ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, December 31, 2010

திருமலையே நீ வாழ்க !

ராதேக்ருஷ்ணா . . .

திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் சொத்தே . . .
திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ ஸ்ரீநிவாஸனின் வாசஸ்தலமே . . .
திருமலையே நீ வாழ்க !

பாபங்களை நாசமாக்கும் வேங்கடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஆதிசேஷனாய் இருக்கும் சேஷாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வேதங்களே மலையான வேதாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

கருடன் கொண்டு வந்த கருடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வ்ருஷபனுக்கு மோக்ஷம் கிடைத்த வ்ருஷபாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

அஞ்சனாதேவி தவமிருந்த அஞ்சனாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

பரமானந்தத்தின் இருப்பிடம் ஆனந்தாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஏழுமலையே . . .திருவேங்கட மலையே . . .
திருமலையே நீ வாழ்க !

பக்தர்களை வசீகரித்து,பக்தியைத் தரும்
திருமலையே நீ வாழ்க !

வைகுந்தவாசன் தன் திருவடி பதித்த
ஸ்ரீவாரி பாதம் தாங்கும்
திருமலையே நீ வாழ்க !

குலசேகர ஆழ்வாரும் ஏதேனுமாக
ஆசைப்பட்ட திருமலையே நீ வாழ்க !


குரவநம்பி சதா சர்வதா ஸ்மரித்த
திருமலையே நீ வாழ்க !


அன்னமாச்சார்யார் பாடி அனுபவித்த
அற்புத திருமலையே நீ வாழ்க !


ஸ்வாமி இராமானுஜரும் முழங்காலால் ஏறிய
பவித்ரமான திருமலையே நீ வாழ்க !


திருமலையாழ்வாரே உன்னை பணிந்தேன் !


எனக்கு பெரிய பக்தியில்லை !
எனக்கு நல்ல சிரத்தையில்லை !
எனக்கு திடமான புத்தியில்லை !
எனக்கு கர்ம யோகம் தெரியாது !
எனக்கு ஞானம் புரியாது !


திருமலையாழ்வாரே நீரே எனக்கு கதி !
ஸ்ரீநிவாசனே உன் மேலிருக்கிறார் . . .
நீ என்னை உன் குழந்தையாக
ஏற்றுக்கொள் . . .

நிச்சயம் ஸ்ரீநிவாசன் என்னை ஏற்றுக்கொள்வார் . . .

ஏற்றுக்கொள்வாயா . . .?
இந்த முட்டாள் குழந்தையை . . .?

திருமலையாழ்வாரே . . .
நீர் மிகவும் பெரியவர் . . .
நானோ மிகப்பெரிய பாபி . . .

தயவு செய்து இந்தப் பாபிக்கு
மோக்ஷம் தாரும் . . .

அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பனின்
சிம்மாசனமாகிய திருமலையே . . .

உன் திருமுடியில் பாலாஜிக்கு இடம்தந்தாய் . . .
உன் திருவடியில் இந்த ஏழைக்கு இடம் தா . . .

அதற்கு நான் என்ன கைமாறு செய்வேன் ?

உன்னை வாயார,மனதார,நாத்தழும்பேற
எல்லா ஜன்மங்களிலும் வாழ்த்துவேன் . . .

திருமலையே நீ வாழ்க . . .

 

Read more...

Friday, December 17, 2010

சமாதி . . .

ராதேக்ருஷ்ணா

சமாதி . . .

ஜீவ சமாதி . . .

எல்லோராலும் உயிருடனே
சமாதி அடையமுடியாது . . .

எல்லோருக்கும் உயிர் இருக்கும்போதே
குகையில் உட்கார்ந்து தன்னை
மறக்கமுடியாது . . .

உலகை வாழவைக்க,
தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க
எல்லோராலும் முடியாது . . .

ஆனால் அப்படி ஜீவ சமாதியடைந்த
மஹாத்மாக்களின் ஜீவ சமாதி
இடத்திற்குச் சென்றால் தானாக
நிம்மதி தேடி வரும் . . .

நானும் சென்றேன் . . .
ஆலந்தி சென்றேன் . . .
சந்த் ஞானேஸ்வரரின் ஜீவ சமாதிக்குச் சென்றேன் . . .

சென்றேன் . . .
என்னை மறந்தேன் . . .
புதியதாகப் பிறந்தேன் . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய அகம்பாவம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய சுயநலம் 
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய காமம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய கோபம் 
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பயம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய முன்வினை
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பாபம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய ஆசைகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய குழப்பங்கள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பிரச்சனைகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய தோல்விகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய வியாதிகள்
சமாதி அடைந்தது . . .

நான் இன்னும் மீளவில்லை. . .
கொஞ்ச நேரம் கழித்து சொல்கிறேன் . . .
 

Read more...

Saturday, December 11, 2010

பிச்சைக்காரன் . . .

ராதேக்ருஷ்ணா

பிச்சைக்காரன் . . .

நான் ஒரு பிச்சைக்காரன் . . .

பல வருடங்களாக
உண்மையான அன்பிற்காக
ஏங்கும் ஒரு பிச்சைக்காரன் . . .

பல யுகங்களாக
தெளிவான ஞானத்திற்க்காக
ஏங்கும் ஒரு பிச்சைக்காரன் . . .

பல ஜன்மங்களாக
வைராக்கியத்திற்க்காக அலையும்
ஒரு பிச்சைக்காரன் . . .

பல கோடி வருஷங்கள்
மனிதர்களின் பின்னால்
அலைந்துகொண்டிருக்கும்
முட்டாள் பிச்சைக்காரன் . . .

பல சமயங்களில்
தெய்வத்தின் அனுக்ரஹத்தை
அவமதித்துவிட்டு,அதனைத் தேடும்
பைத்தியக்கார பிச்சைக்காரன் . . .

ஆசை வயப்பட்டு எதையோ கேட்டு,
தெய்வம் தந்ததை ஒதுக்கிவிட்டு,
பிறகு அதற்க்காக அழும்
அவசரக்கார பிச்சைக்காரன் . . .

 மனிதர்களின் வெளி வேஷத்தையும்,
சுயநலத்தையும் உள்ளபடி பார்த்துவிட்டு,
பயந்து நடுங்கி தெய்வத்தின்
தயவிற்க்காக பிச்சை கேட்கும்
பாவப்பட்ட பிச்சைக்காரன் . . .

பிச்சை இன்னும் முடியவில்லை . .. Read more...

Monday, November 29, 2010

வாழ்ந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா...


உனக்கு தோள் கொடுக்க
கண்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது சுமையைத் தாங்க
கோபாலன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு ஆறுதல் சொல்ல
க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு தைரியம் தர
கோவிந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

 உன் கண்ணீரை துடைக்க
கிரிதாரி இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை சிரிக்க வைக்க
முரளீதரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வாழ்வை சொல்லித்தர
கீதாசார்யன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது கஷ்டங்களை சரி செய்ய
புண்டரீகாக்ஷன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை எப்போதும் காப்பாற்ற
அச்சுதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வேண்டியதைத் தர
நவநீத சோரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது பாபங்களை வாங்கிக்கொள்ள
முகுந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது எண்ணங்களை புரிந்துகொள்ள
ஜகந்நாதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை புரிந்துகொண்டு
 உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உலகைப் புரிந்துகொண்டு
உலகோடு ஒத்துவாழ அதிகாரம் உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது திறமைகளை உபயோகப்படுத்தி,
எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்ட
உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது லக்ஷியங்களை அடைய
கண்ணன் உனக்கு உதவுகின்றான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

கடைசி மூச்சு வரை
சிரத்தையோடு வாழ்ந்து பார் . . .

கடைசி நிமிடம் வரை
முயற்சியோடு வாழ்ந்து பார் . . .

வாழ்ந்து பார் . . .
உன் வாழ்க்கையை பலபேர்
பாடமாகக் கொள்வர் . . .
வாழ்ந்து பார் . . .

Read more...

மனமே . . .ஓ . . .மனமே !

ராதேக்ருஷ்ணா . . . 

மனமே . . .கலங்காதிரு !
நல்லதே நினை . . .

மனமே . . .குழம்பாதிரு !
நல்லதே நடக்கும் . . .

மனமே . . .சோர்ந்துபோகாமலிரு !
நல்லதே நடக்கிறது . . .

மனமே . . .தெளிவாக இரு !
 நல்லதே நடந்தது . . .

மனமே . . . அசராமலிரு !
நன்மை தானாக வரும் . . .

மனமே . . .அழாமலிரு !
க்ருஷ்ணன் பலம் தருகிறான் . . .

மனமே . . . துவண்டு போகாமலிரு !
 சவால்களை சமாளிக்கலாம் . . .

மனமே . . .நம்பிக்கையோடு இரு !
பிரச்சனைகளை தீர்க்கலாம் . . .

மனமே . . .நிம்மதியாக இரு !
தனியாய் நின்று வெல்லலாம் . . .

மனமே . . .புலம்பாமலிரு !
தீர்வுகள் வரிசையில் நிற்கின்றன . . . 
 
மனமே . . .பொறுமையாய் இரு !
எதிர்காலம் உன்னிடம் வருகிறது . . .

மனமே . . .அதைரியப்படாதே !
உலகமே உனக்கு வசப்படும் . . .

மனமே . . .எதிர்பார்க்காதே !
எல்லாம் உன்னிடமே இருக்கிறது . . .

மனமே . . . ஏமாறாதே !
இவ்வளவு தான் உலகம் . . .

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....உலகை நம்பி இல்லை !

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....மனிதர்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....செல்வத்தை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....சொந்தங்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !
உனக்கு யாரும் சமாதானம் சொல்லவேண்டாம் !
உனக்கு யாரும் தைரியம் தரவேண்டாம் !
உனக்கு யாரும் நம்பிக்கை தரவேண்டாம் !

நீ தான் உலகிற்கே எல்லாம் தரவேண்டும் !

மனமே . . . ஓ . . . மனமே !

என்னிடம் உள்ள ஒரே சொத்து நீயே . . .
என்னை விட்டு நீங்காத பந்தமும் நீயே . . . 

நீ போதும் . . .

நான் வாழ நீ போதும் . . .

 

Read more...

Sunday, November 28, 2010

செய் . . .

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய் . . .

முயல்வது சுலபம் . . .

முயல்வது ஆனந்தம் . . .

முயல்வது உன் உரிமை . . .

முயல்வது உன் கடமை . . .

முயற்சி...உன் ஆனந்தம் . . .

முயற்சி...ஆனந்தரஹஸ்யம் . . .

முயற்சி...உன்னை பலப்படுத்தும் . . .

முயற்சி...உன்னை பக்குவப்படுத்தும்  . . .

முயற்சி...உனக்கு தைரியம் தரும் . . .

முயற்சி...உனக்கு நம்பிக்கை தரும் . . .

முயற்சி...உனக்கு மரியாதையைத் தரும் . . .

முயற்சி...வாழ்வை மாற்றும் . . .

முயற்சி...உன்னை மாற்றும் . . .

முயற்சி...புத்தியை மாற்றும் . . .

முயற்சி...உடலை உபயோகப்படுத்தும் . . .

முயற்சி...மனதிற்கு உற்சாகம் தரும் . . .

முயற்சி...சமுதாயத்தை நேராக்கும் . . .

முயற்சி...சிந்தனையைத் தூண்டும் . . .

முயற்சி...பிரச்சனைகளை தீர்க்கும் . . .

முயற்சி...அருள் பெற்றுத் தரும் . . .

முயற்சி...மனதிற்கு சமாதானம் தரும் . . .

முயற்சி...காலத்தை சாதகமாக்கும் . . .

முயற்சி...நல்லனவெல்லாம் செய்யும் . . .

முயற்சி...நல்லவற்றையெல்லாம் தரும் . . .

முயற்சி...தேவைகளை பூர்த்தி செய்யும் . . .

முயற்சி...எல்லைகளை மாற்றும் . . .

முயற்சி...அதிசயங்களை நிகழ்த்தும் . . .

முயற்சி...சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் . . .

முயற்சி...உன்னை சுத்திகரிக்கும் . . .

முயற்சி...உனக்கு உன்னை புரியவைக்கும் . . .

முயற்சி...உலகை வசப்படுத்தும் . . .

முயற்சி...புரட்சியைத் தூண்டும் . . .

முயற்சி...அடிமைத்தளையை உடைத்தெறியும் . . .

முயற்சி...வெற்றியைத் அடிமையாக்கும் . . .

முயற்சி...நஷ்டத்தை லாபமாக்கும் . . .

முயற்சி...இழப்பை ஈடு செய்யும் . . .

முயற்சி...கனவை நினைவாக்கும் . . .

முயற்சி...இயலாமையை மாற்றிக்காட்டும் . . .

முயற்சி...கோபத்தைத் தணிக்கும் . . .

முயற்சி...ஒற்றுமையைத் தரும் . . .

முயற்சி...தெய்வத்தையும் தரும் . . .

முயற்சி உடையார் தோல்வி அடையார் . . .

முயற்சி உடையாரை தெய்வமும் கொண்டாடும் . . .

முயற்சி உடையாருக்கு உலகம் அடிமை . . .

முயற்சி . . .பலம். . .வாழ்க்கை . . .ஆனந்தம் . . .

அதனால் செய் . . .
விடாமுயற்சி செய் . . .
உயிர் போகும்வரை முயற்சி செய் . . .

உயிரே போனாலும் முயற்சி செய்  . . .

செய் . . .

Read more...

Friday, November 26, 2010

போராடு . .. .

ராதேக்ருஷ்ணா.....

போராடு . . .

உன்னால் முடியும் . . .
போராடு . . .

நீ வென்றே தீருவாய் . . .
போராடு . . .

நீ வெல்ல வேண்டும் . . .
போராடு . . .

நீ அழக்கூடாது . . .
போராடு . . .

நீ புலம்பக்கூடாது . . .
போராடு . . .

நீ நொந்துபோகக்கூடாது . . .
போராடு . . .

நீ தோற்க்ககூடாது . . .
போராடு . . .

நீ பயப்படக்கூடாது . . .
போராடு . . .

நீ ஏமாறக்கூடாது . . .
போராடு . . .

நீ கலங்கக்கூடாது . . .
போராடு . . .

நீ கதறக்கூடாது . . .
போராடு . . .

நீ ஓடக்கூடாது . . .
போராடு . . .

நீ விழக்கூடாது . . .
போராடு . . .

நீ வீழக்கூடாது . . .
போராடு . . .

நீ நஷ்டப்படக்கூடாது . . .
போராடு . . .

நீ பரிதவிக்கக்கூடாது . . .
போராடு . . .

நீ  வாழ்வை வெறுக்கக்கூடாது . . .
போராடு . . .

நீ வாழ்வை தொலைக்கக்கூடாது . . .
போராடு . . .

நீ வாழ்க்கையை விட்டு ஓடக்கூடாது . . .
போராடு . . .

நீ வியாதியில் கஷ்டப்படக்கூடாது . . .
போராடு . . .

நீ ஆரோக்கியமாக வாழவேண்டும் . . .
போராடு . . .

நீ எல்லோரையும் ஜெயிக்கவேண்டும் . . .
போராடு . . .

நீ எல்லாவற்றையும் ஜெயிக்கவேண்டும் . . .
போராடு . . .

நீ உன்னை ஜெயிக்கவேண்டும் . . .
போராடு . . .
 

நீ வாழ்ந்துகாட்டவேண்டும் . . .
போராடு . . .

நீ க்ருஷ்ணனை அனுபவிக்கவேண்டும் . . .
போராடு . . .

நீ கெட்டவர்களை வெல்லவேண்டும் . . .
போராடு . . .

நீ கெட்டவற்றை அழித்துப்போடவேண்டும் . . .
போராடு . . .

நீ ஒதுங்கக்கூடாது . . .
போராடு . . .

நீ ஒடுங்கக்கூடாது . . .
போராடு . . .

உன் லக்ஷியங்கள் தோற்க்கக்கூடாது . . .
போராடு . . .

உன் நல்ல குணங்கள் அழியக்கூடாது . . .
போராடு . . .

நீ உயரவேண்டும் . . .
போராடு . . .

நீ தாழக்கூடாது . . .
போராடு . . .

நீ உடைந்துபோகக்கூடாது . . .
போராடு . . .

நீ அசரக்கூடாது . . .
போராடு . . .

நீ பலவீனமாகக்கூடாது . . .
போராடு . . .

நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது . . .
போராடு . . .

நீ நல்லவை செய்யவேண்டும் . . .
போராடு . . .

நீ நல்லவர்களுக்கு உதவவேண்டும் . . .
போராடு . . .

நீ சிரித்து வாழவேண்டும் . . .
போராடு . . .

நீ சிந்தித்து வாழவேண்டும் . . .
போராடு . . .

நீ நிம்மதியாக வாழவேண்டும் . . .
போராடு . . .

நீ திருப்தியாக வாழவேண்டும் . . .
போராடு . . .

நீ வாழ்ந்தேயாகவேண்டும் . . .
போராடு . . .

உன்னால் முடியும் . . .
போராடு . . .

நீ வாழ்ந்து ஆனந்தப்படுவதை
நான்
பார்க்கவேண்டும் . . .

போராடு . . .போராடு . . .போராடு . . .

எதிர்கால சரித்திரம் உன்
வாழ்வைக் கண்டு
அசந்துபோகவேண்டும் . . .

போராடு . . .போராடு . . .போராடு . . .

நிகழ்காலத்திலிருப்பவர்
உன் வாழ்வைக் கண்டு
தைரியம் பெறவேண்டும் . . .

போராடு . . . போராடு . . . போராடு . . .


உன்னோடு க்ருஷ்ணன்
இருக்கிறான் . . .

போராடு . . .போராடு . . .போராடு . . .

Read more...

Tuesday, November 16, 2010

தவறில்லை . . .

ராதேக்ருஷ்ணா

பேசுவது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி பேசுகிறாய்
என்பது முக்கியம் . . .


கேட்பது தவறில்லை . . .
ஆனால் என்ன கேட்கின்றாய்
என்பது முக்கியம் . . .

நினைப்பது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி நினைக்கிறாய்
என்பது முக்கியம் . . .


படிப்பது தவறில்லை. . .
ஆனால் எதைப்பற்றி படிக்கின்றாய்
என்பது முக்கியம் . . .


எழுதுவது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி எழுதுகின்றாய்
என்பது முக்கியம் . . .


சொல்வது தவறில்லை . . .
ஆனால் என்ன சொல்கின்றாய்
என்பது முக்கியம் . . .


பழகுவது தவறில்லை . . .
ஆனால் யாரோடு பழகுகின்றாய்
என்பது முக்கியம் . . .


பார்ப்பது தவறில்லை . . .
ஆனால் என்ன பார்க்கின்றாய்
என்பது முக்கியம் . . .


செய்வது தவறில்லை . . .
ஆனால் என்ன செய்கின்றாய்
என்பது முக்கியம் . . .

சிரிப்பது தவறில்லை . . .
ஆனால் எதற்க்காக சிரிக்கின்றாய்
என்பது முக்கியம் . . .


அழுவது தவறில்லை . . .
ஆனால் என்ன காரணத்திற்க்காக
அழுகின்றாய் என்பது முக்கியம் . . .


போட்டி போடுவது தவறில்லை . . .
ஆனால் எதற்காக போட்டி
போடுகின்றாய் என்பது முக்கியம் . . .


சண்டையிடுவது தவறில்லை . . .
ஆனால் ஏன் சண்டை
போடுகின்றாய் என்பது முக்கியம் . . .

யோசிப்பது தவறில்லை . . .
ஆனால் எப்படி யோசிக்கிறாய்
என்பது முக்கியம் . . .

உதவுவது தவறில்லை . . .
ஆனால் என்ன உதவி செய்கிறாய்
என்பது முக்கியம் . . .

பிடிவாதம் தவறில்லை . . .
ஆனால் எதற்கு பிடிவாதம்
பிடிக்கிறாய் என்பது முக்கியம் . . .

செலவழிப்பது தவறில்லை . . .
ஆனால் எதற்கு செலவு செய்கின்றாய்
என்பது முக்கியம் . . .

 போனது போகட்டும் . . .

விடு . . .

இனி வாழ்வில் தவறில்லாமல் வாழ் . . .

தவறோடு வாழ்ந்தால்
உனக்கும் நிம்மதியில்லை . . .
உன் க்ருஷ்ணனுக்கும் நிம்மதியில்லை . . .

உன்னால் முடியும் . . .
முயற்சி செய் . . .
க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான் . . .

உன் வாழ்க்கையை
ஒழுங்காக வாழவேண்டும்
என்று நீ நினைப்பதில்
தவறில்லை . . . .

 

Read more...

Saturday, November 13, 2010

வில்லேந்தி ஒருவன் . . .

ராதேக்ருஷ்ணா
அடி வந்தாண்டி வந்தாண்டி
வில்லேந்தி ஒருவன் . . .
என் மீது அம்பெய்யவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் மீது நான் அம்பெய்யவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
அழகான ஒருவன் . . .
என்னை வசீகரிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் வசீகரிக்கவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
இளங்காளை ஒருவன் . . .
என் இளமையைத் திருடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இளமையை நான் திருடவே. . .
  
அடி வந்தாண்டி வந்தாண்டி
 உத்தமமான திருடன் . . .
என் உள்ளத்தை கொள்ளையிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
 அவன் உள்ளத்தை நான் கொள்ளையிடவே . . .


 அடி வந்தாண்டி வந்தாண்டி
அன்பின் உருவாக ஒருவன் . . .
என்னை அன்பில் திளைக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
 அவன் அன்பை நான் அனுபவிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
சந்திரன் போன்று சிரிப்பவன் . . .
என்னை காதலில் சிக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் காதலில் அழவைக்கவே . . .


 அடி வந்தாண்டி வந்தாண்டி
கார் மேகம் போலொருவன் . . .
என்னை ஆனந்தத்தில் மூழ்கடிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனுள் நான் மூழ்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
ராஜாதி ராஜன் ஒருவன் . . .
என்னை அவனுக்கு அடிமையாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் அடிமையாக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
துளியும் குறையேதுமில்லாத ஒருவன் . . .
என்னை பைத்தியமாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் பைத்தியமாக்கிடவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
வேட்டைக்காரன் ஒருவன் . . .
என் பாபத்தை வேட்டையாடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .அவன் வேட்டையில் நான் சிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
இருவரோடு ஒருவன் . . .
என் இதயத்தை விலை கேட்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இதயத்தில் நான் குடியேறவே . . .

அடி வந்தாண்டி வந்தாண்டி
அமைதியாக ஒருவன் . . .
எல்லோரும் பார்த்திருக்கும் பொழுதே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
நான் அவனைப் பார்த்திருக்கிறேனா ? ? ?

அடி வந்தாண்டி வந்தாண்டி
அனந்தபத்மநாபன் . . .
திருவனந்தபுரவீதிகளிலே . . .
அது அவனோடி அவனோடி
சொன்னாயே என் தோழியே . . .
அவன் வில்லேந்திய அழகனாயிற்றே . . .

அடி போனாண்டி போனாண்டி
என் பத்மநாபன் என்னை ஏங்கவிட்டே . . .
அவனை அழைத்துவாயேண்டி என் தோழியே !
அடி வருவாண்டி வருவாண்டி
என் அருமைத் தோழியே . . .
நாளை ஆராட்டிற்க்கு வீதியார
வருவாண்டி வருவாண்டி
என் அழகுத் தோழியே . . .

அஞ்சாதே . . .கலங்காதே . . .புலம்பாதே
என் செல்லத் தோழியே . . .
நாளை அவனோடு சங்குமுகத்தில்
குளிரக் குளிர நீராடலாம் . . .

அதுவரை 
பொறுத்திரு...நினைத்திரு...
திருவனந்தபுர அழகனையே . . .

வருவாண்டி வருவாண்டி
உன்னிடமே . . .
கவலை வேண்டாமடி வேண்டாமடி
என் இனிய தோழியே . . .

அதுவரை
பத்மநாபா பத்மநாபா என்றே சொல்வாயடி . . .

நாளை ஆராட்டில் அனுபவிப்போமடி . . .


Read more...

Friday, November 12, 2010

வேட்டைக்கு போவோமா ? ! ?

ராதேக்ருஷ்ணா !


வேட்டைக்கு போவோமா ?


துன்பத்தை மறப்போமா ?

வியர்வையில் நனைவோமா ?

சப்தமின்றி நடப்போமா ?

 உத்தாரடம் திருநாள் ராஜாவோடு செல்வோமா ?

நம்மையே இழப்போமா ?

ஆனந்தத்தில் திளைப்போமா ?

 பாவத்தை கொல்வோமா ?

புண்ணியத்தை சம்பாதிப்போமா ?

தேவரை வெறுப்பேற்றுவோமா ?

அசுரரை துரத்துவோமா ?

அகம்பாவத்தை வதைப்போமா ?

மமகாரத்தைக் கொல்வோமா ?

பக்தி மீது சவாரி செய்யலாமா ?

ஞானத்தை பிடிக்கலாமா ?

வைராக்யத்தை கட்டலாமா ?இருளில் ஒளி பெறுவோமா ?

கூடியிருந்து குளிருவோமா ?

உலகையே மறப்போமா ?

சங்கீர்த்தனம் செய்வோமா ?

ப்ரார்த்தனை பண்ணலாமா ?

கண்ணார ரசிப்போமா ?

புன்னை மர இலையை பறிப்போமா ?

ஸ்ரீ அனந்தபத்மநாபனின் திருவடியில்
சரணாகதி செய்வோமா ?

வாழ்வையே வெல்வோமா ?

அப்படியெனில்
உடனே புறப்பட்டு திருவனந்தபுரம் வா . . .

இன்று இரவு
ஸ்ரீ அனந்த பத்ம நாப ஸ்வாமி
வேட்டைக்கு வருகிறார் . . .வருகிறார். . . வருகிறார் . . .
 
 

Read more...

Friday, November 5, 2010

தீபாவளி . . .தீபாவளி . . .

ராதேக்ருஷ்ணா


தீபாவளியைத் தெரிந்துகொள் !


பகவான் ஸ்ரீ ராமன்,
ராவண வதம் செய்துவிட்டு,
அயோத்யாவிற்குத் திரும்பின நாள்
தீபாவளி . . .

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
ப்ராக்ஜ்யோதிஷபுரத்திற்கு சென்று,
நரகாசுரனை வதம் செய்த நாள்
தீபாவளி . . .

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
16100 ஸ்த்ரீகளுக்கு திவ்யமான
தரிசனம் தந்து அவர்களை
விடுவித்த நாள்
தீபாவளி . . .


16100 ராஜகுமாரிகளும்,
அழகன் ஸ்ரீ க்ருஷ்ணனையே
தங்களின் ஸ்வாமியாக
ஏற்றுக்கொண்டு, சரணாகதி
செய்த நாள் தீபாவளி . . .


ஆச்சரியமாக அதிதி மாதாவின்
குண்டலங்களை நரகனிடமிருந்து மீட்டு
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அவளுக்கு திரும்பிக்கொடுத்த நாள்
தீபாவளி . . .


நரகாசுரனிடமிருந்து வருணனின்
குடையை மீட்டு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அவனுக்கு அதைக் கொடுத்து
ஆசிர்வதித்த நாள்
தீபாவளி . . .


தேவலோகத்தில் தேவர்களுக்கு
மட்டுமே சொந்தமான பாரிஜாத
மரத்தை வேரோடு பிடுங்கி
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் பூமிக்காக
கொண்டு வந்த நாள்
தீபாவளி . . .


திருப்பாற்க்கடலை தேவர்களும்,
அசுரர்களும் கடைய அதிலிருந்து,
லக்ஷ்மிதேவி அவதரித்த
புண்ணிய நாள் தீபாவளி . . .


வாமன மூர்த்திக்கு தன்னிடமிருந்த
அனைத்தையும் தானம் தந்து
பாதாள லோகத்திலிருக்கும்
ப்ரஹ்லாதனின் பேரனான 
மஹாபலி சக்ரவர்த்தி பூமியை
தரிசிக்க வரும் நாள்
தீபாவளி . . .


லக்ஷ்மிதேவி நம்முடைய
க்ருஹங்களுக்கு வந்து
நம்மை நீங்காத செல்வமான
பக்தியில் திளைக்க வைக்கும் நாளே
தீபாவளி . . .


ஆதலால் தீபாவளியை
அனுபவிப்போம் . . .


தீபாவளிக்கு அடுத்த நாள்
மிகவும் விசேஷமானது . . .


ரொம்ப ரொம்ப விசேஷமானது . . .


நிச்சயம் நாம் அனைவரும்
கொண்டாடவேண்டியது . . .


நம் க்ருஷ்ணனின்
வீரசாகசத்தை கொண்டாடும்
உன்னதமான நாள் நாளை . . .


அது என்ன . . ?


நாளை சொல்கிறேன் . . .


ஆனால் கொண்டாடியே ஆகவேண்டும் !


தயாராக இரு . . .


இல்லை . . .
இப்பொழுதே சொல்கிறேன் . . .


நாளை என்ன விசேஷம் தெரியுமா ?


"கோவர்தன பூஜை"


கொண்டாட வேண்டிய
உன்னத நாள் தானே . . .


வா . . .கொண்டாடுவோம் . . .Read more...

சத்சங்க தீபாவளி . . .

ராதேக்ருஷ்ணா

சத்சங்கம் கேட்பதே
தீபாவளிதான் . . .

அதுவும் தீபாவளியைப் பற்றி
சத்சங்கம் கேட்பதே பரமசுகம் . . .

தீபாவளியை
சரியாக புரிந்துகொள் . . .

தீபாவளியை
ஒழுங்காகக் கொண்டாடு . . .


 

Read more...

குழந்தையாய் கேளுங்கள் . . .

ராதேக்ருஷ்ணா 

கொஞ்சம்
தீபாவளியைப் பற்றி
கேளுங்களேன் . . .

படிப்பதை விட
கேட்பது சுகமல்லவா ? ! ?
  
 கொஞ்சம் குழந்தையாய்
மாறுவோம் . . .

மீண்டும் கபடமற்ற
வாழ்க்கை வாழ்வோம் . . .

இந்த தீபாவளியை
குழந்தையாய் கொண்டாட
க்ருஷ்ணனிடம் வரம் கேட்போம் . . .  

ஆனந்தமாக
கேளுங்கள் . . .
கேட்டுவிட்டு
குழந்தையாய் குதூகலியுங்கள் . . .

உங்களை மறந்துவிடுங்கள் . . .

க்ருஷ்ணனை உங்கள்
இதயத்தில் வரவிடுங்கள் . . . 

Read more...

கொண்டாடு . . .

ராதேக்ருஷ்ணா

புத்தாடை தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !

பட்டாசு தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !

பலவித பலகார
தீபாவளி கொண்டாடிவிட்டாய் !

பலரோடு தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !

இந்த தீபாவளியை
கொஞ்சம் விசேஷமாகக் கொண்டாடு !

இந்த தீபாவளியை
நிறைய நாம ஜபம் செய்து
"நாம சங்கீர்த்தன தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
க்ருஷ்ணனை சரணாகதி செய்து
"சரணாகதி தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
கோபனாக / கோபியாக மாறி
"ப்ருந்தாவன தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்து
"பக்தி தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
அகம்பாவத்தை அழித்து
"ஞான தீபாவளியாக"
கொண்டாடு . . . 
 
இந்த தீபாவளியை
சுயநலத்தை கொன்றுபோட்டு
"வைராக்ய தீபாவளியாக"
கொண்டாடு . . .


 இந்த தீபாவளியை
க்ருஷ்ணனோடு ஆடிப்பாடி
"ராச தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு
"ஸ்ரவண தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
பகவத் கீதையை பாராயணம் செய்து
"கீதா தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
பக்தர்களோடு கூடியிருந்து
"சத்சங்க தீபாவளியாக"
கொண்டாடு . . .

இந்த தீபாவளியை
குருவை ஸ்மரணம் செய்துகொண்டு
"சத்குரு தீபாவளியாக"
கொண்டாடு . . .

இப்படிக் கொண்டாடிப் பார் . . .

உன் இதயத்தில் தீபாவளி தெரியும் . . .
ஆம் . . .
தீபங்கள் வரிசையாக,
உன் இதயத்தில் ஆனந்தத்தைத் தரும் . . .

இதுவரை உடல் தீபாவளி கொண்டாடினாய் . . .

இந்த தீபாவளி
"ஆத்ம தீபாவளியாக"
இருக்கட்டும் . . .

ஆசிர்வாதங்கள் . . .
கொண்டாடு . . .

இந்த தீபாவளி
நிரந்தரமாக இருக்கட்டும் . . .

இது முடியவே வேண்டாம் . . .

இனி
"நித்ய தீபாவளி"
கொண்டாடுவோம் . . .

க்ருஷ்ணனை தினமும்
நினைத்தால்,பாடினால்,தரிசித்தால்
"நித்யமும் தீபாவளிதான்"

தீபாவளியே நீ வாழ்க . . .
Read more...

தீபாவளியா ? ? ?

ராதேக்ருஷ்ணா


தீபாவளியா ? ? ?

உண்மையாகவே நீ
தீபாவளி கொண்டாடுகிறாயா ?  ?  ?

உன்னுடைய சுயநலம்
என்ற முராசுரன்
முழுவதுமாக அழிந்தானா ?

உன் பேராசைகளை
அழித்து சமாதானம் தர
க்ருஷ்ணன் வந்தானா ?

உன் இருப்பிடத்திற்கு
க்ருஷ்ணனோடு சத்யபாமா
ஆனந்தமாய் வந்தாளா ?

உன்னுள் இருந்த
அகம்பாவம் என்னும்
நரகாசுரன் அழிந்தானா ?

ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்னும்
உன்னுடைய சரீரம்
க்ருஷ்ணனின் கட்டுப்பாட்டில்
வந்துவிட்டதா ?

உன் மனதில் உள்ள
பலவித [16100] ஆசைகளும்,
எதிர்ப்பார்ப்புகளும்
க்ருஷ்ணனையே கதியாக,
ஏற்றுக்கொண்டனவா ?

பக்தி என்னும் கங்கையில்
ஆனந்தமாகக் குள்ளக்குளிர
நீந்தி விளையாடினாயா ?

ஞானம் என்னும் புத்தாடையை
அழகாக உடுத்திக்கொண்டாயா ? 

உன் பைத்தியக்காரத்தனங்கள்
பட்டாசு போல் வெடித்து
சிதறினதா ?

வைராக்யம் என்னும் பக்ஷணத்தை
ஆசை தீர உண்டாயா ?

அன்பு என்னும் ஆனந்த
வெள்ளத்தில் எல்லோரோடும்
நீந்திக் களித்தாயா ?

யாரையும் கேவலப்படுத்தாமல்,
யார் மனதையும் நோகப்படுத்தாமல்,
எல்லோரோடும் கலந்து பழகினாயா ?

ஏழை எளியோரின் வீட்டில்,
உதவி என்னும் தீபத்தை ஏற்றினாயா ?

ஏழைக்குழந்தைகளின் முகத்தில்
சந்தோஷ மத்தாப்புகள் என்னும்
சிரிப்பு முத்துக்கள் சிதற,
அவர்களோடு கலந்து பழகினாயா ?

இத்தனையும் செய்திருந்தால்
நிச்சயம் நீ
தீபாவளிதான் கொண்டாடுகின்றாய் . . .

இதுவரை இப்படிக் கொண்டாடவில்லை
எனில் இந்தத் தீபாவளியை
இவ்வாறு கொண்டாடு . . .

இதுவே தீபாவளி . . .


Read more...

Sunday, October 31, 2010

சில மணிநேரங்கள் !

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் எத்தனையோ
காரியங்கள் செய்துகொண்டேயிருக்கிறோம் !

பயனற்ற செயல்கள் பலகோடி . . .
முட்டாள்தனமான காரியங்கள் சிலகோடி  . . .

சில சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே,
நாம் மிக அற்புதமான சில காரியங்களில்,
ஈடுபடுகின்றோம். . .


தெய்வத்தின் அனுக்ரஹத்தால் மட்டுமே
நாம் தெய்வீக சக்தியால் உந்தப்பட்டு
உருப்படியான காரியங்களை செய்கின்றோம் . . .


 அப்படி நாம் செய்யும் காரியம்தான்
கோவிலுக்குச் செல்வது . . .


தெய்வம் நிச்சயம் நமக்கு
என்றும் நன்மையே செய்கிறது!


மலையப்ப ஸ்வாமியை மிஞ்சின
கலியுக தெய்வம் வேறொன்று உண்டோ ? ? ?


திருமலை ஸ்ரீநிவாசன் தான் எங்களை
திருமலைக்கு அழைத்துச்சென்றது  . . .


திருமலை பாலாஜியின் அருளல்லாமல்
ஒரு ஜந்துவும் திருமலையில் நுழையமுடியாது . . .


இந்த இரண்டு கால் ஜந்துக்களையும்,
அலர்மேல் மங்கா உறை மார்பன்,
தன் திருமலைக்கு வரவழைத்தான் . . .
திருமலை மிக அழகானது . . .
திருமலை மிக அற்புதமானது . . .
திருமலை மிக உயர்ந்தது . . .
திருமலை மிக விசேஷமானது . . .
திருமலை மிக ஆச்சரியமானது . . .


திருமலையில் இருக்கும் நேரம்,
நிச்சயம் வைகுண்டத்தில் வாழும் நேரமே. . .


நாங்கள் மலையேறி ப்ரபுவின்
பொன்னடியில் சரணாகதி செய்ய
ஆவலோடு வரிசையில் நின்றோம் . . .


பொதுவாக எல்லாவற்றிற்க்கும்,
 காத்திருக்கும் மக்கள் கூட்டம்,
கோயிலில் மட்டும் காத்திருக்க
பொறுமையோடு இருப்பதில்லை . . .


கோவிலில் எத்தனை நேரம்
காத்திருக்கிறோமோ அத்தனை
நேரம் நம் கர்ம வினை நம்மை
அணுகவே அணுகாது . . .


அதனால் எப்பொழுதும் கோயிலில்
நிறைய நேரம் காத்திருக்க,
தொடர்ந்து ப்ரார்த்தனை செய் . . .


நாங்களும் ஆனந்தமாக பொறுமையாக
ஆசையோடு காத்திருந்தோம் . . .
காத்திருக்க வைத்தான் ஸ்ரீநிவாஸன் . . .


அவன் மலையில் இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்,
வைகுண்ட வாசம் தானே . . .


பக்தர்கள் கூட்டத்தில் நாமும்,
அடியவரின் அடியவராக,
நிற்பதே பெரிய வரப்ரசாதம் . . .


கூடியிருந்து குளிர்ந்து என்று
ஆண்டாள் சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் பக்த கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு
பகவானுக்காக காத்திருத்தலே ஆகும் . . .


3 மணி நேரம் . . .180 நிமிஷங்கள் . . .
ஆஹா. . .இந்த சில மணி நேரங்கள் . . .
பணம் கொடுத்தாலும் கிடைக்காது . . .
பதவி இருந்தாலும் கிடைக்காது . . .
ராஜனாய் இருந்தாலும் நடக்காது . . .
எத்தனை படித்தாலும் கிடைக்காது . . .


வாழ்க்கையில் வைத்தியருக்காக
காத்திருந்தோம் . . .
இளவயதில் கல்யாணத்திற்க்காக
காத்திருந்தோம் . . .
ப்ரயாணம் செய்ய வண்டிக்காக
காத்திருந்தோம் . . ,
யாரோ வருவதற்காக கால்கடுக்க
காத்திருந்தோம் . . .
வெட்டியாய் பல விஷயங்களுக்காக
காத்திருந்தோம் . . .
 வங்கியில் நம் பணத்தை எடுக்க
காத்திருந்தோம் . . .
கல்யாண வீட்டில் சாப்பாட்டிற்க்காக
காத்திருந்தோம் . . .
தூங்குவதற்காக இரவு வர
காத்திருந்தோம் . . .
பல சமயங்களில் வேலைக்காரர்களுக்காக
காத்திருந்தோம் . . .
இன்னும் இது போல் பல காத்திருப்புகள் . . .


ஆனால் இவற்றினால் இதுவரை
ஆனந்தம் அடைந்ததேயில்லை . . .
ஆனந்தம் என்று மயங்கினோம் . . .


உண்மையில் ஆனந்தம் . . .
திருமலையில் ஸ்ரீநிவாஸனைக் காண
காத்திருப்பதேயாகும் . . .


வாழ்வில் எப்பொழுதோ நாம் சென்று
அவனைத் தொழ . . .அந்த நாளுக்காக,
அந்த சில மணித் துளிகளுக்காக...
ஸ்ரீநிவாஸனே நமக்காகவே 
காத்திருக்கும்போது ,
அல்ப மனிதக் கூட்டம்,
அழுக்குடம்பு,எச்சில்வாய்,அஹம்பாவிகள்
நாம் காத்திருக்கக்கூடாதே என்ன ?  ?  ?


ஸ்ரீநிவாஸன் எங்களுக்காக காத்திருக்கிறான்
என்ற சுகத்திலேயே மேனி சிலிர்க்க,
ஆனந்தத்தில் அவனுடைய வைபவத்தை
சத்சங்கமாய் அனுபவித்துக்கொண்டு,
நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க,
வரிசையும் நகர, ஸ்ரீநிவாஸனிடம்
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தோம் . . .


சிறிது சிறிதாக வரிசை நகர நகர,
பெரிய மலை போன்ற பாபங்கள்,
நெருப்பிலிட்ட பஞ்சாக எறிந்துபோக,
மனதில் சமாதானம் அதிகமாக,
வாயிலே நாமஜபம் திடமாக வந்தது . . .
 
தீபாவளி வந்துவிட்டது ...

முடிந்தவுடன் மீண்டும் திருமலை செல்வோம் . . .


Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP