ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, November 3, 2009

உன்னுள் க்ருஷ்ணனை ! ! !ராதேக்ருஷ்ணா


நுழைய வேண்டியது - கோகுலத்தில்
கத்த வேண்டியது - குயில்களுடன்
தாவ வேண்டியது - குரங்குகளுடன்
கட்டிக்கொள்ள வேண்டியது - கன்றுக் குட்டிகளை
உருள வேண்டியது - கோமியத்தில்

துரத்த வேண்டியது - மயில்களை
சேகரிக்க வேண்டியது - மயில் பீலியை
சூட்ட வேண்டியது - அழகனின் தலையில்

பறிக்க வேண்டியது - அச்சுதனுக்கு மலர்களை
தொடுக்க வேண்டியது - செல்லத்துக்கு மாலையாக
சாற்ற வேண்டியது - சுந்தரனின் தோளில் 

தவழ வேண்டியது - நந்தகோபர் வீட்டில்
 ஆட்ட வேண்டியது - மடியை
தாலாட்ட வேண்டியது - யசோதையாக
பாலூட்ட வேண்டியது - ஹரிராயரைப் போல்
 தூக்க வேண்டியது - உள்ளம் கவர் கள்ளனை
வைத்துக் கொள்ள வேண்டியது - இடுப்பில்
கொஞ்ச வேண்டியது - ஆயர் கொழுந்தை


கிடக்க வேண்டியது - மாணிக்கத் தொட்டிலாக
தாங்க வேண்டியது - தாமோதரனை
கிள்ள வேண்டியது - கண்ணனின் கன்னத்தை
 
வளர்க்க வேண்டியது - நந்தகோபரைப் போல் 
எடுக்க வேண்டியது - கூர் வேல்
விரட்ட வேண்டியது - அசுர குணங்களை

ஆக வேண்டியது - கொழுத்த கோபியாக
பெருக்க வேண்டியது - கண்ணன் முற்றத்தை 
துவைக்க வேண்டியது - பீதாம்பரத்தை
தேய்க்க வேண்டியது - இடையனுக்கு எண்ணையை
வருட வேண்டியது - குஞ்சலத்தின் திருவடியை
வேடிக்கை பார்க்க வேண்டியது - கருப்பனின் குளியலை
பருக வேண்டியது - பட்டுக்கோமளத்தின் அழகை 
திருட வேண்டியது - திருடனின் கோமணத்தை
தடவ வேண்டியது - சுட்டிப்பையனின் முத்தத்தை 
முத்தமிட வேண்டியது - மணிவண்ணனின் பின் பாகத்தை
கடிக்க வேண்டியது - அன்பனின் மூக்கை
பிடுங்க வேண்டியது - ஆயன் சாப்பிடுவதை

இழக்க வேண்டியது - அக்கார அடிசிலை 
உளற வேண்டியது - மாயக்கூத்தனின் திருட்டை

கவனிக்க வேண்டியது - மண்ணைத் தின்பதை
கோள் சொல்ல வேண்டியது - பலராமனாக அடிக்க வேண்டியது - அகம்பாவத்தை
உடைக்க வேண்டியது - மமகாரத்தை
எடுக்க வேண்டியது - க்ருஷ்ணனோடு வெண்ணையை
போட வேண்டியது - கோபனாக சண்டையை
ஒழிந்து கொள்ள வேண்டியது - கோபிகைகளின் வீட்டில்
பரிசளிக்க வேண்டியது - புல்லாங்குழலை
மயங்க வேண்டியது - வேணு கானத்தில்
யாசிக்க வேண்டியது - குட்டனிடத்தில் முத்தத்தை
இருக்க வேண்டியது - மாறாத உரலாக

அகப்பட வேண்டியது - குருவிடம் கயிறாக
கட்ட வேண்டியது - மனதோடு குண்டனை 
காத்திருக்க வேண்டியது - அச்சுதனோடு உருள
  
விற்க வேண்டியது - ஆசைகளை
ஏந்த வேண்டியது - மாயனிடம் கைகளை
பெற வேண்டியது - அவன் அன்போடு தருவதை 

 மாற வேண்டியது - ததிபாண்டனின் பானையாக
பதுக்க வேண்டியது - உன்னுள் க்ருஷ்ணனை

 கோகுலத்திற்கு போகிறேன் !
வருகிறாயா ? ! ?


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP