ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, January 7, 2010

தாம்பத்தியம் ! ! !ராதேக்ருஷ்ணா


தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் !


உலகின் மிக உயர்ந்த ஒரு
தெய்வானுக்ரஹம்
தாம்பத்யம் !

பகவானும்,தாயாரும் கூட 
திவ்ய தம்பதிகளாகவே
காட்சி தருகின்றனர் !

தாம்பத்தியத்தினால்தான்
உலகில் சந்ததி உண்டாகிறது !

ப்ரும்மசரியத்தைக் காட்டிலும்,
வானப்ரஸ்தத்தைக் காட்டிலும்,
சன்யாசத்தைக் காட்டிலும்,
க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது !

தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை
உணரவேண்டும் !
 தாம்பத்தியத்தின் லக்ஷியம்
பரமானந்தமே !
தாம்பத்தியத்தின் லக்ஷியம்
தெய்வ தரிசனமே !

தாம்பத்தியத்தை நல்லபடி
நடத்தினால்
வீட்டிலேயே தெய்வத்தைப்
பார்க்கலாம் . . .

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

தம்பதிகளே கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்கள் . . .

அவரவர் ப்ராரப்தத்திற்கு
தகுந்தவாறே கணவனும்,
மனைவியும் அமைகின்றனர் !

ஆனால் உன்னதமான பக்தியினால்
பூர்வ ஜன்ம கர்ம வினையை
மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை
அனுபவிக்க முடியும் !

 எது எப்படியோ உனக்கென்று
ஒரு வாழ்க்கையை
பகவான் கொடுத்திருக்கிறான் !
 அதை முதலில் புரிந்துகொள் ! 

உலகில் கல்யாணம் என்கின்ற
ஒன்று நடக்காமல்
பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !

கல்யாணம் ஆனபிறகும்
தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
 பல கோடி உண்டு !

இருப்பதை ஜாக்கிரதையாக
வைத்துக்கொள்ளவேண்டியது
மனித தர்மம் . . .


1. கணவனை மனைவி
க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
நினைக்க வேண்டும் !

மனைவியை கணவன்
க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் !


2. கணவனிடத்தில் உள்ள உயர்ந்த
குணங்களை மனைவி
புரிந்துகொள்ள வேண்டும் !

மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
பண்புகளை கணவன்
தெரிந்துகொள்ள வேண்டும் !


3. கணவனிடத்தில் உள்ள குறைகளை
மனைவி தெரிந்துகொண்டு அதை
மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் !

மனைவியிடத்தில் உள்ள குறைகளை
கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
அவளை மீட்கவேண்டும் !


4. கணவன் மனைவியை
அடுத்தவர் முன்
அவமானப்படுத்தவே கூடாது !

மனைவி கணவனைப்பற்றி
அடுத்தவரிடம் மறந்தும்
கேவலமாகப் பேசவே கூடாது !


5. கணவன் குடும்பத்திற்கு
வேண்டியதை
சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் !

மனைவி கணவனின்
சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி
குடும்பத்தை நடத்தவேண்டும் !


6. கணவனை மனைவி
ஆத்மாவாக பார்க்கவேண்டும் !

மனைவியை கணவன்
ஆத்மாவாக உணரவேண்டும் !


 7. கணவனின் தர்ம காரியங்களுக்கு
மனைவி என்றுமே
உறுதுணையாக இருக்க வேண்டும் !

கணவன் என்றுமே 
மனைவியை தர்மகாரியங்களில்
ஈடுபடுத்தவேண்டும் !


8. எந்த ஒரு நிலைமையிலும்,
கணவன் மனைவியை
அடிமையாக நினைக்கவே கூடாது !

எந்த ஒரு அவசரத்திலும்,
மனைவி கணவனை
கேவலமாக நினைக்கவே கூடாது !


9. கணவனிடத்தில் மனைவி
எப்பொழுதும் உண்மையாகவே
இருக்கவேண்டும் !

மனைவியிடத்தில் கணவன்
எப்பொழுதும் ஒழுங்காக
நடந்துகொள்ளவேண்டும் !


10. கணவனின் பலம்,பலவீனம்,தேவை, 
ஆகியவற்றை மனைவி
நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் !

மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள்
ஆகியவற்றிற்கு கணவன்
மரியாதை அளிக்கவேண்டும் !


11. மனைவியை கணவன்
காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை
புரிந்து நடந்து கொள்ளவேண்டும் !

கணவனை மனைவி
தன் ஆசைகளை பூர்த்தி செய்யும்
ஒரு இயந்திரமாகப் பார்க்காமல்,
அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும் !


11. மனைவியின் முட்டாள்தனங்களையோ,
குறைகளையோ,உடல் அழகைப்பற்றியோ,
தவறுகளையோ, கணவன் மறந்தும்
அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது !

கணவனின் அசட்டுத்தனங்களையோ,
நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ,
மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
கலந்து பேசவே கூடாது !


12. எந்த சமயத்திலும் கணவன்
மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
என்று தீர்மானிக்கவே கூடாது !

மனைவி எந்த நிலைமையிலும்
  கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ,
விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !


13. ஒரு பொழுதுகூட மனைவி,
இவனை கணவனாக அடைந்துவிட்டோமே
என்று நினைக்கவே கூடாது !

ஒரு தடவை கூட,கணவன்,
இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !


14. என்றும் மனைவி அடுத்தவரின்
கணவரோடு தன் கணவனை
ஒப்பிட்டு நினைக்கவே கூடாது !

என்றும் கணவன் மற்றவரின்
மனைவியை, தன் மனைவியோடு
ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !


15. கணவனின் குடும்பத்தை
மனைவி தன் குடும்பமாக
பாவித்து சேவை செய்யவேண்டும் !

மனைவியின் குடும்பத்தை
கணவன் தன்னுடையவர்களாகக்
கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !


16. மனைவியின் உடல்நலத்தில் கணவன்
என்றுமே அக்கரை உடையவனாக
இருக்கவேண்டும் !

கணவனின் உடல்நலத்தில் மனைவி
எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து
கவனித்துக் கொள்ளவேண்டும் !


17. மனைவியானவள் கணவன் சொல்வதை
சரியாகப் புரிந்துகொண்டு,
அதன்படி நடக்க வேண்டும்.

கணவனானவன் மனைவி சொல்லும்
காரியங்களில் யோசனை செய்து,
தகுந்தபடி செயல்படவேண்டும் .


18. மனைவி கணவனுக்கு ஒரு
உத்தமமான மந்திரியைப் போல்
ஆலோசனை சொல்லவேண்டும் .

கணவன் மனைவியை ஒரு தோழியாக,
நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து 
அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !

19. என்றுமே மனைவி மலர்ச்சியான
முகத்தோடு கணவனுக்கு பணிவிடை
செய்யவேண்டும் !

என்றுமே கணவன் ஆனந்தமான
வார்த்தைகளால் மனைவிக்கு
அன்பைத் தரவேண்டும் !


20.  கணவன் மனைவியின் உடல்
தேவைகளை புரிந்துகொண்டு
அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும் !

மனைவி கணவனின் சுகத்திற்குத்
தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டு
ஆனந்தத்தைத் தர வேண்டும் !


21. கணவன், மனைவியின் குறைகளை
 பெரிதாக நினைக்காமல், அவளுடைய
உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !

மனைவி, கணவனின் குற்றங்களை
பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல
பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !


22.  கணவன் கோபப்படுகின்ற சமயத்தில்
மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் !

மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !


23.  கணவனின் தோல்விகளில் மனைவி
தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன்
வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !

மனைவியின் அவமானங்களில் கணவன்,
அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய
துக்கத்தை அழிக்கவேண்டும் !


24.  கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை
நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும்
மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் !


மனைவியின் நியாயமான தேவைகளை
பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக்
கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !

25.  கணவனின் அழகிலோ,குணத்திலோ,
 அறிவிலோ, மனைவி ஒரு நாளும்
அகம்பாவம் கொள்ளவே கூடாது !

மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ,
நல்ல குணங்களிலோ, கணவன் எந்த
ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !

இது போல் கோடி விஷயங்கள்
சொல்ல ஆசை !

இன்னொரு சந்தர்ப்பத்தில் மீதியைச்
சொல்லுவேன் !

இப்போதைக்கு முதலில்
இதில் சொன்னதை
கடைபிடித்துப் பார் !

உன் தாம்பத்தியமும் சிறக்கும் !

முயற்சி செய்து பார் ! ! !

 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP