ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 டிசம்பர், 2009

நீயாச்சு ! உன் க்ருஷ்ணனாச்சு !




ராதேக்ருஷ்ணா



கோபமா...
உன் க்ருஷ்ணனோடு 
சண்டை போடு !

சந்தோஷமா...
உன் க்ருஷ்ணனோடு
கொண்டாடு !

அழுகையா...
உன் க்ருஷ்ணனிடம்
சொல்லி அழு !

குழப்பமா...
உன் க்ருஷ்ணனிடம்
புலம்பி வழி கேள் !

பிரச்சனையா...
உன் க்ருஷ்ணனிடம்
யோசனை கேள் !

வியாதியா...
உன் க்ருஷ்ணனிடம்
ப்ரார்த்தனை செய் !

அவமரியாதையா...
உன் க்ருஷ்ணனின்
திருவடிகளில் சமர்ப்பித்துவிடு !


தோல்வியா...
உன் க்ருஷ்ணனிடம்
வெற்றிக்கான ரகசியத்தைத் தேடு !

வெற்றியா...
உன் க்ருஷ்ணனைக்
கொண்டாடு...


சந்தேகமா...
உன் க்ருஷ்ணனிடத்தில்
உன் மனதிலிருப்பதைக் கொட்டிவிடு !

நம்பிக்கையா...
உன் க்ருஷ்ணனின்
திருவடிகளில் விழு !



ரகசியமா...
உன் க்ருஷ்ணனிடத்தில்
பகிர்ந்துகொள் !


கலக்கமா...
உன் க்ருஷ்ணனின்
கைகளைப் பிடித்துக்கொள் !


பயமா...
உன் க்ருஷ்ணனிடம்
தைரியமாகச் சொல் !

வெறுப்பா...
உன் க்ருஷ்ணனை
உன்னை சமாதானப்படுத்தச் சொல் !

பொறாமையா...
உன் க்ருஷ்ணனிடம்
கொடுத்துவிடு !

சோம்பேறித்தனமா...
உன் க்ருஷ்ணனுக்காக
விட்டுவிடு !

கடமையா...
உன் க்ருஷ்ணனுக்காக
செய்துவிடு !

சிந்தனையா...
உன் க்ருஷ்ணனை
தியானம் செய் !

திட்டமா...
உன் க்ருஷ்ணனை
திட்டம் தீட்டச் சொல் !

காமமா...
உன் க்ருஷ்ணனுக்கு
நிவேதனம் செய்துவிடு !

தற்பெருமையா...
உன் க்ருஷ்ணனை
உன் தலையில் கொட்டச் சொல் !

அகம்பாவமா...
உன் க்ருஷ்ணனை
உன்னைத் திட்டச் சொல் !

பேராசையா...
உன் க்ருஷ்ணனிடம்
அதை வதம் செய்யக் கெஞ்சு !



நிம்மதியா...
உன் க்ருஷ்ணனுக்கு
நன்றி சொல் !


உன் மனதின்
நிலைமை
எதுவானாலும்
அதற்கு ஒரே வடிகால்
உன் க்ருஷ்ணன் மட்டுமே !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதை
உள்ளபடி அறிவார் !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதில்
நிரந்தரமாக இருக்க முடியும் !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதிற்கு
தீனி போட முடியும் !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதை
அடக்க முடியும் !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதை
கொண்டாடுவார்கள் !


உன் க்ருஷ்ணனைத் தவிர
யார் உன் மனதிற்கு
ஆறுதல் தரமுடியும் !


நீயாச்சு ! உன் க்ருஷ்ணனாச்சு !

உன் பாடு...
உன் க்ருஷ்ணன் பாடு...

இதில் யாரும் தலையிட முடியாது . . .
தலையிட அதிகாரம் கிடையாது . . .

அதனால் 
நீயும் அவனும்...
உன் மனதும் உன் க்ருஷ்ணனும்...
உன் வாழ்க்கையும் அவன் க்ருபையும்...
உன் ஆனந்தமும் அவன் ஆசிர்வாதமும்...
உன் துக்கமும் அவன் ஆறுதலும்...
உன் கோபமும் அவன் சமாதானமும்...
உன் கடமையும் அவன் உதவியும்...
உன் வியாதியும் அவன் வைத்தியமும்...
உன் பாரமும் அவன் பொறுப்பும்...
உன் நிம்மதியும் அவன் ஆனந்தமும்...

இது உங்கள் இருவரின்
சொந்த விஷயம்...

இதில் யார் 
மூக்கை நுழைத்தாலும்
வம்புதான் . . .

உன் குருவைத் தவிர . . .





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP