ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, January 31, 2010

மீண்டும் ஒரு முறை !


ராதேக்ருஷ்ணா

ஜனனம் என்பது உலகில்
தினம் தினம்
நிகழும் ஒரு அற்புதம் !

பகவானுடைய அருளினால்
மட்டுமே உலகில் உள்ள
பல ஜீவராசிகளின் வம்சம்
வளர்கிறது !

அவனுடைய அனுக்ரஹத்தை
வாங்கி அனுபவிக்க நாம்
விடாமல் ப்ரார்த்தனை
செய்யவேண்டும் !

அதிலும் மனித உருவில்
பல சந்தர்ப்பங்களில்
மஹாத்மாக்களும், மஹதிகளும்
அவதாரம்
செய்து கொண்டேயிருக்கிறார்கள் !

எத்தனையோ பக்தர்களும்,
பக்தைகளும் இந்த பூமியில்
அவதாரம் செய்தார்கள் !

அவர்கள் அத்தனைபேரையும்
சரித்திரமாகத் தான் நாம்
இன்று அனுபவிக்கிறோம் !

உன்னதமான பக்தி உள்ளவர்களுக்கு
மஹாத்மாக்கள், மஹதிகள்
ப்ரத்யக்ஷத்திலோ,கனவிலோ
தினமும் தரிசனம் தருகிறார்கள் !

எனக்கு ஒரு ஆசை !
எனக்கு ஒரு ப்ரார்த்தனை !
எனக்கு ஒரு தேடல் !

மீண்டும் ஒரு முறை
பக்த கூட்டம் பூமியில்
வரவேண்டும் . . .

அகம்பாவத்தை ஒழித்த
விதுரர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

சஹஸ்ர நாமம் ஜபித்த
பீஷ்மபிதாமஹர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ஸ்ரீ மத் பகவத் கீதையைக் கேட்ட
அர்ஜுனன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

கோபிகைகளிடம் தூது சென்ற
உத்தவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை வயிற்றில் சுமந்த
தேவகி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை பிள்ளையாய் பெற்ற
வசுதேவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்குத் தாய்ப்பால் தந்த
யசோதை
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்குப் பிடித்த
நந்தகோபர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை ஸ்தோத்திரம் செய்த
குந்திதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு ராசம் ஆடிய
கோபிகைகள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு வெண்ணை திருடிய
கோப குழந்தைகள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்கு மாலை தந்த
மாலாகாரன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை கன்றாக அனுபவித்த
கோமாதாக்கள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .


க்ருஷ்ணனையே அனுபவித்த
ஸ்வாமி நம்மாழ்வார்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை குழந்தையாக அனுபவித்த
பெரியாழ்வார்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை காதலனாக அனுபவித்த
எங்கள் ஆண்டாள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

பலராமனாய் வந்த ஆதிசேஷனாகிய
ராமானுஜன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணப்ரிய கோபியான
மீரா தேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண ப்ரேம ரசிகையான
ஜனாபாய்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷணனுக்கு இதயத்தைத் தந்த
சாவ்தாமாலி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு கோலிகுண்டு விளையாடிய
கோவிந்ததாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண ப்ரேம ரஹஸ்யம் சொன்ன
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண லீலையில் திளைத்த
சூரதாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைத் திரும்பி நிற்கவைத்த
கனகதாசர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை சாக்ஷி சொல்ல வைத்த
கல்யாண ப்ரம்மச்சாரி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைப் பாயசம் திருட வைத்த
மாதவேந்திரபுரி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ஜபத்தால் க்ருஷ்ணனை அடைந்த
ஹரிதாஸ் யவன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதா க்ருஷ்ண லீலையைப் பாடிய
ஜயதேவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்காக சர்வத்தையும் விட்ட
ஹஸீனா, ஹமீதா
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனையே பர்தாவாக அடைந்த
விஷ்ணுப்ரியாதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .க்ருஷ்ணனைத் திருடிக்கொண்டு போன
த்வாரகா ராமதாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைக் குட்டனாகக் கொஞ்சிய
பூந்தானம்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண லீலையில் திளைத்த
லீலா சுகர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் அஷ்டசகிகள்
லலிதா,விசாகா,செண்பகலதா,சித்ரா,
துங்கவித்யா,இந்துலேகா,ரங்கதேவி,சுதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

 
ராதா சுதா நிதி பாடிய
ஹிதஹரி வம்ச மஹாப்ரபு
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் அந்தரங்க தாஸிகளான
சனாதன கோஸ்வாமியும், ரூப கோஸ்வாமியும்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் தர்சனம் அனுபவித்த
த்ருவதாஸன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .


என் ஆசை தீரவில்லை . . .
இன்னும் ப்ரார்த்தனை இருக்கிறது...


ஆனாலும் என் ராதிகாவுக்கும்,

க்ருஷ்ணனுக்கும்தான்
என் ஹ்ருதயம் தெரியுமே !

நான் என்ன சொல்ல . . .?


இன்னும் பல க்ருஷ்ண பக்தர்கள்
வரவேண்டும் !


இந்த உலகம் முழுவதும்
க்ருஷ்ண பக்தியில் திளைத்து
ப்ரேம சாம்ராஜ்யமாக
ஆகவேண்டும் ! ! !


எல்லா க்ருஷ்ண பக்தர்களும்
ஒன்றாக ஒரே சமயத்தில்
இந்த பூமிக்கு வரவேண்டும் !


கலியுகம்
பக்தியுகமாக வேண்டும் !


க்ருஷ்ண பக்த சங்கமம்
இந்த பூமியில்
நடக்க வேண்டும் . . .


நானும் ஒரு கோடியில்
நின்று
அதை ரசிக்க வேண்டும் . . .


வருகின்ற க்ருஷ்ண பக்தர்கள்
அனைவரின் திருவடிகளையும்
அலம்ப வேண்டும் . . .
க்ருஷ்ண பக்த பாத தீர்த்தத்தை
அள்ளிப் பருக வேண்டும் . . .


அத்தனை பக்தர்களுக்கும்
கழுத்தில் மாலையிட்டு,
நெற்றியில் திலகமிட்டு,
தலையில் மலர் தூவி,
ஜய கோஷம் பாடி,
ஆனந்த நர்த்தனமாடி,
ஆலத்தி வழித்து
வரவேற்க வேண்டும் . . .

பக்தர்களுக்கு
தலைவாழை இலை போட்டு,
அறுசுவை அன்னம் பரிமாறி,
அவர்களுக்குத் தாம்பூலம்
மடித்துத் தரவேண்டும் . . .

அதன்பிறகு அவர்களுடைய
உச்சிஷ்ட ப்ரசாதத்தை
நன்றாக அனுபவிக்க வேண்டும் . . .


பக்தர்களோடு பஜனையில்
ஈடுபட்டு க்ருஷ்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .


இரவில் பக்தர்களோடு
காலார நடந்து கொண்டு
சத் சங்கத்தை
அனுபவிக்கவேண்டும் . . .


பக்தர்களோடு பக்தி
பாஷையில் பேசிப்
பரிகசித்துச் சிரித்து
மகிழவேண்டும் . . .


பக்தர்களோடு ஒன்றாக
ராதா க்ருஷ்ண த்யானத்தோடு,
தூங்கவேண்டும் . . .

பக்தர்களோடு விடியற்காலையில்
எழுந்து, புன்னகைத்துக்கொண்டு
"ராதேக்ருஷ்ணா" என்று 
உரக்க விண்ணைப் பிளக்கும்படி
கோஷிக்க வேண்டும் . . .


பக்தர்களோடு ஆனந்தமாக
ப்ரேம நதியில்
ஜலக்ரீடை செய்யவேண்டும் . . .


இப்படியே ஒரு வாழ்க்கை
வாழ வேண்டும் . . .


பக்தர்களைப் பார்த்துக் கொண்டு,
பகவன் நாமத்தை ஜபித்துக் கொண்டு,
ப்ரேமையில் சிலிர்த்துக் கொண்டு,
கண்களில் கண்ணீர் வழிய,
அப்படியே இந்த உடலை விட வேண்டும் . . .


மீண்டும் பக்தர்களின் கூட்டத்தோடு
வர வேண்டும் . . .


மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்படியே ஒரு வாழ்க்கை
அனுபவிக்க வேண்டும் ! ! !

அதற்கு

க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

அதற்கு
சத்குருநாதா ஒரு வாய்ப்பு தா !

 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP