ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 டிசம்பர், 2009

மாற்றம் . . .


 
ராதேக்ருஷ்ணா
 
ஆச்சரியம்...அதிசயம்....அற்புதம்...
சொன்னால் நம்பமாட்டாய்...
ஆனால் சத்தியம்...
 
என்னுள் ஒரு மாற்றம்...
திடீரென்று ஒரு மாற்றம்... 
எதிர்பாராத மாற்றம்...
கனவிலும் காணாத மாற்றம்... 
கற்பனை செய்யாத மாற்றம்... 
அனைவரும் அதிசயிக்கும் மாற்றம்...
எனக்கே நம்பமுடியாத மாற்றம்... 
  
 
எதையோ பேசிக்கொண்டே
இருக்கும் என் நாவும்
நாம ஜபம் சொல்கிறதே . . .
 
எல்லோரிடமும் எதையாவது
உளரும் என் வாயும்
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறதே . . .
 
எதற்காகவோ ஏங்கும்
என் மனதும் க்ருஷ்ணனுக்காக
ஏங்குகிறதே . . .
 
எங்கேயோ அலையும்
என் கால்களும் கோயில்களுக்கு
சந்தோஷமாய் ஓடுகின்றதே . . .
 
எதற்கெல்லாமோ மலரும்
என் முகமும்
பக்தியில் மலர்கிறதே . . .
 
என்னென்னமோ செய்யும்
என் கைகளும்
கைங்கர்யம்  செய்கிறதே . . .
 
 யாருக்கும் அடங்காத
என்னுடைய அகம்பாவமும்
அடங்கி வருகிறதே . . .
 
தொட்டதற்கெல்லாம்
தற்பெருமை பேசும் என் புத்தியும்
பக்தர்களின் பெருமையை நினைக்கிறதே . . .
 
அடுத்தவர்களையே
குறை கூறும் நானே
என் குறையை உணர்கின்றேனே . . .
 
அடுத்தவர்களைப் பற்றியே
வம்பு கேட்கும் என் காதுகளும்
சத்சங்கம் கேட்கின்றதே . . . 
 
வெட்டித்தனமாய் வீணாய்ப்
போகும் பொழுதுகளும்
தியானத்தில் கழிகின்றதே . . .
 
அல்ப விஷயங்களுக்காக
அழுகின்ற என் கண்களிலும்
பக்தியில் ஆனந்தக்கண்ணீர் வழிகின்றதே . . .
 
 ருசிகரமான சாப்பாட்டின் வாசனையும்,
சுகந்தமான திரவியங்களின் கந்தமும்
அனுபவிக்கும் என் மூக்கே
துளசியின் சுகந்தத்தில் திளைக்கிறதே . . .
 
 தூக்கத்தில் ஆனந்தத்தைக்
காணும் என் உடலும்
பக்தியில் சிலிர்க்கிறதே . . .
 
காமக்கோட்டையான
ஆசை வயப்பட்ட இந்திரியங்களும்
சாந்தமாக இருக்கின்றதே . . .
 
என்னைக் கொண்டாடுபவர்களோடு
மட்டுமே கூடுகின்ற என் ஆசையும்
பக்தர்களோடும் கூடியாட ஆசைப்படுகின்றதே . . .
 
 என்னைக் கேவலப்படுத்துபவர்களை
அழிக்கத் துடிக்கும் என் ராக்ஷச குணமே
இப்பொழுது அமைதியாயிருக்கிறதே . . .
 
எல்லோரையும் சந்தேகப்படும்
சந்தேகப்பிராணியான நானே
பகவானை நம்புகின்றேனே . . .
 
பயந்தாக்கொல்லியான நானே
அடுத்தவர்களுக்கு தைரியம்
சொல்கின்றேனே . . .
 
கண்டதற்கும் ஆளாய் பறக்கும்
நானே, க்ருஷ்ணனின்
தரிசனத்திற்காகத் துடிக்கின்றேனே . . .
 
இவையெல்லாம் கூட 
பரவாயில்லை. பொறுத்துக்கொள்ளலாம்...
 
அடுத்தவர்களை நீ
விடாமல் "க்ருஷ்ணா"
என்று சொல் !
நல்லதே நடக்கும், கவலைப்படாதே 
என்று சொல்கின்றேனே ...
 
இதுபோல் இன்னும் பல மாற்றங்கள்... 
 
எங்கிருந்து வந்தது இத்தனை
மாற்றம்...
 
என் தாய் சொல்லிக் கொடுத்தாளா ?
இல்லையே....
என் தந்தையின் வழி காட்டுதலா ?
இல்லையே...
என் சகோதரனைப் பார்த்தா ?
இல்லையே...
என் சகோதரியின் பாதிப்பா ?
இல்லையே...
என் சொந்தக்காரர்களின் அறிவுரையா ?
இல்லையே... 
என் நண்பர்களின் சகவாசமா ?
இல்லையே...
 என் ஆசிரியர்களின் பயிற்சியா ?
இல்லையே...
என் மூதாதையர்களின் வழியா ?
இல்லையே...
என்னுடைய நல்ல விதியா ?
இல்லையே...
இந்த சமுதாயத்தினாலா ?
இல்லையே...
ஏதேனும் புத்தக அறிவா ?
இல்லையே...
நானே பட்டு உணர்ந்தேனா ?
இல்லையே...
எங்கிருந்தோ வந்த வியாதியா ?
இல்லையே...
என் விடா முயற்சியா ?
இல்லையே...
என் வயதின் கோளாறா ?
இல்லையே...
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பாதிப்பா ?
இல்லையே...
புத்தகத்தினால் வந்த அறிவோ ?
இல்லையே...
ஏழ்மையின் தாக்கமா ?
இல்லையே...
என் தேடலின் பலனா ?
இல்லையே...
என் புத்திசாலித்தனத்தின் விளைவோ ?
இல்லையே...
கடையில் எங்காவது வாங்கினேனா ?
இல்லையே...
யாராவது தானம் கொடுத்தார்களா ?
இல்லையே...
என் அறிவின் முதிர்ச்சியா ?
இல்லையே...
 
பின் எங்கிருந்து 
இப்படியொரு மாற்றம் ?
 
இந்த மாற்றம் நல்ல மாற்றம்தான் . . .
 
ஆனால் யார் காரணம்...எது காரணம்...
 
 ஆஹா...புரிந்தது...
நன்றாகத் தெரிந்தது...
தெளிவாய் புரிகிறது...
 
சந்தேகமில்லாமல் சொல்கிறேன் . . .
சத்தியம் செய்து சொல்கிறேன். . .
உரக்கக் கத்திச் சொல்கிறேன் . . .
ஊருக்கே கேட்கும்படி சொல்கிறேன் . . .
உலகத்திற்கே சொல்கிறேன். . . 
நாளைய என் சந்ததிக்குச் சொல்கிறேன் . . .

என்னுடைய இந்த மாற்றத்திற்கு
ஒன்றே ஒன்று தான் காரணம் . . .
என்னிடம் எதையும்
எதிர்பார்க்காத அதுவே காரணம் . . .
இந்த முட்டாளுக்கும் இந்த 
அனுபவம் வர அதுவே காரணம் . . .
என்னைப் போல் இப்படி
பலரும் மாற அது மட்டும்தான் காரணம் . . .
 
அது
என்
சத்குருநாதனின்
கருணையின்
ஒரு துளி !
 
அந்தக் கருணாசாகரத்தின்
ஒரு திவளையில்
இந்த ஜந்துவும் சம்சார சாகரத்திலிருந்து
கரையேறிவிட்டது . . . 
 
 ஒரு துளியே இத்தனை
பலமுடையது என்றால்....
 
என் குருவிற்கு முன் ஆகாசமும் கொசு...
என் குருவிற்கு முன் பூமியும் தூசு...
என் குருவிற்கு முன் கடலும் உப்புநீர் குட்டை...
என் குருவிற்கு முன் சூரியனும் மின்மினிப் பூச்சி...
என் குருவிற்கு முன் பணமும் குப்பைத்தாளே...
என் குருவிற்கு முன் தங்கமும் தகரமே... 
 
என் குருவிற்கு முன் க்ருஷ்ணனும் சாதாரணமே...
 
போதும்...போதும்...போதும்...
என் குருவின் திருவடி நிழலில் ஒரு வாழ்க்கை...
எனக்கு இது போதும்... 
 
விழி கிடைத்தது....
அபயக்கரம் கிடைத்தது....
சரணத்தில் இடம் கிடைத்தது...
 
குருநாதன் சரணத்தில் 
இடம் கிடைத்தது....
சத்குருநாதன் சரணத்தில்
இடம் கிடைத்தது....
என் குருஜீஅம்மாவின் சரணத்தில்
இடம் கிடைத்தது....
 
உலகில் நானே பணக்காரன்...
உலகில் நானே பாக்கியசாலி...
உலகில் நானே ஆனந்தமானவன்...
 
தேவு மற்று அறியேன்...
என் சத்குருவைத் தவிர
தேவு மற்று அறியேன்...
 
அதனால்
இல்லை எனக்கெதிர்;
இல்லை எனக்கெதிர்;
இல்லை எனக்கெதிரே;
 
ஒரு நாளும் இல்லை எனக்கெதிரே . . .
 
என் குருவின் பெருமை
பாடித் திரிவனே . . . 
 
 உனக்கும் வேண்டுமா இந்த மாற்றம் ? ! ?
 
வா...நம் குருஜீ அம்மா இருக்கிறார்...வா
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP