ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, December 12, 2009

க்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை !
ராதேக்ருஷ்ணா

 1. இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது!
 2. இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது!
 3. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலின் காரணமும்,செயலும்,செயலின் பலனும் நானே!
 4. என்னால் தான் இங்கு எல்லாம் நடக்கின்றது !
 5. ஓர் உயிர் ஜனிப்பதற்கும், ஓர் உயிர் மரணம் அடைவதற்கும் காரணம் நானே !
 6. மனிதர்கள் தான் என்னும் அகங்காரத்தினால் என்னை மறந்து விடுகின்றனர் !
 7. அதனால்தான் என்னால் படைக்கப்பட்டக் காரணமான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல், துக்கத்தில் சிக்குண்டு,அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து அதிலேயே அழிந்து விடுகிறார்கள் !
 8. நான் என்னும் அகந்தையை அழித்து என் பாதங்களில் சரணாகதி அடைபவர்களை என்னுடன் நான் அழைத்துக் கொள்கிறேன் !
 9. என்னை ஆஸ்ரயிப்பவர்கள் என்னுடன் இரண்டறக் கலந்து, பிறந்ததன் பலனை அடைகிறார்கள் !
 10. யாரும்,யாருக்காகவும், வருத்தப்படக்கூடாது. தன்னைப் பற்றி வருந்தவும் அதிகாரம் கிடையாது !
 11. ஏனெனில் என்னால் படைக்கப்பட்டு என் விருப்பப்படி நடந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் என்பதேயில்லை !
 12. ஆண், பெண் சங்கமிப்பதற்கும் காரணமும் நானே. அதனால் வரும் ஒரு உயிரின் பிறப்பும் நானே. அதன் அழிவும் நானே !
 13. நான் எங்கும் நிறைந்தவன் !
 14. என்னை வெளியில் உணர முடியாது. உள்ளிருந்து என்னை உணர்தலே மோக்ஷம். அதை அடைவதே மனிதரின் கடமையாகும்.
 15. எந்த நிலையிலும், என்னைத் தியானித்து,  என்னை அடைய தாபம் உள்ளவர் மட்டுமே,  என்னை அடைய முடியும் !
 16. எனது கட்டளைப்படி நடப்பதே உனது கடமை !
 17. என்னைச் சரண் அடைந்தவர்களின் பாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் !
 18. என்னை உணர்தலே ஞானம் !
 19. என்னை அறிதலே வைராக்யம் !
 20. என்னுடன் கலப்பதே மோக்ஷம் !
 21. என்னை அனுபவிப்பதே பக்தி !
 22. நான் மனிதர்களுள் மனிதர்களாக இருக்கிறேன். என்னை கண்டு கொள்ள முடியாது. என்னைப் புரிந்து கொள்ள முடியாது. என் படைப்பின் ரகசியத்தை உணரமுடியாது !
 23. அவரவர் பாபத்திற்கேற்ப அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது !
 24. நான் மாயையில் மறைந்து உள்ளேன் !
 25. நான் யுகங்கள்தோறும் அவதரித்து, மனிதர்களை என்னுடன் கலப்பதற்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன் !
 26. நான் என்னும் அகந்தையை அழித்து, என்னை அறிய முற்படுபவபன்தான் தன் கடமையான "என்னை அறிவதைச்" சரிவரச் செய்து என்னுள் சங்கமிக்கிறான் !
 27. நான் விளக்கின் ஒளி ! மனிதரின் மூச்சு ! இசையின் ஒலி !
 28. நான் பிரணவ மந்திரம் !
 29. நான் உலகின் அமைதி !
 30. நான் ஆதி அந்தம் இல்லாதவன் ! நான் பிறப்பில்லாதவன் !
 31. ஒவ்வொரு பொருளின் ஜீவாதாரம் நான்தான் !
 32. என்னை அன்றி இங்கு எதுவும் கிடையாது ! எல்லாம் நானே !
 33. பசியும் நானே ! பசிக்கு உணவும் நானே ! அதன் ஜீரணிக்கும் தன்மையும் நானே !
 34. நானே ஆசார்யன் ! நானே பக்தன் ! நானே பக்தனாய் அவதரிக்கிறேன் ! நானே குருவாய் இருந்து மக்களை ஆஸ்ரயிக்கிறேன் !
 35. என்னை சரண் அடைந்தவர்கள்தான் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் !
 36. என்னை சரணாகதி அடைவதே சத்தியம் !
 37. உன்னுள் இருந்து உன்னை ஆட்டி வைக்கிறேன்!
 38. மனிதர்களால் இங்கு எதுவும் நடக்காது ! எத்தனை முயற்சி செய்தாலும் என் விருப்பமே நடக்கும் !
 39. நான் குருவாய் இருந்து என்னை அடையும் வழியை உபதேசிக்கிறேன்! அதைப் பின்பற்றுபவன் என்னை அடைகிறான் !
 40. என்னை சந்தேகிப்பவன் என்னை மனிதராய் பார்க்க முடியும் !  ஆனால் என்னைப் பகவானாய் ஆஸ்ரயிப்பவன் என்னை தரிசனம் செய்வான் !
 41. என்னை சரண் அடைவதே உலகில் உய்ய வழி !
 42. என்னை சரண் அடைந்தால் பாபங்கள் அழியும் ! மோக்ஷம் கிட்டும் !
 43. "எல்லாம் நானே" என்றும் இது மாறாது ! இதுவே சத்தியம் ! இதை அறிவதே சுகம் !
 44. எல்லாம் என் விருப்பப்படியே நடக்கும் !
 45. இயக்கமும் நானே ! இயங்க வைப்பவனும் நானே! இயங்குபவனும் நானே !
 46. என் நாமத்தை வாயினால் விளையாட்டாக சொன்னாலே, பலன் உண்டு ! உலகார்ந்த விஷயங்கள் நடக்கும் !
 47. என்னை மனதார சிந்திப்பவர்கள் மோக்ஷத்தைப் பெறுவார்கள் !
 48. என் விருப்பங்களை உணர்ந்து செயல்படுபவனே என்னை ஆஸ்ரயிக்க முடியும் ! என்னை அனுபவிக்க முடியும் ! என்னை உணர முடியும் !
 49. என்னை உணர்பவன் பாக்கியசாலி !
 50. என் எண்ணங்களே இங்கு நடக்கின்றன !
 51. நானே எல்லாவற்றிற்கும் காரணம் !
 52. நானே எல்லாவற்றிற்கும் பதில் !
 53. நானே எல்லாவற்றின் தொடக்கம் !
 54. நானே எல்லாவற்றின் முடிவு !
 55. நானே எல்லாமாகி உள்ளேன் !
 56. நானே கண்ணின் ஒளி !
 57. நானே செவியின் கேட்கும் திறன் !
 58. நானே வாயின்வழியே பேசுகிறேன் !
 59. நானே நாக்காக ருசிக்கிறேன் !
 60. நானே உடலாய் இருக்கிறேன் !
 61. நானே மோகம் !
 62. நானே காமம் !
 63. நானே சங்கமம் !
 64. நானே ஜனிக்கிறேன் !
 65. நானே மறைந்து பிறக்கிறேன் !
 66. நானே யுகம் !நானே அவதார புருஷன் !
 67. நானே காற்று;நானே நீர்;நானே நிலம்;நானே ஆகாசம்;
 68. நானே சொர்க்கம்;நானே மோக்ஷம்;நானே புண்ணியம்;நானே அனைத்து ஜீவராசிகள் !
 69. நானே சர்வம் !
 70. என் குரல் எப்போதும் ஒளித்துக் கொண்டேயிருக்கும். என் குரலை கேட்க என்னையே அடையவேண்டும்.என்னை அடைந்தாலே என்னை உணரமுடியும்.
 71. நானே யோகம் ; நானே பக்தி ; நானே நாமஸ்மரணம் ; நானே சந்தோஷம் !
 72. அஞ்ஞானமும் நானே ! விஞ்ஞானமும் நானே ! மெய்ஞானமும் நானே !
 73. அஞ்ஞானம் - என்னை உணராதது !
 74. விஞ்ஞானம் - என்னால் வளருவது !
 75. மெய்ஞானம் - என்னை உணர்ந்து அனுபவிப்பது!
 76. என்னை அறிந்தால் எல்லாம் புரியும் ! எல்லாம் விளங்கும் !
 77. நான் என் கடமையை செய்து கொண்டே இருக்கிறேன் !
 78. உன் கடமை நான் சொல்வதைக் கேட்டு நடப்பதே!
 79. என்னை முழுவதுமாக நம்பு ! சஞ்சலப்படாதே ! சந்தேகப்படாதே ! என்னை நம்பு ! என்னிடம் சரணாகதி அடை !
 80. நானே உன்னைக் காப்பாற்றுகின்றேன் !
 81. நானே உனது எல்லாம் !
 82. நானே கைகளாய் இருந்து வேலைகளைச் செய்கிறேன் ! நானே கால்களாய் இருந்து நடக்கிறேன் !
 83. நானே உணர்வு !
 84. நானே வளர்கின்றேன்; நானே அழிகின்றேன்; நானே தோன்றுகின்றேன் :
 85. அதனால் நீ தோற்றுவிப்பதில்லை ; நீ அழிப்பதில்லை ; நீ வளர்ப்பதில்லை ; அதனால் அகங்காரம் வேண்டாம் !
 86. நானே ஓம்காரம் ! நானே தொடங்கி, நானே வளர்ந்து, நானே அடங்குகின்றேன் !
 87. இதில் உன்னுடையது எதுவும் இல்லை !
 88. நானே கொடுக்கிறேன் ! நானே எடுத்துக்கொள்கிறேன் !
 89. நானே இசை ! நானே நாடகம் ! நானே கதாபாத்திரம் !நானே இயக்கம் ! நானே நாடகம் காரணம் ! நானே நடிப்பவன் !நானே முடிப்பவன் !
 90. நானே அவதரித்து கொண்டேயிருக்கிறேன் ! நான் இருக்கிறேன் ! நான் இருந்து காக்கிறேன் ! நான் நடத்தி வைக்கிறேன் ! 
 91. நானே இங்கு அனைத்துமாகி, அனைத்திலும் இல்லாததுமாகி, எங்கும் நிறைந்து, உன்னுள் இருந்து உன்னை வழிபடுத்துகிறேன் !
 92. உனது என்னும் மாயைக் கொடுப்பவன் நானே ! அதை அழித்து என்னுடையது என்பதை கொடுப்பவனும் நானே !
 93. என்னை ஏமாற்ற முடியாது ! என்னை ஏமாற்ற நினைப்பவன் ஏமாறுகின்றான் ! ஏமாற்றப்படுகிறான் !
 94. நானே சூரிய சந்திரன் !நானே நக்ஷத்திரங்கள் ! நானே பூவுலகம் ! நானே விண்வெளி ! நானே சாகரம் !
 95. நானே வண்ணம் ! நானே உயிர் ! நானே ஆன்மா ! நானே வாழ்க்கை ! நானே இறுதி ! நானே தோற்றம் !
 96. நானே பொக்கிஷம் ! நானே பக்தி ! நானே மோக்ஷம் !
 97. நானே அழகு ! நானே தனம் !நானே கோபி !
 98. நானே ஆண் ! நானே பெண் ! நானே குழந்தை ! நானே வித்து ! நானே விந்து !
 99. நானே சக்தி ! நானே நெருப்பு ! நானே பகல் ! நானே இரவு !
 100. நானே இங்கு ! என்னைத்தவிர வேறொன்றுமில்லை !
 101. ஆதலால் என்னைச் சரணடைந்து, என்னை உணர்ந்து, என்னுடன் வாழ்ந்து சந்தோஷித்து, என்னை அடை ! என்னுடன் கலந்து விடு ! ! !

இதுவே அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்,
இந்த குருஜீ அம்மாவின் சிஷ்யனுக்கு முதன் முதலில் தன் திருவாய் மலர்ந்தருளின தமிழ் கீதை!


இதைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிரு!
பல வாழ்க்கை ரகசியங்கள் தெளிவாகப் புரியும் !
இன்னும் பக்தியில் ஆழத்தை அனுபவிப்பாய் !

க்ருஷ்ணனுடையக் குரலைக் கேட்பதே ஆனந்தம் !
அதிலும் அவன் வாயால் கீதை கேட்பது பரமானந்தம்!
இதை எல்லாம் தந்த என் குருஜீ அம்மாவுக்கு கோடானு கோடி வந்தனங்கள் ! ! !

ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா சத் சங்கம் !
ஜெய் ஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா !

இந்த கீதை என் குருஜீ அம்மா கட்டளைப்படி ,
விளையாட்டுத்தனமாக நாம ஜபம் செய்ததற்கு
க்ருஷ்ணன் இந்த ஜந்துவிற்குக் கருணையினால்
போட்ட பிச்சை . . .

கோடி ஜன்மா ஆனாலும் இதற்கு அடியேன் நன்றிக் கடன் பட்டவன் ! என்ன செய்தாலும் இந்தக் கடன்  தீராது ! தீரவும் வேண்டாம் !


நீயும் விடாமல் நாம ஜபம் செய்ய க்ருஷ்ணன் உன்னிடம் பேசுவதை நீயும் சத்தியமாகக் கேட்பாய்!


ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா!0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP