ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, December 3, 2009

என்ன தரப் போகிறாய் !
ராதேக்ருஷ்ணா


யசோதை க்ருஷ்ணனுக்குத்
தாய்ப்பால் கொடுத்தாள் !

நந்தகோபர் க்ருஷ்ணனுக்கு
மாடுமேய்க்கக் கோல் தந்தார் !

கோப குழந்தைகள் க்ருஷ்ணனுக்கு
தாங்கள் சாப்பிடுவதைத் தந்தார்கள் !

கோபிகைகள் க்ருஷ்ணனுக்குத்
தங்கள் வாழ்க்கையையே தந்தார்கள் !

பழக்காரி க்ருஷ்ணனுக்குப்
பழங்களைத் தந்தாள் !

ததிபாண்டன் க்ருஷ்ணன்
ஒளிந்துகொள்ள தன் பானையைத் தந்தான் !

ப்ராம்மண பத்னிகள் க்ருஷ்ணனுக்கு
விதவிதமான ஆகாரங்களைத் தந்தனர் !

குப்ஜை க்ருஷ்ணனுக்கு
அரைத்த சந்தனத்தைத் தந்தாள் !

மாலாகாரர் க்ருஷ்ணனுக்கு
வாசமுள்ள மாலைகளைத் தந்தார் ! 

விதுரர் க்ருஷ்ணனுக்குக்
கூழைத் தந்தார் !

விதுரபத்னி க்ருஷ்ணனுக்கு
வாழைப்பழத் தோலைத் தந்தாள் !

குசேலர் த்வாரகாநாதனுக்கு
அவல் பொரியைத் தந்தார் !

த்ரௌபதி க்ருஷ்ணனுக்கு
பாத்திரத்தில் மீதமிருந்ததைத் தந்தாள் !

பீஷ்மகர் க்ருஷ்ணனுக்கு
தன் பெண் ருக்மிணியைத் தந்தார் ! 

குரூரம்மை குருவாயூரப்பனுக்குத் தன்
புடவையைக் கிழித்துக் கோமணம் தந்தாள் !

சந்த் துகாராம் பாண்டுரங்கனுக்கு
சப்பாத்தியையும்,கறிகாயையும் தந்தார் !

 பில்வமங்களர் அனந்தபத்மநாபனுக்கு
உப்புமாங்காயைத் தந்தார் !

குரவநம்பி திருமலையப்பனுக்கு
மண்பூவைத் தந்தார் !

த்வாரகா ராமதாஸர் த்வாரகாதீசனுக்கு
தன் மனைவியின் மாங்கல்யத்தைத் தந்தார் !

கோவிந்ததாஸர் ஸ்ரீநாத்ஜீக்கு
விளையாட கோலிகுண்டுகளைத் தந்தார் !

 ராதிகா க்ருஷ்ணனுக்குத்
தன்னையே தந்தாள் !

இன்னும் பலபேர் பகவானுக்கு
எதை எதையோ கொடுத்தார்கள் !

அதையெல்லாம் பட்டியலிட்டுச்
சொன்னால் பல கோடி ஜன்மா
வேண்டும் . . . 


சரி இதெல்லாம் இருக்கட்டும் . . .

உன் க்ருஷ்ணனுக்கு 
இதுவரை
நீ
என்ன தந்தாய் ? ! ?

இனி என்ன தரப்போகிறாய் ! ? !

இந்த வாழ்க்கை முழுவதும்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த வருஷம் முழுவதும்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த மாதம் முழுவதும்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த வாரம் முழுவதும்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த நாள் முழுவதும்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த நேரத்தில்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த நிமிஷத்தில்
என்ன தரப் போகிறாய் . . .
இந்த நொடிப்பொழுதில்
என்ன தரப் போகிறாய் . . .

நீ என்ன தருகிறாய் என்பதை
உன் க்ருஷ்ணன்
நிச்சயம் எனக்குச் சொல்வான் . . .


 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP