ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2010

இல்லை என்று சொல் !





ராதேக்ருஷ்ணா 


இல்லை என்று சொல் !


நீ தினமும் சொல்லும்
சாதாரணமான,
ஆனால் பலமுடைய
ஒரு வார்த்தை . . .


இந்த வார்த்தையை
உபயோகிக்காத நாட்களே
இல்லை . . .


இந்த வார்த்தையைச்
சொல்லாத மனிதர்களே
இல்லை . . .


இந்த வார்த்தையைத்
தெரியாதவர்களே
இல்லை . . .

"இல்லை" என்கிற வார்த்தை
உன் வாழ்க்கையையே
மாற்றும் பலமுடையது !

இனியும் "இல்லை" என்று சொல் . . .

இனி பயம் இல்லை என்று சொல் !

இனி குழப்பம் இல்லை என்று சொல் !

இனி சோம்பல் இல்லை என்று சொல் !

இனி பலவீனம் இல்லை என்று சொல் !

இனி அவநம்பிக்கை இல்லை என்று சொல் !

இனி நஷ்டம் இல்லை என்று சொல் !

இனி தோல்வி இல்லை என்று சொல் !

இனி துரோகம் இல்லை என்று சொல் !

இனி பிரச்சனை இல்லை என்று சொல் !

இனி வியாதி இல்லை என்று சொல் !

இனி பிரிவினை இல்லை என்று சொல் !

இனி தொந்தரவு இல்லை என்று சொல் !




இனி அழுகை இல்லை என்று சொல் !

 இனி சண்டை இல்லை என்று சொல் !

இனி சந்தேகம் இல்லை என்று சொல் !

இனி அகம்பாவம் இல்லை என்று சொல் !

இனி சுயநலம் இல்லை என்று சொல் !

இனி  நெஞ்சில் சுமை இல்லை என்று சொல் !

இனி வயிற்றெரிச்சல் இல்லை என்று சொல் !

இனி பொறாமை இல்லை என்று சொல் !

இனி துன்பம் இல்லை என்று சொல் !

இனி அழுக்கு இல்லை என்று சொல் !

இனி அசிங்கம் இல்லை என்று சொல் !

இனி மனப்புழுக்கம் இல்லை என்று சொல் !

இனி சஞ்சலம் இல்லை என்று சொல் !

இனி நாஸ்தீகம் இல்லை என்று சொல் !

இனி விரோதி இல்லை என்று சொல் ! 

சொல்...சொல்...சொல்...

ஒவ்வொரு நாளும் சொல்....
காலையும்,மாலையும்,இரவும் சொல்...

இவைகள் இனி இல்லவேயில்லை
என்ற நிலை வரும் வரை
விடாது "இல்லை" என்று சொல் . . .

இவைகளை இல்லாமல்
செய்யும் காலம் வரும்...

அதில் சந்தேகம் இல்லை . . .

எங்கள் இந்து மதம் 
அழிவதில்லை
 என்று சொல் ...

எங்கள் பாரதம்
தோற்பதில்லை
என்று சொல் ...

எங்கள் உறுதி
தளர்வதில்லை
என்று சொல் ...

சொல்லிக்கொண்டேயிரு...

இனி உடலில் உயிரில்லை
என்ற நிலை வரும் வரை
சொல்லிக்கொண்டேயிரு . . .





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP