ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, January 27, 2010

சொல்ல மறந்த வார்த்தை !


ராதேக்ருஷ்ணா !

உலகில் எல்லோருக்கும் தினமும் பலமுறை 
சொல்லும் அற்புதமான வார்த்தை

எத்தனையோ பேருக்கு தினமும்
நாம் சொல்லும் வார்த்தை..

நம்முடைய  மனதில்  சந்தோஷத்தை  
வெளிப்படுத்தும்  ஒரு  வார்த்தை

வாழ்வின் கடைசி வரை சொல்லியே ஆக வேண்டிய  ஒரு வார்த்தை

உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் மிகச் சிறந்த ஒரு வார்த்தை

எத்தனையோ பேருக்கு சொல்லும் வார்த்தை

சில விஷயங்களுக்கும் சிலருக்கும்
 சொல்ல மறந்த ஒரு வார்த்தை


அந்த வார்த்தை... நன்றி
இனி சொல்வாய்....
இன்றிலிருந்து சொல்வாய்...
இப்பொழுதிலிருந்து சொல்வாய்...
சொல்லிப் பார்..


கண்களே உன்னால் நான் 
உலகைப் பார்க்கிறேன்
உங்களுக்கு நன்றி
காதுகளே உங்களால் நான் கேட்கிறேன்
உங்களுக்கு நன்றி
மூக்கே உன்னால்  நான் சுவாசிக்கிறேன்
உனக்கு நன்றி
நாக்கே உன்னால் நான் ருசிக்கிறேன்
உனக்கு நன்றி
வாயே உன்னால் நான் பேசுகிறேன்
உனக்கு நன்றி
தோலே உன்னால் நான் உணர்கின்றேன்
உனக்கு நன்றி

கைகளே உன்னால் நான்
வேலை செய்கிறேன்
 உங்களுக்கு நன்றி

கால்களே உங்களால் நான் நடக்கிறேன் 
உங்களுக்கு நன்றி

பற்களே உங்களால் நான் மெல்லுகின்றேன்
உங்களுக்கு நன்றி

இமைகளே உங்களால் நான் சிமிட்டுகின்றேன் 
உங்களுக்கு நன்றி

பூமியே உன் மடி மீது வாழ்கின்றேன் 
உனக்கு நன்றி

மேகமே உன்னால் மழையை 
அனுபவிக்கின்றேன்
உனக்கு நன்றி

காற்றே உன்னால் உயிர் வாழ்கிறேன்
உனக்கு நன்றி

சூரியனே உன்னால்
வெளிச்சத்தை  உணர்கின்றேன் 
உனக்கு நன்றி

சந்திரனே உன்னால் இருளும்
அழகாகின்றது
உனக்கு நன்றி

இரவே உன்னால் உறங்குகின்றேன்
உனக்கு நன்றி

பகலே உன்னால் வேலை செய்கின்றேன்
உனக்கு நன்றி

ஆகாரமே உன்னால் பலமடைகின்றேன்
உனக்கு நன்றி

செருப்பே உன்னால் பாதங்கள்
நன்றாக இருக்கிறது
உனக்கு நன்றி

எழுதுகோலே உன்னால் எழுதுகிறேன்
உனக்கு நன்றி

விளக்கே உன்னால் இரவிலும்
பார்க்கின்றேன்
உனக்கு நன்றி 

தாயே உன்னால் உலகில் பிறந்தேன்
உனக்கு நன்றி

தந்தையே உன்னால் உற்பத்தி ஆனேன்
உனக்கு நன்றி

வயதானவர்களே உங்களின் அனுபவத்தில்
பல கற்றுக்கொண்டேன்
உங்களுக்கு நன்றி

மரங்களே உங்களின் நிழலில்
ஒதுங்குகின்றேன் 
உங்களுக்கு நன்றி

பழங்களே உங்களால் இனிப்பின் பல
பரிமாணத்தை அனுபவிக்கின்றேன்
உங்களுக்கு நன்றி

தண்ணீரே உன்னால் தாகம் தணிகிறேன்
உனக்கு நன்றி

கடிகாரமே உன்னால் நேரம் அறிகின்றேன் 
உனக்கு நன்றி

தலையணையே உன்னால் படுக்கையில் 
சுகமாய் இருக்கிறேன் 
உனக்கு நன்றி
   
படுக்கையே உன்னால் சுகமாய்
விழித்திடுகிறேன்
உனக்கு நன்றி

      தோழர்களே/தோழிகளே உங்களால்
நட்பை அனுபவிக்கிறேன்
உங்களுக்கு  நன்றி

சகோதரர்களே/சகோதரிகளே உங்களால்
 சகோதரத்துவத்தை ரசிக்கிறேன்
    உங்களுக்கு நன்றி

         ஆசிரியர்களே உங்களால் அறிவு
பெறுகிறேன்
உங்களுக்கு நன்றி

புத்தகமே உன்னால் படிக்கிறேன்
உனக்கு நன்றி

மின்சாரமே உன்னால் பல நன்மை
அடைகிறேன்
உனக்கு நன்றி

செயற்கைகோளே உன்னால் உலகை
ரசிக்கிறேன்
உனக்கு நன்றி

பூக்களே உங்களிடமிருந்து அழகை
புரிந்து கொண்டேன்
உங்களுக்கு நன்றி 

கணவனே/மனைவியே உன்னால் 
தாம்பத்தியம் அனுபவிக்கிறேன்
உனக்கு நன்றி 

குழந்தைகளே உங்களிடமிருந்து அன்பை
தெரிந்து கொள்கிறேன்
உங்களுக்கு நன்றி

மொழிகளே உங்களால் என் மனதை
வெளிப்படுத்துகின்றேன்
உங்களுக்கு நன்றி

மழையே உன்னால் ஆகாரமும்
தண்ணீரும் அனுபவிக்கிறேன்
உனக்கு நன்றி

நெருப்பே உன்னால் பல நன்மை
அடைகிறேன்
உனக்கு நன்றி

வேலைகாரர்களே உங்களால் பல
வேலைகள் சுலபமாகின்றன 
உங்களுக்கு நன்றி 

விஞ்ஞானிகளே உங்களால் பல 
உபகாரங்களை அனுபவிக்கிறேன் 
உங்களுக்கு நன்றி

தொலைப்பேசியே உன்னால் பலருடன் 
உரையாடுகின்றேன் 
உனக்கு நன்றி 

கைப்பேசியே உன்னால் எல்லா 
இடங்களிலிருந்தும் பேசுகிறேன்
உனக்கு நன்றி

இது போல் இன்னும் கோடி பேருக்கு 
கோடி விஷயங்களுக்கு நன்றி 
சொல்ல மறந்து விட்டோம் 

இனி மறக்காமல் சொல் 
சொல்ல சொல்ல சுகமாய் இரு 

இன்னும் சில நன்றிகளும் 
மறக்காமல் சொல்ல வேண்டும் 

சத்சங்கமே உன்னால் நானும் 
சுத்தமாகிறேன்
உனக்கு நன்றி 

பக்தர்களே உங்களால் நானும்
பக்தி செய்கிறேன் 
உங்களுக்கு நன்றி

பக்தியே உன்னால் நான் பகவானை 
உணர்கின்றேன் 
உனக்கு நன்றி 

ஞானிகளே உங்களால் ஞானத்தை 
தெரிந்து கொள்கிறேன் 
உங்களுக்கு நன்றி 

நாமஜபமே உன்னால் பகவானை 
அனுபவிக்கிறேன் 
உனக்கு நன்றி 

க்ருஷ்ணனே உன்னால் தான்
இவை எல்லாவற்றையும் நான்
அனுபவிக்கின்றேன்  
உனக்கு நன்றி 

ராதையே உன்னால் தான் பிரேமை 
புரிகின்றது 
உனக்கு நன்றி     

சத்குருவே உங்களால் தான் இத்தனையும்
புரிந்தது புரிகின்றது 
இன்னும் பலவும் புரியப் போகிறது 

அதனால் உங்களுக்குத் தான் 
விசேஷமான நன்றி 

சத்குருநாதா மற்ற எல்லாருடைய 
கடனையும் நான் நன்றி சொல்லி 
தீர்த்து விடுவேன் 

ஆனால் உமக்கு நான் பட்டிருக்கும் 
கடனை ஒரு நாளும் 
அடைக்கவே முடியாது   

என்றும் எபோழுதும் எல்லா
ஜன்மாவிலும் சத்குருநாதா 
உங்களுக்கு நான் 
நன்றிக் கடன் பட்டவனே

என்றும் இந்த நன்றிக் கடன்
மாறாதிருக்க ஒரு 
ஆசீர்வாதம் செய்யுங்கள்!!!0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP