்
பாவத்தின் முடிவு . . .


ஞானத்தின் ஆரம்பத்தில்
அஞ்ஞானத்தின் முடிவு . . .

ப்ரேமையின் ஆரம்பத்தில்
காமத்தின் முடிவு . . .

சரணாகதியின் ஆரம்பத்தில்
  சம்சார சாகரத்தின் முடிவு . . .


குருக்ருபையின் ஆரம்பத்தில்
சகல துக்கங்களின் முடிவு . . .


அதனால் இனி முடிவை விட
ஆரம்பமே முக்கியம் . . .


இனி ஒன்றின் முடிவுக்கு
ஏங்குவதை விட்டுவிட்டு
எதன் ஆரம்பத்தில் 
அதன் முடிவு என்பதைக்
கண்டுபிடி . . .


உன் தேடலின் ஆரம்பத்தில்
உன் தொந்தரவுகளின் முடிவு . . .


இனி 
ஆரம்பத்தில் முடிவு . . .


அடுத்த ஆனந்தவேதத்தின் ஆரம்பத்தால்
இந்த ஆனந்தவேதத்தின் முடிவு . . .


இந்த ஆனந்தவேதத்தின் முடிவில்
உன்னுடைய புது சிந்தனையின் ஆரம்பம் . . .


எனவே
முடிவல்ல ஆரம்பமே . . .
மாற்றத்தின் ஆரம்பமே . . .


இன்றைய கைசிக,குருவாயூர்
ஏகாதசியின் ஆரம்பத்தில்,
பழைய பைத்தியக்காரச்
சிந்தனைகளின் முடிவு  . . .


உனக்கும் முடிவில்லை . . .
 உன் க்ருஷ்ணனுக்கும் முடிவில்லை . . .
உன் பக்திக்கும் முடிவில்லை . . .
உன் நாம ஜபத்திற்கும் முடிவில்லை . . .
உன் குரு க்ருபைக்கும் முடிவில்லை . . .


எனவே ஆனந்தத்தின் ஆரம்பமே . . .
இனி புது வாழ்வின் ஆரம்பமே . . .
முக்தியின் ஆரம்பமே . . .
பரமானந்த ரஹஸ்யத்தின் ஆரம்பமே . . .


Read more...

Friday, November 27, 2009

நிரந்தரம் !ராதேக்ருஷ்ணா


உன்னுடைய க்ருஷ்ணன்
எல்லோரையும் விட மிகப்பெரியவன்தான் !உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தாயைக் காட்டிலும்
உன்னிடத்தில் பரிவுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தந்தையைக் காட்டிலும்
உன்னிடத்தில் அக்கறையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் குழந்தைகளைக் காட்டிலும்
உன்னிடத்தில் பாசமுடையவன் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய சகோதர,சகோதரிகளைவிட
உன்னிடத்தில் சினேகமுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் கணவனைக் காட்டிலும்
உன்னிடத்தில் உரிமையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் மனைவியைக் காட்டிலும்
உன்னிடத்தில் ஆசையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் நண்பர்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் நட்புடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய வேலைக்காரர்களைவிட
உன்னிடத்தில் விசுவாசம் உடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய பந்துக்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் பந்தம் உடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் வைத்தியரைவிட
உன் தேக சுகத்தில்
நலமுடையவன்!


உன் க்ருஷ்ணன்
மற்றவர்களை விட
உன்னிடத்தில் நன்றியுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னைக் காட்டிலும்
உன்மீது அன்புடையவன் !

உன்னை உனக்கு சிறிது
வருஷங்களாகத்தான் தெரியும் !


உன்னை உன் பெற்றோருக்கு
நீ பிறந்ததிலிருந்துதான் தெரியும் !


மற்றவருக்கு உன்னை
சில வருஷங்களாகத் தெரியும் !


ஆனால் யாருக்குமே
உன்னுடைய பூர்வஜன்மாவோ,
உன்னுடைய பாவ புண்ணியங்களோ,
உன்னுடைய மனதோ,
உள்ளபடி தெரியவே தெரியாது . . .

ஏனெனில் யாரும் நிரந்தரமில்லை . . .க்ருஷ்ணனுக்கோ உன்னை
ஆதியிலிருந்து தெரியும் . . .
உன் உடலை அங்குலம் அங்குலமாக
நன்றாகத் தெரியும் . . .
உன் மனதை உனக்குள்ளிருந்தே
பார்த்துக் கொண்டிருக்கிறான் . . .


உன்னைப்பற்றி
எல்லோரையும் விட
மிக நன்றாகத் தெரிந்தவன் க்ருஷ்ணனே!


மற்றவர் தூங்கும்போது அவர்களுக்கு
உன்னைத் தெரியாது. . .
நீ தூங்கும்போது உனக்கே எப்படித்
தூங்குகின்றாய் என்று தெரியாது . . .


ஆனால் க்ருஷ்ணன்
எப்பொழுதுமே 
விழித்துக் கொண்டிருக்கின்றான் !


அதனால் க்ருஷ்ணனை
திடமாக நம்பு !
வாழ்க்கையில் அவனுக்கு
எல்லோரையும் விட
முக்கியத்துவம் தா !


அவனுக்குக் கீழ்தான்
மற்ற அனைவருமே !


உயர்வற உயர் நலமுடையவன் அவன்
மயற்வற மதி நலம் தருபவன் அவன்
அயர்வறு அமரர்கள் அதிபதி அவன்


அவன் உன் கண்ணன் !

அவனுடைய
துயரறு சுடரடி மட்டுமே
நிரந்தரம் !
Read more...

Thursday, November 26, 2009

உன் க்ருஷ்ணன் !ராதேக்ருஷ்ணா


உன் க்ருஷ்ணன் 
உன்னுடனேயே
இருக்கின்றான் !உன் க்ருஷ்ணன்
உன் கண்ணின் காணும் சக்தியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் காதின் கேட்கும் சக்தியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் மூக்கின் முகரும் சக்தியாக
இருக்கின்றான் !உன் க்ருஷ்ணன்
உன் நாக்கின் ருசிக்கும் சக்தியாக
இருக்கின்றான !


உன் க்ருஷ்ணன்
உன் வாயின் பேசும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் தோலின் தொடு உணர்ச்சியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மனதின் சிந்தனை சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் கைகளின் வேலை செய்யும்
சக்தியாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் கால்களின் நடையாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் புத்திசாதுர்யமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பசியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உனக்கு ஆகாரமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ஜீரண சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மனதில் அன்பாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பரிவாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய உபகார 
சிந்தையாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய திறமையாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தூக்கமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் விழிப்பாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னைத் தூண்டும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மூச்சுக்காற்றாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தைரியமாக
இருக்கின்றான் !உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நல்ல எண்ணங்களாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னடைய பொறுமையாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தர்மத்திற்கு
விரோதமில்லாத காமமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் வம்சத்தை உற்பத்தி
செய்யும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உனக்குள் நம்பிக்கையாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ஆனந்தமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நல்ல
பழக்கவழக்கங்களாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நியாயமான
கோபமாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ரகசியமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் பலமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் உடலில்
ரத்தமாக 
ஓடிக்கொண்டிருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய
கள்ளமில்லாத
சிரிப்பாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய
ஆனந்தக்கண்ணீராக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நாம ஜபமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உனக்குள்
அந்தர்யாமியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
இப்படி பலவிதமாக
உன் கூடவேதான்
என்றும் இருக்கின்றான் !


அதனால் ஆனந்தமாகயிரு !
என்றும் ஆனந்தமாகயிரு !
எப்பொழுதும் ஆனந்தமாகயிரு !
எங்கும் ஆனந்தமாகயிரு !


இனி உன் வாழ்க்கையில்
ஆனந்தத்தைத் தவிர
வேறு எதுவுமே
இருக்கக்கூடாது !
Read more...

Wednesday, November 25, 2009

ஆனந்தவேதமாகட்டும் !ராதேக்ருஷ்ணா

எதற்கும் அகம்பாவப்படாதே !

என்னைப்போல் அழகு யாருமில்லை
என்று நினைக்காதே !

என்னைப்போல் புத்திசாலியில்லை
 என்று நினைக்காதே !

 என்னைப்போல் படித்தவர்களில்லை
 என்று நினைக்காதே !

என்னைப்போல் சமையல் செய்ய
ஆளில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் அழகாகக் கோலம் போடத் தெரியவேண்டுமென்று நினைக்காதே!

 என்னைப்போல் அமைதியாக இருக்கத் தெரியவில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் சுத்தமாக இருக்க 
வேண்டாமா? என்று நினைக்காதே !

என்னைப்போல் ஒழுங்காக துணி உடுத்தத்
தெரியவில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் எல்லோரிடமும்  அன்பு காட்டவேண்டாமா என்று நினைக்காதே!

என்னைப்போல் அடுத்தவர்களுக்கு
யார் உதவுகிறார்கள் ? என்று நினைக்காதே !

என்னைப்போல் வீட்டை சுத்தமாக
வைப்பவர்கள் யார்?என்று நினைக்காதே !


 நான் குழந்தைகளை நன்றாக
வளர்த்திருக்கிறேன்  என்று நினைக்காதே !

என்னைப்போல் பொறுப்பாக இருப்பவர்களுண்டா என்று நினைக்காதே !

எனக்கு இந்த விஷயங்கள்
அத்துப்படி என்று நினைக்காதே !

நான் மற்றவர்களுக்காக நிறைய
விஷயங்களை த்யாகம் செய்கின்றேன்
என்று நினைக்காதே !

என் குடும்பத்திற்காக நான் நிறையக்
கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று நினைக்காதே !

என்னைப்போல் உழைக்கிற இடத்தை
கோவிலாக யாரும் மதிப்பதில்லை
என்று நினைக்காதே !

என்னைப்போல் உபசரிக்க தெரிந்து
கொள்ளவேண்டும் என்று நினைக்காதே !

என்னைப்போல் ஒளிவு மறைவில்லாமல்
யாரிருக்கிறார்கள் என்று நினைக்காதே !

  என் குழந்தைகளைப்போல் உலகில்
யாருண்டு என்று நினைக்காதே !

என்னைப் போல் யார் அழகாக
நந்தவனம் வைத்திருக்கிறார்கள்
என்று நினைக்காதே !

எனக்கு ரொம்ப அற்புதமாக
பூத்தொடுக்கத்தெரியும் என்று நினைக்காதே !

எனக்கு எல்லா விஷயத்திலும்
நல்ல தைரியம் உண்டு என்று நினைக்காதே ! 
 
 என்னைப்போல் ஜாக்கிரதையாக
இருக்கவேண்டாமா என்று நினைக்காதே !

நான் அழகாக திட்டமிட்டு காரியங்கள்
செய்வேன் என்று நினைக்காதே ! 
 
 என் குடும்பத்திலேயே நான்மட்டும்தான்
வித்தியாசம் என்று நினைக்காதே !நான் என் குடும்பத்தை ஒழுங்காக
நடத்துகின்றேன் என்று நினைக்காதே !

என்னைப்போல் நோயாளிகளை
நிதானமாக கவனிப்பார்களில்லை
என்று நினைக்காதே !
 
என்னைப்போல் விஷயங்களை
யதார்த்தமாக புரிந்துகொண்டு
நடக்கத்தெரியவேண்டும் 

என்று நினைக்காதே !

என்னுடைய சமயோசித புத்தியினால்
பெரிய ஆபத்து விலகியது
என்று நினைக்காதே !

எனக்கு நிறைய ஸ்லோகங்கள்
தெரியும் என்று நினைக்காதே !

நான் தினமும் விடாமல் பாராயணம் 
செய்கின்றேன் என்று நினைக்காதே ! 
  
நான் நிறைய நாம ஜபம்
செய்கின்றேன் என்று நினைக்காதே !

நான் தினமும் விடாமல் கோவிலுக்குப் போகின்றேன் என்று நினைக்காதே !

 என்னைப்போல் கோயிலில் யாரும்
கைங்கர்யம் செய்கிறார்கள்
என்று நினைக்காதே !

 இன்னும் சொல்லிக்கொண்டிருக்கலாம் !
உன்னால் தாங்கமுடியாது !

அதனால் இனி நான்தான், 
என்னைப் போல் என்ற எண்ணங்களை
 மாற்றிக்கொள் !

உன்னைவிட உயர்ந்தவர்கள்
உலகத்தில் கோடிபேர் உண்டு !

நீ எந்த விஷயத்தில் அகம்பாவப்படுகிறாயோ
அதுவே உனக்கு அடி கொடுக்கும் !

பகவானுக்குப் பிடிக்காதது
அகம்பாவமே !

க்ருஷ்ணன் க்ருபையின்றி
என்ன செய்துவிடுவாய் ?

தூங்கும்போது எப்படி
அகம்பாவமில்லாமல்
இருக்கிறாயோ அதுபோல்
விழித்துக்கொண்டிருக்கும் போதும்
இருக்க விடாது நாம ஜபம் செய் !

உன்னுடைய அத்தனை
நல்ல விஷயங்களும்
க்ருஷ்ணன் உனக்கிட்ட பிச்சை !

உன்னுடைய கெட்ட சிந்தனைகளும்,
காரியங்களும், முட்டாள்தனங்களுமே
உன்னுடையவை . . .

அதலால் அகம்பாவமே வேண்டாம் . . . 
 
உன் அகம்பாவம்தான்
உன்னுடைய சகல விதமான
துன்பங்களுக்கும் காரணம் . . .

அதனால் க்ருஷ்ணனிடம்
சரணாகதி செய்து
அகம்பாவ ராக்ஷசனை
வதம் செய்ய ப்ரார்த்தனை
செய் !

 அகம்பாவ ராக்ஷசன்
அழிந்து
உன் வாழ்க்கையே
ஆனந்தவேதமாகட்டும் !

 குருஜீஅம்மாவிடமும்,
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .
  
 

Read more...

Tuesday, November 24, 2009

உன் க்ருஷ்ணனின் ஆசை !


ராதேக்ருஷ்ணா


 சரியாக நினை ! சரியாகப் பேசு !

 இப்படி நினைத்துப் பார் !
இப்படி உனக்குள் பேசிப் பார் ! 

என் க்ருஷ்ணனின் க்ருபையால்
நான் சந்தோஷமாக இருக்கிறேன் !

என் க்ருஷ்ணனுடைய ஆசிர்வாதத்தால்
 உடம்பு தெம்பாக இருக்கிறது !

என் க்ருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் 
என் வாழ்க்கை நன்றாகச் செல்கிறது !

என் க்ருஷ்ணனுடைய அருளால்  
என் மனது நிம்மதியாக உள்ளது !

 என் க்ருஷ்ணனுடைய க்ருபையால்
குடும்பம் சௌக்கியமாக இருக்கிறது !

என்னுடைய க்ருஷ்ணனுடைய கருணையால்
என் வியாதி இப்போது குறைகின்றது !

என் கோபம் க்ருஷ்ண பக்தியால்
இப்போது நன்றாக குறைந்துவருகிறது ! 

 என் க்ருஷ்ணனால், என்னுடைய
 பிரச்சனைகள்  தீர்ந்துகொண்டிருக்கிறது !

 என் க்ருஷ்ணனின் வழிகாட்டுதலோடு
கடமைகளை நன்றாகச் செய்கிறேன் !

என் க்ருஷ்ணன், என் தேவைகளை
அழகாகப் பூர்த்தி செய்கின்றான் !

என் க்ருஷ்ணனால், வீட்டில் இப்பொழுது எல்லோரும்
 சமாதானமாக இருக்கிறோம் !

என் க்ருஷ்ணனால், நான் வேலை 
செய்யுமிடத்தில் ஒழுங்காக 
வேலைகளை கவனிக்கிறேன் !

 என் க்ருஷ்ணனுடைய க்ருபாகடாக்ஷத்தால்
என் புத்தி இப்போது தெளிவாக இருக்கிறது !

 என் க்ருஷ்ணனுடைய அன்பினால்
என் மனது நிறைந்திருக்கிறது !

என் க்ருஷ்ணனுடைய கவனிப்பால்
என் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் !

என் க்ருஷ்ணன் என் குழந்தைகளை
பக்தியில் நன்றாக வாழவைப்பான் !என் க்ருஷ்ணன் எனக்கு பக்தர்களை
குழந்தையாகத் தருவான் !

என் க்ருஷ்ணன் எனக்கு நிறைய
சத் விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறான் !

என் க்ருஷ்ணன் ஒருநாளும்
என்னை தவறான வழியில் போகவிடமாட்டான் !

 என் க்ருஷ்ணன் எனக்கு அகம்பாவம்
வராமல் காப்பாற்றுவான் !

என் க்ருஷ்ணன் என் மனதை
பக்தியில் திளைக்க வைக்கிறான் !

என் க்ருஷ்ணன் என்னை எப்போதும்
நாமஜபம் செய்ய வைக்கிறான் !

என் க்ருஷ்ணன் என் குடும்பத்தை
என்றும் நன்றாகவே வைப்பான் ! 


 என் க்ருஷ்ணன் என்னைக் கெட்டப்
பழக்கவழக்கங்களிலுருந்து மீட்டுவிட்டான் !

என் க்ருஷ்ணன் என் மனதின் 
கவலைகளை அழித்துவிட்டான் !

என் க்ருஷ்ணன் என்னை
 நன்றாக தூங்கவைப்பான் !

என் க்ருஷ்ணன் என்னை காலையில்
தெம்பாக எழுந்திருக்க வைப்பான் !

 என் க்ருஷ்ணன் எனக்கு நல்ல
கணவனைத் தருவான் !

என் க்ருஷ்ணன் எனக்கு நல்ல
மனைவியைத் தருவான் !

என் ராதிகாராணியின் ஆசைப்படி
என் க்ருஷ்ணனை அனுபவிப்பேன் ! 

இப்படியெல்லாம் உன் நினைவுகள்
மாறினால் சத்தியமாக
உன் வாழ்வு ஆனந்தமாக மாறும் !

இதைச் செய் !
உடனே செய் !
இப்பொழுதே செய் !

நீ நன்றாக இருக்கவேண்டும் !
இதுவே உன் க்ருஷ்ணனின் ஆசை !

நிறைவேற்றுவாயா  ! ! ! 

உன் க்ருஷ்ணனின் ஆசையை,
உன் க்ருஷ்ணனுடைய ஆசீர்வாதத்தால்,
சத்தியமாக நிறைவேற்றுவாய் !


 

Read more...

Monday, November 23, 2009

எனக்கும் தா !

ராதேக்ருஷ்ணா


ப்ரஹ்லாதா உன்னைப் போல்
ஒரு மனம் தா !


பெற்ற தகப்பனே விஷம்
தந்தாலும், நாராயணனை
குறை சொல்லாத ப்ரஹ்லாதா !
உன் உயர்ந்த மனதை எனக்கும் தா !

சொந்தங்கள் எல்லோரும்
ஸ்ரீமன் நாராயணனை பொய் என்று
நீருபிக்க முயற்சித்த போதும்
பகவானிடம் மாறாத பக்தி வைத்த
ப்ரஹ்லாதா ! உன் மனதை எனக்கும் தா !

மலையிலிருந்து உருட்டிவிட்ட
போதிலும், தன்னைப் பற்றிக்
கவலைப்படாமல், அந்தர்யாமியான
பகவானுக்கு ஒரு கஷ்டம் வரக்கூடாதே,
என்று நினைத்த ப்ரஹ்லாதா !
அந்த மனதை எனக்கும் தா !

ஜபமாலையில்லாமல்,
பகவானின் உருவப்படம் இல்லாமல்,
அர்ச்சாவதார மூர்த்தி இல்லாமல்,
நாராயண நாமத்தை விடாமல் ஜபித்து
ஸ்ரீமன் நாராயணனையே வசப்படுத்தின
ப்ரஹ்லாதா !
அந்த  அற்புதமான மனதை எனக்கும் தா ! 

அழியக்கூடிய உடலுக்காக,
ஆடாத ஆட்டம் ஆடி, அழுது
புரளாமல், யானை மிதிக்கவந்தபோதும்,
அசராத வீரனே ப்ரஹ்லாதா !
அந்த அசராத மனதை எனக்கும் தா !

  கர்ப்பத்தில் கேட்ட, பகவானின்
திவ்ய சரிதங்களையும், குருவின்
உபதேசத்தையும் வாழ்நாள்
முழுவதும், ஒரு நிமிஷம் கூட
மறக்காத ப்ரஹ்லாதா !
அந்த திவ்யமான மனதை எனக்கும் தா !

 எல்லோரும் பக்தியிலிருந்து
மாற்ற முயற்சித்தபோதிலும்,
அவர்களையும் பக்தி செய்யவைத்து,
நாராயண நாமத்தை ஜபிக்கவைத்த
அசாத்தியமான ப்ரஹ்லாதா !
அந்த த்ருடமான மனதை எனக்கும் தா ! 
 
சுற்றியிருந்தவர்கள் எல்லோரும்
பரிகசித்து, மனதைப் புண்படுத்தி,
உடலையும் படாதபாடு படுத்தி,
அழிக்க முயற்சித்த சமயத்திலும்,
தளராத பக்த ப்ரஹ்லாதா !
அந்த தளராத மனதை எனக்கும் தா ! 

எங்கிருக்கிறான் நாராயணன் என்ற
தந்தைக்கு, எங்கும் உளன் கண்ணன்
என்று தைரியமாக, துளிகூட 
யோசனை செய்யாமல், நம்பிக்கையோடு
சொன்ன ப்ரஹ்லாதா !அந்த 
நம்பிக்கை மிகுந்த மனதை எனக்கும் தா !

எங்கும் உள்ள பகவான், இந்தத்
தூணிலும் இப்போது இருக்கின்றானென்று
தூணையும் காட்டி, அதில் யாருக்கும்
தெரியாத நரசிம்ம வேஷத்தில் இருந்தவனை
நாராயணன்தான் என்று கண்டுபிடித்த,
ஐந்து வயது ஞானியே ப்ரஹ்லாதா !
அந்த ஞானமனதை எனக்கும் தா !

எல்லோரும் நரசிம்மனைப் பார்த்து 
பயந்து நடுங்க, துளிகூட பயமில்லாமல்,
உக்ரமான அவரிடம் பக்கத்தில் சென்று,
நரசிம்மனை ஸ்தோத்திரம் செய்த,
சமத்துப் பிள்ளையே ப்ரஹ்லாதா !
அந்த தைரியமான மனதை எனக்கும் தா !

 அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகன் நரசிம்மனே வரம் கேள்
என்ற போதிலும், பக்தியை விலை
பேசாத, தந்தைக்கு நல்ல கதியைக்
கேட்ட சத்புத்ரனே ப்ரஹ்லாதா !அந்த
விரோதமில்லாத மனதை எனக்கும் தா !

ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு . . .

உலகத்தை குறை சொல்லி,
அடுத்தவர்கள் மேல் பழி சுமத்தி,
க்ருஷ்ணனை நிந்தித்துகொண்டு,
அழுது வடியும் முகமாக ஒரு 
வாழ்க்கையை நான் ஒரு நிமிஷம் கூட
வாழக்கூடாது . . .

எப்பொழுதும் அசராத,தளராத,
அடுத்தவரை குறை சொல்லாத,
யார்மேலும் பழி சொல்லாத,
பகவானின் கருணையை
நினைத்துக்கொண்டு, 
என்றும் சிரித்த முகத்தோடு,
எல்லா துன்பங்களையும் ஜெயித்து,
பகவானிஷ்டப்படி ஒரு வாழ்க்கை வாழ ப்ரஹ்லாதா !
உன்னிடம் பிச்சைக் கேட்கின்றேன் !

இந்த ஏழைக்கு உன்னுடைய
லக்ஷிய மனதை ப்ரசாதமாகத் தா !

உன்னைப்போல் என்னையும்பார்த்து
என் க்ருஷ்ணன் ஆனந்தப்பட
எனக்கு உன் மனதைத் தா !


 


Read more...

Sunday, November 22, 2009

ஆனந்தம் ! ஆனந்தம் ! ஆனந்தம் ! ராதேக்ருஷ்ணாஆனந்தம் கொட்டிக்கிடக்கிறது !

அனுபவி ! நன்றாக அனுபவி !

உன் ஆத்மா த்ருப்தியடையும் வரை
அனுபவி !


உலகில் ஆனந்தம் இல்லாத ஒரு
காரியம் கிடையவே கிடையாது !


நீ உன் மனோபாவத்தினால்தான்
க்ருஷ்ணன் கொட்டித்தரும்
ஆனந்தத்தை இழக்கிறாய் !


 காலையில் இருந்து
ஆரம்பித்து
இரவு தூங்கும்வரை
ஆனந்தம் தான் !


தூங்கி எழுந்திருப்பதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணா என்று சொல்லி
க்ருஷ்ணனோடு எழுந்தால். . . 


பல் தேய்ப்பதில் 
ஒரு ஆனந்தம்!
க்ருஷ்ணனோடு இடித்துக்கொண்டு
பல் தேய்ப்பதாக நினைத்தால் . . .


தினமும் குளிப்பதில் 
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனைக் கூப்பிட்டு
அவனைக் குளிப்பாட்டி,
அவனோடு குளித்தால் . . .


 ஆடை மாற்றுவதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனையே ஆடையாக,
 க்ருஷ்ணனே நமக்கு உடுத்தினால் . . .

அலங்காரம் செய்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு பிடித்தார்போல்
க்ருஷ்ணனே அலங்கரித்து விட்டால் . . .


சமையல் செய்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்குப் பிடித்தார்போல்,
க்ருஷ்ணனிஷ்டமாக சமைத்தால் . . . 


சாப்பிடுவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு ஊட்டிவிட்டு,
க்ருஷ்ண ப்ரசாதமாக,
அவனோடு பேசிக்கொண்டு 
பக்தர்களோடு சாப்பிட்டால். . .


படிக்கச் செல்வதில்
ஒரு ஆனந்தம்!
க்ருஷ்ணனிஷ்டப்படி,
பாடத்தை க்ருஷ்ணனுக்காகப்
படித்தால் . . .


சம்பாதிக்கச் செல்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு விதவிதமான
பூஜைகள்,நிவேதனம் செய்ய,
குடும்பத்தோடு சத்சங்கத்தை அனுபவிக்க, 
க்ருஷ்ணனுக்காக சம்பாதித்தால் . . .

  
 துணி துவைப்பதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனின் ஆடைகளை
தோய்ப்பதாக பாவித்தால் . . .


 பாத்திரம் தேய்ப்பதில்
ஒரு ஆனந்தம் !
யசோதை வீட்டில்
வேலைக்காரியாக நினைத்து
பாத்திரம் தேய்த்தால் . . .


 வீட்டைப் பெருக்குவதில்
ஒரு ஆனந்தம் !
உன் வீட்டை
க்ருஷ்ணனின் திருமாளிகையாக
நினைத்துப் பெருக்கினால் . . .


நடப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ண தரிசனத்திற்காகவே
நான் நடக்கின்றேன் என்ற
சிந்தனையோடு நடந்தால் . . .


பேசுவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு
அவன் ஆசைப்படும்படி,
அனைவருக்குள்ளும்
இருக்கும் அவனோடு பேசினால் . . .


மூச்சுவிடுவதில் ஒரு ஆனந்தம் !
மூச்சுக்காற்றாக,
க்ருஷ்ணனை உள்ளிழுத்து,
அகம்பாவத்தை வெளியில்விட்டால் . . .


மல,மூத்திரத்தை தள்ளுவதில்
ஒரு ஆனந்தம் !
நம் உடலில் உள்ள
அழுக்கை, க்ருஷ்ணன்
வெளியில் தள்ளுகின்றான்
என்று உணர்ந்தால் . . .


வரவேற்பதில் ஒரு ஆனந்தம் !
அனைவருக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கும்
க்ருஷ்ணனை ஸ்மரித்து,
விருந்தாளிகளை வரவேற்றால் . . .


காத்திருப்பதில் ஒரு ஆனந்தம் !
ஒவ்வொரு நிமிடமும்,
க்ருஷ்ணனோடும், ராதிகாவோடும்
ராசக்ரீடை ஆடுவதற்காக
காத்திருப்பதாக நேரத்தைக் கடத்தினால் . . .


யோசிப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனிஷ்டப்படி அவன்
அடுத்து நம்முடைய வாழ்க்கையில்
என்ன லீலையை, யாரைக் கொண்டு
செய்யப்போகிறான் என்பதை
யோசித்துப் பார்த்தால் . . .


திட்டமிடுவதில் ஒரு ஆனந்தம் !
எந்த நேரமும் க்ருஷ்ணன்
வந்துவிடுவான்; அவன் 
வந்து நமக்காக காத்திருக்காதபடி,
நம் காரியங்களை வேகமாக,
அழகாக செய்ய திட்டமிட்டால் . . .
உதவி செய்வதில் ஒரு ஆனந்தம் !
நம்மை க்ருஷ்ணன் தூண்டி,
அடுத்தவருக்கு உதவி செய்யும்
மனோபாவத்தைத் தந்து, உதவி
செய்கின்ற நிலைமையில் 
வைத்திருக்கிறான் என்று
திடமாக நம்பி உதவினால் . . .


அறிவுரை சொல்வதில்
ஒரு ஆனந்தம் !
உள்ளிருந்து க்ருஷ்ணன்தான்
பேசுகின்றான் என்பதை
புரிந்துகொண்டு, அவனிடத்தில்
பொறுப்பை ஒப்படைத்து,
அறிவுரை சொன்னால் . . .


 ப்ரச்னைகளில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணன்தான் ப்ரச்சனை
என்கிற மாறுவேஷத்தில்
வந்திருக்கின்றான் என்பதை
புரிந்துகொண்டால் . . .


களைத்துப் போவதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனோடு போட்டி
போட்டுக் கொண்டு,
காரியம் செய்ததால்
வந்த களைப்பு என்று 
எண்ணிக்கொண்டால் . . .


 விளையாடுவதில் ஒரு
ஆனந்தம் !
க்ருஷ்ணனையும்,
ராதிகாவையும்,
அஷ்டசகிகளையும்,
பக்தர்களையும்,
 நம்மோடு சேர்த்துக்கொண்டு 
விளையாடினால் . . . 
 
தாம்பத்தியத்தில் 
ஒரு ஆனந்தம் . . .
க்ருஷ்ணனே சக்தியாகவும்,
ராதிகாவே ஆனந்தமாகவும்,
நம் உடலில் உணர்ந்து,
சரணாகதி செய்து ஈடுபட்டால் . . .

 தூங்குவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனின் மடியில்
தலை வைத்துக் கொண்டு,
ராதிகா தாலாட்டுப் பாட,
பக்தர்களைக் கட்டிக்கொண்டு,
பாகவதத்தையே தலையணையாக,
ப்ருந்தாவனத்தையே படுக்கையாக,
பக்தியையே போர்வையாகக் கொண்டு
க்ருஷ்ணனுக்காக தூங்கினால் . . .

அர்த்த ராத்திரியில் தூக்கத்திலிருந்து
முழிப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனே நம்மை
எழுப்பிவிட்டு, எங்கோ சென்று
ஒளிந்துகொண்டு நம்மை
கவனிப்பதாகக் கருதினால் . . .

காலையில் எழுந்திருப்பதில்
ஒரு ஆனந்தம்...
ஆண்டாள் நம்மை
க்ருஷ்ணனோடு சேர்த்து
வைக்க, திருப்பாவைப் பாடி
எழுப்புவதாக எழுந்தால் . . . 
 
நான் சொன்னது
ஆனந்தக்கடலின் ஒரு துளிதான் . . .இன்னும் ஆனந்தம்
கொட்டிக்கிடக்கிறது . . .

உன்னுடைய எல்லாக் காரியங்களிலும்
இதுபோல் நினைத்து செய்து பார்...
உனக்கே வித்தியாசம் தெரியும்  . . . 
 

ஆனந்தம்...ஆனந்தம்...ஆனந்தம்
 இதைத் தவிர மனித
வாழ்க்கையில் வேறு
ஒன்றுமே இல்லை ! ! !

சத்தியம் செய்து சொல்கிறேன் !

க்ருஷ்ணன் ஆனந்தசாகரன் . . .
அவன் எப்படி உனக்குக்
கஷ்டத்தைக் கொடுப்பான் . . ?

நீ தான் அதை வாங்கிக்காமல்
எதையோ ஆனந்தம் என்று
எண்ணி ஏமாந்துகொண்டிருக்கிறாய் . . .

இனிமேல் ஏமாறுவாயா ?
இல்லை
ஆனந்தத்தில் திளைப்பாயா ?


Read more...

Saturday, November 21, 2009

கலங்காதே !ராதேக்ருஷ்ணா


கலங்காதே !


எதற்கும் கலங்காதே !


உன்னைப்பற்றி எத்தனை
அவதூறு சொன்னாலும்
கலங்காதே !

உன் மேல் வார்த்தைகளை
நெருப்பாய் உமிழ்ந்தாலும்
கலங்காதே !

உன் மேல் அபாண்டமாய்
பழி சுமத்தினாலும்
கலங்காதே !

உன்னை புழுவைவிட
கேவலமாக நடத்தினாலும்
கலங்காதே !

உன்னை மனிதராய்
நடத்தாவிட்டாலும்
கலங்காதே !

உன்னை எவ்வளவு பாடாய் 
படுத்தினாலும் 
கலங்காதே !

நீ செய்யாத பாவங்களை நீ

செய்தாய் என்று 
பொய்சத்தியம் செய்தாலும் 
கலங்காதே !

உன்னை பலரோடு தொடர்பு 

செய்து பேசினாலும் 
கலங்காதே !

உன்னிடம் காரியங்களை சாதித்துக்கொண்டு உன்னை எச்சில் இலையாக 

வீசி எறிந்தாலும்
கலங்காதே !


உன்னை நம்பவைத்து ஏமாற்றி 

கழுத்தை அறுத்தாலும் 
கலங்காதே ! 


உன்னை அழிப்பதற்காக உன்னிடம் 
நன்றாகப் பழகுபவர்களே உனக்குக் 
குழி பறித்தாலும் 
கலங்காதே !

உன்னைப் பற்றி எத்தனை

மோசமாகப் பேசினாலும் 
கலங்காதே !

உன் வளர்ச்சியைத் தடுக்க 

எத்தனை சூழ்ச்சி செய்தாலும் 
கலங்காதே !

உன்னை அழிக்க 

எத்தனை விதமான
முயற்சிகள் நடந்தாலும் 
கலங்காதே !

உன் மேல் காரி 

உமிழ்ந்தாலும் 
கலங்காதே !

உன்னை வம்புச்சண்டைக்கு இழுத்து

உன் மன நிம்மதியை 
குலைக்க முயற்சித்தாலும் 
கலங்காதே !


உன்னை பலபேர் முன் எத்தனை 
கீழ்த்தரமான வார்த்தைகளால்
திட்டினாலும் 
கலங்காதே !

உன்னை வேஷதாரி 

என்று ஊர் முன்னே 
கேவலப்படுத்தினாலும் 
கலங்காதே !

எதையும் நீ மனதில் ஏற்றிக்கொண்டால் தான் உனக்கு...
ஏற்றிகொள்ளாதவரை உனக்குத் துளியும் 
சம்மந்தம் இல்லை

 

எல்லாவற்றையும் க்ருஷ்ணனுக்கு 
அர்ப்பணம் செய்துவிடு!

 

உன் க்ருஷ்ணன் உன்னை அறிவான்!
உன் க்ருஷ்ணன் உன் மனதை அறிவான்!
உன் க்ருஷ்ணன் உனக்கு சாக்ஷியாய் இருக்கின்றான்!

 

அதனால் ...
எது வந்தாலும் கலங்காதே !
எது நடந்தாலும் கலங்காதே !
எப்படி நடந்தாலும் கலங்காதே !

 

நீ வீழ மாட்டாய்!
உன் சத்தியம் நிச்சயம் வெல்லும்!
அதுவரை நிதானமாக, த்ருடமாக, தைரியமாக நாமஜபம் செய்து கொண்டேயிரு!

 Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP