ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, December 1, 2009

உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனுக்குத் தெரியும் !
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !  

உனக்கு என்ன பிடிக்கும். . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு என்ன பிடிக்காது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன்னுடைய பலம் என்ன . . .
 உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் பலவீனம் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன்னுடைய திறமை என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன்னுடைய முட்டாள்தனம் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் வலி என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் மனதின் காயங்கள் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் தேவை என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எது தேவையில்லை . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

  உன்னுடைய பூர்வஜன்மா என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் எதிர்காலம் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் பிரச்சனைகள் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் பசி எவ்வளவு. . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எது ஆகாரம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் நண்பர்கள் யார் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு விரோதிகள் யார் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் கேள்விகள் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் கேள்விகளின் பதில் என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 
 
உன் தலையெழுத்து என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் ஆயுள் எவ்வளவு . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் மனம் எப்படி. . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எது ஆனந்தம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

  உனக்கு எது சமாதானம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ வந்த காரணம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன்னுடைய கடமை என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் வியாதி என்ன  . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு என்ன மருந்து . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எந்தப் படிப்பு வரும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 

உனக்கு எந்த வேலை நல்லது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 
   
உன்னுடைய பாபங்கள் என்ன என்ன. . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் புண்ணியங்கள் எவ்வளவு . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு யாரைப் பிடிக்கும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு யாரைப் பிடிக்காது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ என்று ப்ரயாணம் செய்யலாம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ எப்படி ப்ரயாணம் செய்யலாம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 
 
நீ யாரோடு பழகலாம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ எப்படிப் பழகலாம் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எது அழகு . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு எது சிறந்தது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ எந்த சமயத்தில் யாரோடு
எப்படி இருக்கவேண்டும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 
 
 எந்த சமயத்தில் நீ யார் வீட்டில்
இருக்கவேண்டும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

எந்த சமயத்தில் உன் வீட்டில்
யார் யார் இருக்கவேண்டும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ எந்த இடத்தில் யாரோடு,
என்ன வேலை செய்யவேண்டும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு யார் உதவுவார்கள் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ யாருக்கு உதவவேண்டும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 

உன்னிடம் யார் நடிக்கிறார்கள் . . .
 உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன்னை யார் ஏமாற்றுகின்றார்கள் . . .
 உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !


உன்னை எப்படி அவர்களிடமிருந்து
மீட்கவேண்டும் . . .
 உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ எந்த சமயத்தில் எங்கிருந்தால்,
யாரோடிருந்தால் உனக்கு நல்லது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

இன்று உன் வாழ்க்கையின்
திருப்புமுனை என்ன . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

இன்று யாரைப் புரிந்துகொள்ளப்
போகிறாய் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

இன்று என்ன புதியதாகக்
கற்றுக் கொள்ளப் போகிறாய் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

இன்று இந்த ஆனந்தவேதத்தை
நீ படிக்கப்போவது . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் ! 
 

உன்னைப்பற்றி,
உன் தேவையப் பற்றி,
உன் வாழ்க்கையைப் பற்றி, 
உன்னைவிட
மிக நன்றாக
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உனக்கு இது புரிந்ததா . . .

அதனால் இனி உன்
வாழ்க்கையைப் பற்றி
யோசிப்பதை விடு . . .
உன் எதிர்காலத்தைப் பற்றி
கவலைப்படுவதை விடு . . .
 உன் தேவைகளைப்
பூர்த்தி செய்துகொள்ள
திட்டமிடுவதை விடு . . .
உன் விரோதிகளிடமிருந்து
உன்னைக் காப்பாற்றிக் கொள்ள
சிந்திப்பதை விடு . . .
  
 உனக்கு மிகச்சிறந்ததையே,
மிக அற்புதமானதையே,
மிக விசேஷமானதையே
உன் க்ருஷ்ணன்
உனக்காக சேகரித்து வைத்திருக்கின்றான் . . .
தகுந்த காலங்களில் தருகின்றான் . . .

தாயாரின் வயிற்றில் இருந்தபோது
உனக்கு க்ருஷ்ணனே ஆகாரம்
தந்தான் . . .

நீ பிறந்தவுடன் தாயாரின் மார்பிலிருந்து
தாய்ப்பாலைச் சுரக்கவைத்து
உன் க்ருஷ்ணனே உனக்குத் தந்தான் . . . 

உனக்கு க்ருஷ்ணனே உன் தேவைக்குத்
தகுந்தாற்போல் எல்லாவற்றையும்
இன்றுவரை தந்திருக்கின்றான் . . .

உனக்கு தேவையானதை
நீயே தள்ளிவிட்ட சமயத்திலும் 
உன்னிடத்தில் திணித்திருக்கின்றான் . . .

உனக்கு தேவையில்லாததை
அடம் பிடித்து நீ கேட்டபோதும்
தராமல் உன்னைக் காப்பாற்றியிருக்கின்றான் . . .

அதனால் க்ருஷ்ணனுக்குத் தெரியும் . . .
உன் க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

நீ அவன் தருவதை ஏற்றுக்கொண்டு,
அவனுக்குத் தெரியும் என்பதை புரிந்துகொண்டு,
அவன் உனக்குத் தருவது, உனக்கென்று,
அவனே மிகுந்த அக்கறையோடு, 
விசேஷமாக செய்திருக்கின்றான் என்பதை
தயவுசெய்து நன்றாகப் புரிந்துகொள் . . . 
 
அதனால் இனி எது நடந்தாலும்,
எப்படி நடந்தாலும்,
"என் க்ருஷ்ணனுக்குத் தெரியும்"
என்று தைரியமாக இரு . . .  
 
இனி க்ருஷ்ணன் திருவடிகளில்
சரணாகதி செய்து விடு . . .

மற்றதை அவன் பார்த்துக்கொள்வான் . . .

நீ வருந்தாதே . . . சுகித்திரு . . .

இதுவே உன் க்ருஷ்ணனுக்கு
நீ செய்யும் மரியாதை . . .

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP