ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, January 1, 2010

ஒரு மழையில் !

ராதேக்ருஷ்ணா


மழை . . .
வான் தரும் அமிர்தம் . . .
பூமியின் ஜீவாதார சக்தி . . .
ஒவ்வொரு துளியாய் விழும் அற்புதம் . . .

உலகில் எத்தனையோ மழை . . .
ஒவ்வொரு மழையிலும் ஒரு
பகவத் அனுபவம் . . .

கொஞ்சம் பகவத் மழையில்
நனைந்து பார்ப்போம் வா ! 


ஒரு மழையில்
க்ருஷ்ணன் பூமியில் மதுராபுரியில்
அவதரித்தான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் நந்தகோகுலம்
சென்றான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் ப்ருந்தாவனத்தில்
கோபகுழந்தைகளுடன் மாடு மேய்த்தான் ! 

ஒரு மழையில்
க்ருஷ்ணன் ராதிகாவோடு
நனைந்தான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் கோவர்தன மலையைத்
தூக்கினான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் கோபிகைகளைப் யமுனையில்
படகில் அழைத்துச் சென்றான் ! 

ஒரு மழையில்
க்ருஷ்ணன் குசேலருடன் காட்டில்
மரத்தில் தங்கினான் ! 

ஒரு மழையில்
பூரி ஜகந்நாதன் ஜயதேவருக்கு
அஷ்டபதியைத் தந்தான் !

ஒரு மழையில் 
குருவாயூரப்பன் குரூரம்மையிடம்
கோமணம் வாங்கிக்கொண்டான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் ப்ரேமநிதிக்கு
ப்ருந்தாவனத்தில் வழி காட்டினான் !

ஒரு மழையில்
ஸ்ரீநாத்ஜீ ஹரிராயரின்
வீட்டில் அவருடன் படுத்துக்கொண்டான் !

ஒரு மழையில்
பாண்டுரங்கன் நாமதேவரின்
வீட்டுச் சுவற்றை கீழே விழாமல் தாங்கினான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் முதலாழ்வார்களுக்கு
இடைக்கழியில் காட்சி கொடுத்தான் !

ஒரு மழையில்
 சந்த் துகாராமிற்கு பாண்டுரங்கன்
வழிப்போக்கனாக வந்து உதவி செய்தான் !

ஒரு மழையில்
தயிர்காரி ஒருத்திக்கு திருமலையில்
ஸ்ரீநிவாஸன் மோக்ஷம் தந்தான் !

 ஒரு மழையில்
ராமன் சீதையோடு அயோத்யாவில்
ஆனந்தமாக வசித்தான் !

ஒரு மழையில்
ராமன் லக்ஷ்மணனிடம் காட்டில்
சீதா விரஹத்தில் புலம்பினான் !

ஒரு மழையில்
க்ருஷ்ணன் பில்வமங்களரை
வேசி சிந்தாமணி மூலமாக தடுத்தாட்கொண்டான் !

இது போல்
கோடி விதமான
பகவத் காருண்ய மழை உண்டு !

நீயும் எத்தனையோ மழையைப்
பார்த்திருக்கிறாய் ....
நீ எத்தனையோ மழையில்
நனைந்திருக்கிறாய் ....

எப்பொழுது பகவத் மழையில்
நனையப்போகிறாய் ?

இனி ஒவ்வொருமுறை மழை
பொழியும்போதும்
இந்த பகவத் மழையை
ஸ்மரணம் செய்து கொள் !

அப்பொழுது மழை சுகமாக இருக்கும் !

இனி ஒரு போதும் மழையைப் பழிக்காதே !

இனி மழையில் நனைந்தாலும்
க்ருஷ்ணனோடு நனைந்ததாக
நினைத்துக்கொள் !

இனி மழைக்கு ஒதுங்கினாலும்
க்ருஷ்ண தரிசனத்திற்காக என்று
தீர்மானம் செய்து கொள் !

இனி மழையை அனுபவி . . .

ஒரு மழையில் நீயும்
க்ருஷ்ணனை
அனுபவிக்கலாம் . . .

ஒரு மழையில் நீயும்
கண்ணனோடு
ஒதுங்கலாம் . . .எத்தனையோ மழையையும்,
பகவத் அநுபவத்தையும்
இழந்துவிட்டாய் . . .

இனி உயிர் இருக்கும் வரை
ஒவ்வொரு மழையையும்
அனுபவி . . .


உனக்கென்று ஒரு மழை
காத்திருக்கிறது . . .
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP