ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜனவரி, 2010

ஹே மனமே!





ராதேக்ருஷ்ணா


  ஹே மனமே !


நீ ஏன் கலங்குகிறாய் !

நீ ஏன் புலம்புகிறாய் !

நீ ஏன் அழுகிறாய் !

நீ ஏன் துடிக்கிறாய் !

நீ ஏன் நொந்துபோகிறாய் !

நீ ஏன் துவண்டுபோகிறாய் !

நீ ஏன் நடுங்குகிறாய் !

நீ ஏன் உடைந்து போகிறாய் !

நீ ஏன் தவிக்கிறாய் !

நீ ஏன் பயப்படுகிறாய் !

நீ ஏன் குழம்புகிறாய் !

நீ ஏன் பரிதவிக்கிறாய் !

நீ ஏன் நம்பிக்கையை இழக்கிறாய் !

நீ ஏன் பலவீனமாகிறாய் !

ஹே மனமே நீ யாரென்று
உனக்கு நன்றாக தெரிந்துவிட்டால்
பிறகு நீ தெளிந்துவிடுவாய் . . . 

ஹே மனமே நீ யார் தெரியுமா ? ? ?

க்ருஷ்ணன் கீதையில் சொல்கிறான் . . .

"இந்திரியங்களுள் நான் மனதாக இருக்கிறேன்"

இப்பொழுது புரிந்ததா . . .

 ஆதலால் நீ க்ருஷ்ணனின் அம்சம் . . .

நீ க்ருஷ்ணனின் சக்தி . . .

நீ க்ருஷ்ணனின் சொத்து . . .

அதனால் இனியாவது


நீ கலங்காதிரு !

நீ புலம்பாதிரு !

நீ அழாமலிரு!

நீ துடிக்காமலிரு!

நீ நொந்துபோகாமலிரு !

நீ துவண்டுபோகாமலிரு !

நீ நடுங்காமலிரு!

நீ உடைந்து போகாமலிரு!

நீ தவிக்காமலிரு!

நீ பயப்படாமலிரு!

நீ குழம்பாமலிரு!

நீ பரிதவிக்காமலிரு !

நீ நம்பிக்கையை இழக்காமலிரு!

நீ பலவீனமாகாமலிரு!

உன்னால் முடியும் !

நம்பிக்கையோடு வாழ முடியும் !

உலகை வெல்ல முடியும் !

துன்பத்தை வெல்ல முடியும் !

கஷ்டங்களை வெல்ல முடியும் !

அவமரியாதைகளை வெல்ல முடியும் !

அசிங்கங்களை வெல்ல முடியும் !

நம்பிக்கை துரோகங்களை வெல்ல முடியும் !

வியாதிகளை வெல்ல முடியும் !

 குழப்பங்களை வெல்ல முடியும் !

குடும்பத் தகராறுகளை வெல்ல முடியும் !

காலத்தை வெல்ல முடியும் !

முடியும்...முடியும்...முடியும்...
ஹே அற்புதமான மனமே !
உன்னால் முடியும்...

க்ருஷ்ணனும் கீதையில்
"மனதை என்னிடம் தா"
என்று உன்னையே கேட்கிறான் !

ஸ்வாமி நம்மாழ்வாரும்
"துயரரு சுடரடி தொழுதெழு என் மனமே"
என்று உனக்கே சொல்கிறார் !

ஸ்ரீ குலசேகர ஆழ்வாரும்
"மனம் என்னும் ராஜஹம்சம் இப்பொழுதே
க்ருஷ்ணனின் திருவடியில் லயமாகட்டும்"
என்று உனக்காகவே கெஞ்சுகிறார் !

அதனால் சமத்து மனமே !

நீ தான் மனித வாழ்வின் பலம்...
நீ தான் மனித வாழ்வின் ஆதாரம்...
நீ தான் மனித வாழ்வின் ரஹஸ்யம்...

நீ தான் மனிதனை மனிதனாக்குகிறாய்...

உன்னால் தான் மனிதனிடத்தில்
மாற்றத்தை உண்டுபண்ணமுடியும் . . .

ஹே மனமே !
 க்ருஷ்ணா என்று சொல்...
க்ருஷ்ணனை நினை...

உன்னால் முடிகிறதல்லவா . . .

அவ்வளவு தான்...
இனி
உனக்கு ஆனந்தம் மட்டுமே . . .
 
 






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP