ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, November 13, 2009

புரிந்து கொள் !

ராதேக்ருஷ்ணா

 ஒவ்வொரு நாளும்
அற்புதமானதே !

நேற்று மீண்டும் வராது !
ஆனால் அது சொன்ன பாடம் ஏராளம் !
புரிந்து கொள் !

இன்று புதிதாக பிறந்திருக்கிறது !
இது உன்னைப் பக்குவப்படுத்தப்போகிறது !
புரிந்து கொள் !

நாளை நிச்சயமாய் நம் கையில் இல்லை !
அதைப் பற்றி கற்பனைதான் உள்ளது !
புரிந்து கொள் !

ஒவ்வொரு நாளும் நீ புதிதாய் இருக்கிறாய் !
நேற்று இருந்த நீ இன்று இல்லை !
புரிந்து கொள் !

இன்று எல்லோரும் புதியவர்கள்தான் !
அதனால் அவர்களிடமும் மாற்றமுண்டு !
புரிந்து கொள் !

இன்றைய நிகழ்ச்சிகள் புதியதுதான் !
புதிய அநுபவங்கள் பல உண்டு !
புரிந்து கொள் !

இன்றைய வாழ்க்கை புதியதுதான் !
அதன் ரகசியங்களும் விசேஷமானது !
புரிந்து கொள் !

இன்றைய தேவைகள் புதியதுதான்!
பூர்த்தியாகும் முறைகளும் வித்தியாசமானது ! 
புரிந்து கொள் ! 

 இன்றைய ப்ரச்சனைகள் புதியதுதான் !
அதற்கு தீர்வும் ஆச்சரியமானது !
புரிந்து கொள் !

இன்றைய பசியும்,ஆகாரமும் வினோதமானது !
அதன் அனுபவமும் எதிர்பாராதது !
புரிந்து கொள் !

இன்றைய உன் கடமைகளும் புதியது !
அதை நீ செய்யப்போகும் முறையும் அழகுதான் !
புரிந்து கொள் !

இன்று நீ பேசப்போகும் வார்த்தைகள் புதியது !
அதைச் சொல்லப்போகும் முறையும் புதியதே !
புரிந்து கொள் !

இன்று உன் சிந்தனையும் புதியதுதான் !
அதில் நீ புரிந்துகொள்ளப் போவதும் புதியவழிதான் !
 புரிந்து கொள் ! 

 இன்று உன் ஆரோக்கியம் புதியதுதான் !
வியாதியில்லாத,பலவீனமில்லாத புதிய பலம் !
புரிந்து கொள் !

இன்றைய பகல் பொழுது புதியதுதான் !
அதன் வெளிச்சமும்,காற்றும்,நிகழ்வுகளும் புதியதே !
புரிந்து கொள் !

இன்றைய இரவும் மிகப் புதியதே !
அதில் உன் தூக்கமும், சமாதானமும் இதுவரை
அனுபவிக்காததே !
புரிந்து கொள் !

இன்றைய பக்தியும்,நாமஜபமும்,த்யானமும் புதியதே !
இதுவரை ருசிக்காத,தெரியாத,நினைக்காத மாற்றங்களே கிடைக்கப்போகிறது !
புரிந்து கொள் !

 இன்றைய நாள் மீண்டும் வராது !
புரிந்து கொள் ! 

அதனால் இன்றே ஒழுங்காக வாழ்ந்து விடு !
புரிந்து கொள் ! 

இவை எல்லாவற்றிலும்
உன்
க்ருஷ்ணன்
உன்னோடுதான் இருக்கின்றான் !
புரிந்து கொள் !

அதனால் என்றுமே ஆனந்தம்தான் !
புரிந்து கொள் ! 

இன்றிலிருந்தாவது எல்லாவற்றையும்
புதியததாகப் பார்க்க பழகிக்கொள் !

உன் வாழ்க்கையையும்,
க்ருஷ்ண அனுக்ரஹத்தையும்,
குரு க்ருபையையும்
இனி
சரியாக மட்டும் புரிந்து கொள் !


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP