ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, December 7, 2009

காத்திருக்கிறேன் . . .ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனின் அழகு எப்படியிருக்கும் . . .

தெரிந்தவர்களைக் கேட்டால்
சொல்வார்கள் !
கேட்டுப் பார்க்கலாமா !


கேட்டுத்தான் பார்ப்போமே ! 
 உனக்குக் கேட்க ஆசையிருந்தால்
அது போதுமே !க்ருஷ்ணனின் பாதங்கள் எப்படியிருக்கும் ?
ப்ருந்தாவனத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கால்விரல்கள் எப்படியிருக்கும் ?
திருமங்கையாழ்வாரைக் கேட்போம் வா ! 

க்ருஷ்ணனின் கணுக்கால் எப்படியிருக்கும் ?
கால் சலங்கையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் முழங்கால் எப்படியிருக்கும் ?யமுனையின் சேற்றைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் தொடை எப்படியிருக்கும் ?
 யமுனையின் மீன்களைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் குஹ்யப்ரதேசம் எப்படியிருக்கும் ?
கோமணத்தைக் கேட்போம் வா ! 
 
க்ருஷ்ணனின் இடுப்பு எப்படியிருக்கும் ?
யசோதை கட்டிய தாம்புக்கயிற்றைக்
கேட்போம் வா !

க்ருஷ்ணனின் நாபிப்ரதேசம் எப்படியிருக்கும் ?
ப்ரும்மதேவரைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் திருமார்பு எப்படியிருக்கும் ?
வைஜயந்திமாலையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் வக்ஷஸ்தலம் எப்படியிருக்கும் ?
ஸ்ரீ தேவியைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் திருத்தோள்கள் எப்படியிருக்கும் ?
கன்றுக்குட்டியைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் முழங்கை எப்படியிருக்கும் ?
வெண்ணைப் பானையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கணுக்கை எப்படியிருக்கும் ?
அவன் கைவளையல்களைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் உள்ளங்கை எப்படியிருக்கும் ?
கோவர்தன மலையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கைரேகைகள் எப்படியிருக்கும் ?
பக்தர்கள் தரும் நிவேதனத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கைவிரல்கள் எப்படியிருக்கும் ?
புல்லாங்குழலைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கைவிரல் நகங்கள் எப்படியிருக்கும் ?
மருதாணியைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கருநீல வண்ணம் எப்படியிருக்கும் ?அவனுக்கு தேய்க்கும் எண்ணையைக் கேட்போம் வா ! 

க்ருஷ்ணனின் திருக் கழுத்து எப்படியிருக்கும் ?
குப்ஜையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் திருமுகம் எப்படியிருக்கும் ?
கண்ணாடி அறையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் செங்கனிவாய் எப்படியிருக்கும் ?
கோபிகைகளைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் முத்துப் பற்கள் எப்படியிருக்கும் ?
பழங்களைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் நாவு எப்படியிருக்கும் ?
தாம்பூலத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் தொண்டை எப்படியிருக்கும் ?
வெண்ணையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கன்னங்கள் எப்படியிருக்கும் ?
திருஷ்டிப்பொட்டைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் மூக்கு எப்படியிருக்கும் ?
புல்லாக்கைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் மூச்சுக்காற்று எப்படியிருக்கும் ?
வேதத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் திருக்காதுகள் எப்படியிருக்கும் ?
மகரகுண்டலங்களைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கண்கள் எப்படியிருக்கும் ?
 ஆண்டாளைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கண் இமைகள் எப்படியிருக்கும் ?
தீட்டிய மையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் புருவங்கள் எப்படியிருக்கும் ?
பெரியாழ்வாரைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் நெற்றி எப்படியிருக்கும் ?
கஸ்தூரி திலகத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கொண்டை எப்படியிருக்கும் ?
மயில்பீலியைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் தலைமுடி எப்படியிருக்கும் ?
துளசியைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் சிகை எப்படியிருக்கும் ?
க்ருஷ்ணனுடைய நாவிதரைக் கேட்போம் வா !

 க்ருஷ்ணனுடைய பிடரி எப்படியிருக்கும் ?
தலையணையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் பின் முதுகு எப்படியிருக்கும் ?
மெத்தென்ற பஞ்சசயனத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் ப்ருஷ்டபாகம் எப்படியிருக்கும் ?
 அவனைச் சுமக்கும் மரங்களைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் பின்தொடை எப்படியிருக்கும் ?
பீதாம்பரத்தைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் ஆடுசதை எப்படியிருக்கும் ?
கோபகுழந்தைகளைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் குதி கால் எப்படியிருக்கும் ?
பாதுகையைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் மனது எப்படியிருக்கும் ?
ராஜாத்தி ராதிகாவைக் கேட்போம் வா !

க்ருஷ்ணனின் கருணை எப்படியிருக்கும் ?
நம் குருஜீ அம்மாவைக் கேட்போம் வா !

க்ருஷ்ண தரிசனம் எப்படியிருக்கும் ?
நீ அனுபவித்துவிட்டு குருஜீ அம்மாவிடம் சொல்...

நீ பார்ப்பாயா !
உனக்கு ஏன் சந்தேகம் . . .

நீ விடாமல் நாம ஜபம் செய். . .
தரிசனம் தரவேண்டியது அவன் பொறுப்பு . . .


பார்த்த பிறகு 
மறக்காமல் எனக்கும் சொல் !
சொல்வாயா . . .

நீ அனுபவித்ததைக் கேட்க
ஆவலுடன் காத்திருக்கிறேன் . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP