ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, November 2, 2009

தர வேண்டியது - உன்னை ! ! !ராதேக்ருஷ்ணாநம்ப வேண்டியது - குருவை
கொடுக்க வேண்டியது - மனதை 
ரசிக்க வேண்டியது - சத் சங்கத்தை
சொல்ல வேண்டியது- நாம ஜபத்தை
செய்ய வேண்டியது - பக்தியை


கேட்க வேண்டியது - க்ருஷ்ண லீலாவை
துடிக்க வேண்டியது - விரஹத்தில் 
அழ வேண்டியது - ரஹஸ்யத்தில்
கதற வேண்டியது - க்ருஷ்ணனைப் பார்க்க 
மறக்க வேண்டியது - மனிதர்களை 
செல்ல வேண்டியது - ப்ருந்தாவனத்திற்கு
குளிக்க வேண்டியது - யமுனையில்
களைய வேண்டியது - ப்ராரப்தத்தை 
உடுத்த வேண்டியது - வைராக்யத்தை 
பாட வேண்டியது - பஜனையை
பிடிக்க வேண்டியது - க்ருஷ்ணனை
அனுபவிக்க வேண்டியது - ராதிகா அன்பை
ப்ரார்த்திக்க வேண்டியது - ராதிகாவிடத்தில்
தங்க வேண்டியது - சேவா குஞ்சத்தில் 
பார்க்க வேண்டியது - ராதேக்ருஷ்ண சங்கமத்தை
 விடவேண்டியது - வெட்கத்தை
எழுத வேண்டியது - க்ருஷ்ணனுக்குக் காதலை
தர வேண்டியது - உன்னை
ஆட வேண்டியது - ராச க்ரீடையை
தொட வேண்டியது - க்ருஷ்ணனின் திருமேனியை
சிலிர்க்க வேண்டியது - க்ருஷ்ண ஸ்பர்சத்தில் 
குடிக்க வேண்டியது - க்ருஷ்ண அதராம்ருதத்தை 
முகர வேண்டியது - க்ருஷ்ண வாசனையை
ருசிக்க வேண்டியது - க்ருஷ்ணன் திருவடியை
அபிஷேகம் செய்யவேண்டியது - கண்ணீரால்
எடுக்க வேண்டியது - ப்ரேம சாரத்தை
வைக்க வேண்டியது - இதயத்தில்
   

ஓட வேண்டியது - பக்த கூட்டத்திற்கு
தொலைக்க வேண்டியது - பந்தங்களை 
சூட வேண்டியது - பக்தர்களின் சரண தூளியை
விளையாட வேண்டியது - பக்தர்களோடு
மேய்க்க வேண்டியது - இந்திரியங்களை
அசை போட வேண்டியது - க்ருஷ்ண ரூபத்தை 
சாப்பிட வேண்டியது - பக்தர்கள் எச்சிலை
குதிக்க வேண்டியது - பரமானந்தத்தில்
இளைப்பாற வேண்டியது - கோவர்தன மலையில்


சுற்ற வேண்டியது - க்ருஷ்ணனோடு பர்சானாவை
டிக்க வேண்டியது - அஷ்டபதியை 
புலம்ப வேண்டியது - ராதா திருநாமத்தை
உருக வேண்டியது - ராதா ஸுதா நிதியில் 
ஏங்க வேண்டியது - ராதிகா அனுக்ரஹத்திற்காக 
வாங்க வேண்டியது - ப்ரேம ரஹஸ்யத்தை
கரைய வேண்டியது - ராதிகாவில்

இதைச் சீக்கிரம் செய் !


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP