ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, November 1, 2009

வேறு என்ன வேண்டும் ?ராதேக்ருஷ்ணா

உன்னை கவனித்துக் கொள்ள
க்ருஷ்ணன் இருக்கிறான் !
 உன்னிடம் அன்பு செலுத்த
ராதிகா இருக்கிறாள் !உனக்கு சரணாகதியை உபதேசிக்க
ஸ்வாமி ராமானுஜர் இருக்கிறார் !
உன்னோடு நாம ஜபம் செய்ய
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர் இருக்கிறார் !
உனக்கு தைரியம் சொல்ல
ப்ரஹ்லாதன் இருக்கிறான் !
உனக்கு தவத்தைக் கற்றுத்தர
துருவன் இருக்கிறான் !
உனக்கு பாகவத ரஹஸ்யம் சொல்ல
சுகப்ரம்மம் இருக்கிறார் !
உனக்கு ப்ரேமையை சொல்லித்தர
கோபிகைகள் இருக்கிறார்கள் !
உனக்குத் துன்பங்களில் தோள் கொடுக்க
 ஆதிசேஷன் இருக்கின்றார் !
உனக்கு பகவத்கீதையைச் சொல்ல
சஞ்சயன் இருக்கின்றார் !
உனக்கு கர்ம ரஹஸ்யம் சொல்ல
ஜனகர் இருக்கின்றார் ! 
உனக்கு குரு கைங்கர்யம் சொல்லித்தர
வடுகநம்பி இருக்கின்றார் !
உனக்கு பொறுமையை சொல்லித்தர
ஏகநாதர் இருக்கின்றார் ! 
 உனக்கு சகா பாவத்தைத் தர
கோவிந்ததாஸ் இருக்கின்றார் !
உனக்கு வாத்ஸல்ய பாவத்தைத் தர
பெரியாழ்வார் இருக்கின்றார் !
உனக்கு தாஸ்ய பாவத்தைத் தர
 ஆஞ்சனேயர் இருக்கின்றார் !
 உனக்கு திவ்யப்ரபந்தங்கள் சொல்லித்தர
ஸ்வாமி நம்மாழ்வார் இருக்கின்றார் !
உனக்கு விரஹ அழுகையை புரியவைக்க
மீராமாதா இருக்கின்றாள் !
உன்னை ஆனந்தத்தில் சிரிக்கவைக்க
 க்ருஷ்ணலீலா இருக்கிறது !
உனக்கு வைராக்யத்தை சொல்லித் தர
எம்பார் கோவிந்தர் இருக்கிறார் !
உனக்கு சகோதரனாக 
ஸ்வாமி இராகவேந்திரர் இருக்கிறார் !
உனக்கு சகோதரியாக
சக்குபாய் இருக்கிறாள் ! 
 உனக்கு வழித்துணையாக
பகவன் நாம ஜபம் இருக்கின்றது !
உனக்கு போக்கிடமாக
ப்ருந்தாவனம் இருக்கின்றது !
 நல்ல பொழுதாக செல்வதற்கு
சத்சங்கம் இருக்கின்றது !
உன்னிடம் சொந்தம் கொள்ள
பக்தர்கள் இருக்கின்றனர் ! 
 உன்னை ஒழுங்காக வழி நடத்த
சத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா
கூடவே இருக்கின்றார் !

வேறு என்ன வேண்டும் ! 
  சந்தோஷமாக வாழ்வதற்கு இதைவிட
வேறு என்ன வேண்டும் ! 
 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP