ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, November 18, 2009

பிரச்சனை நீ தான் ! ! !
ராதேக்ருஷ்ணா


 பிரச்சனைகளைக் கண்டு
நீ ஓடும்போதுதான்
அது உன்னை துரத்துகின்றது !

பிரச்சனைகளைப் பார்த்து
நீ பயப்படும்போதுதான்
அது உன்னை பயமுறுத்துகிறது !

பிரச்சனைகளிலிருந்து நீ
தப்பிக்க நினைக்கும்போதுதான்
அது உன்னை மாட்டிவைக்கிறது !

பிரச்சனைகளில் நீ 
அழும்போதுதான்
அது உன்னை அழவைக்கின்றது !

பிரச்சனைகளைப் பற்றி நினைத்து
நீ நொந்துபோகும்போதுதான்
அது உன்னை நோகடிக்கின்றது !

பிரச்சனைகளில் உன் புத்திசாலித்தனத்தைக்
காட்டும்போதுதான் , அது உன்
புத்தியை கலங்கடிக்கிறது !

பிரச்சனைகளை சமாளிக்க எனக்கு
வழி தெரியும் என்று நீ நினைக்கும்போதுதான்
ஒரு வழியும் தெரியாமல் போகிறது !
 
பிரச்சனைகளைப் பற்றி நீ
அடுத்தவரிடம் புலம்பும்போதுதான்
அது மிகவும் பெரிதாகிறது !

பிரச்சனைகள் உனக்கு மட்டும்தான்
என்று நீ நினைப்பதனால்தான்
பிரச்சனைகள் உன்னை விட்டுப் போவதில்லை ! 

பிரச்சனைகளுக்கு தீர்வே கிடையாது
என்று நீ ஒதுங்கும்போதுதான்
அது உன்னை கோழையாக்குகிறது ! 

பிரச்சனைகளை உன் பலத்தையும்,
அனுபவத்தையும் நம்பி எதிர்க்கும்போதுதான்
அது மிகவும் மோசமாகிறது !

பிரச்சனைகளுக்கு இதுமட்டும்தான் தீர்வு
என்று நீ தீர்மானிக்கும்போதுதான்
சரியான தீர்வு கிடைக்காமல் போகிறது ! 

பிரச்சனைகளை வைத்துக்கொண்டு,
நீ அடுத்தவரின் அனுதாபத்திற்காக
முயற்சிக்கும்போதுதான்
அது மிகவும் சிக்கலாகிறது !

அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை
பார்த்து நீ சந்தோஷப்படுவதால்தான்
உன் பிரச்சனை உன்னைப் 
பாடாய் படுத்துகிறது ! 

உலகில் யாருக்கு பிரச்சனையில்லை !

சிறு வயதிலும் உனக்கு
நிறைய பிரச்சனைகள் இருந்தது !
ஆனால் அப்பொழுது நீ
பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை ! 

 அதனால் பிரச்சனைகளினால்
உனக்குப் பிரச்சனையில்லை . . .

பிரச்சனை நீ தான்...

பிரச்சனை உன் மனதுதான் . . . 

பிரச்சனை உன் அணுகுமுறை தான் . . .

கொஞ்சம் அணுகுமுறையை
மாற்றித்தான் பார் . . .

பிரச்சனைகளை நீ நாமஜபத்தோடு
எதிர்கொள்ளும்போது மட்டுமே
அது உனக்கு அடிபணிகின்றது !
 
பிரச்சனைகளை நீ 
பகவான் க்ருஷ்ணனிடத்தில்
சொல்லும்போது மட்டுமே
அதற்கு தீர்வு கிடைக்கிறது !

 க்ருஷ்ணனை நம்பி முயற்சி
செய்தால் ஒரு நாளும்
வீண் போகவே போகாது . . .

க்ருஷ்ணனை நம்பினவர்களும்
வீண்போனதில்லை . . .

நீயும் வாழ்ந்து காட்டுவாய் . . .
கவலைப்படாதே ! கலங்காதே !
நிதானமாக யோசித்துப் பார் . . .


மனிதஜாதியில் பிறந்துவிட்டாய் . . .
கொஞ்சம் புத்தியை உபயோகப்படுத்து . . .  

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP