ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, December 8, 2009

காரணம் சொல்லாதே !





ராதேக்ருஷ்ணா


பக்தி செய்யாமலிருக்க
காரணம் சொல்லாதே !

உலகில் காரணம்
சொன்னவர்கள்
ஜெயித்ததில்லை !

நீ சொல்கின்ற காரணங்களில்
பல பக்தர்கள் வாழ்விலும்
இருந்தது !

அவர்கள் அதையும் தாண்டித்தான்
பக்தி செய்தார்கள் !

நீயும் அவர்களைப் போல்
முயற்சித்துப் பார் !

தகப்பன் கொடுமைக்காரனா ?
ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

 தாயால் கெட்ட பெயரா ?
பரதனைப் போல் பக்தி செய் !

 அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ?
தியாகராஜரைப் போல் பக்தி செய் ! 

குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா ?
குசேலரைப் போல் பக்தி செய் !

மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

கணவன் கொலைகாரப் பாவியா ?
மீராவைப் போல் பக்தி செய் !

புகுந்த வீட்டில் கொடுமையா ?
சக்குபாயைப் போல் பக்தி செய் !

பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா ?
நாரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
விதுரரைப் போல் பக்தி செய் !

நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

  உடலில் வியாதியால் வேதனையா ?
நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய் !

யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !

இளம் விதவையாய் குழந்தைகளுக்காக
வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !

மனைவியை இழந்து குழந்தைகளோடு
வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

 சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை
ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

உடன் பிறந்த தம்பியே உனக்கு
விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

பெற்ற குழந்தையே உன்னை
கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !


உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார்
உடையநங்கையப் போல் பக்தி செய் !
 
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !


கல்யாணம் செய்து கொள்ளாமல்
வாழ்கின்றாயா ?
பீஷ்மரைப் போல் பக்தி செய் !

உன் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப்
போல் பக்தி செய் !

வியாபாரத்தில் நஷ்டமா ?
சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !


உன் கணவன் நாஸ்திகனா ?
மண்டோதரியைப் போல் பக்தி செய் !


உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ?
விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !

குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !

ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ?
சோகாமேளரைப் போல் பக்தி செய் !

சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
யசோதையைப் போல் பக்தி செய் !

பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !

அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ?
கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !

பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !


நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

 வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
 பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
என்றும் ஒரே ஆதாரம் !
அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும்
உனக்கு சமாதானம் இல்லை !


இதுவரை காரணம் சொல்லி
உன் ஆனந்தத்தை நீ
தொலைத்தது போதாதோ ?


இனிமேல் காரணம் சொல்லாதே !




0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP