ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, February 28, 2010

மாயை விலகட்டும் !ராதேக்ருஷ்ணா
உன்னை யாரும் குழப்பவில்லை !
நீயே குழம்புகிறாய் !


உன்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை !
நீயே உன்னைக் கஷ்டப்படுத்துகிறாய் !


உன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை !
நீயே அவமானத்தை வலிய வாங்குகிறாய் !


உன்னை யாரும் தோற்கடிக்கவில்லை !
நீயே தோல்வியை நாடுகிறாய் !


உன்னை யாரும் நேசிக்கவில்லை !
நீயாக கற்பனை செய்கிறாய் !


உனக்கு யாரும் விரோதியில்லை !
நீயே மற்றவரை விரோதிக்கிறாய் !


உன்னை யாரும் கொண்டாடவில்லை !
நீயே அவ்வாறு நினைக்கிறாய் !


உனக்கு யாரும் உதவவில்லை !
நீயாக அப்படி மயங்குகிறாய் !


உன்னை எதுவும் பயமுறுத்தவில்லை !
நீ தானாகப் பயப்படுகிறாய் !


உன்னுடையதை யாரும் அபகரிக்கவில்லை !
நீயாக ஜாக்கிரதை செய்கின்றாய் !


உன் மனதை யாரும் காயம் செய்யவில்லை !
நீயாக அதை புண்ணாக்குகிறாய் !


உன்னிடத்தில் பலர் உண்மையாகயில்லை !
நீயாக நடிப்பை நம்புகின்றாய் !


ஏன் . . . ஏன் . . . ஏன் . . .


எல்லாம் மாயையின் பலம் !
உலகைப் புரட்டிப்போடும் பலமான சக்தி !


ஸ்ருஷ்டி கர்தா ப்ரும்மதேவர் முதல்
சிறிய எறும்பு வரை தன்னையறியாமல்
உழன்று கொண்டிருக்கும் வலை !


சுகமெல்லாம் துக்கம் போலே தெரியும் . . .
துக்கமெல்லாம் சுகம்போலே மயக்கும் . . .


நல்லவரெல்லாம் விரோதியாய் தெரிவர் . . .
பாவிகளெல்லாம் நல்லவராய் தெரிவர் . . .


நிலையானது எல்லாம் பொய்யென குழப்பும் !
நிலையில்லாதது எல்லாம் மெய்யென மயக்கும் !


தேஹ பந்தங்கள் உயர்ந்ததாய் ஏற்கப்படும்!
ஆத்ம பந்தங்கள் தாழ்வாய் விலக்கப்படும் !


சத் சங்கம் கசக்கும் !
துஷ்ட சங்கம் இனிக்கும் !


சத்குரு சுயநல சிகாமணியாய் தெரிவார் !
ரத்தபந்தங்கள் தியாக சிகாமணிகளாய் மிளிர்வார் !


வாய்ச்சொல்லில் வீரர்களை சாதனையாளராக
ஏற்கும் !
உள்ளபடி சாதனையாளர்களை முட்டாள்களாக
தூற்றும் !


இந்த மாயையை ஜயிக்காமல் வாழ்வில்
நிம்மதியில்லை !
இந்த மாயையைத் தாண்டாமல்
வெளிச்சம் இல்லை !
இந்த மாயை விலகாமல்
சுகமில்லை !


இந்த மாயையிலிருந்து நீ விலகினால்
அது உன்னை விட்டு விலகும் !
நீ கொஞ்சம் மயங்கினால்
அது உன்னை அடிமையாக்கும் !
நீ கொஞ்சம் கொஞ்சினால்
அது உன்னை அழிக்கும் !
நீ கொஞ்சம் மிஞ்சினால்
அது உனக்கு அடிமையாகும் !
நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்
அது உன்னைத் தள்ளிவிடும் !


இந்த மாயை விலகட்டும் !


பந்தம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அகம்பாவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பெருமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விறுப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெறுப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆசை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழுக்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழகு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாசம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குழப்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கோபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிவாதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொறாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுயபச்சாதாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


எதிர்பார்ப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நல்லவர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கெட்டவர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அருவருப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசிங்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அவமானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அல்பத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரத்தபந்தங்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடித்தவர்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிக்காதவர்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தெரியும் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துன்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பேராசை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வீண்பேச்சு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெட்டிப்பொழுது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வம்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குறைசொல்லுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கோள்சொல்லுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துஷ்ட சங்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொழுதுபோக்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அடிமைத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அடிமையாக்கும் எண்ணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பெண் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆண் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


காமம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தேடல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிரச்சனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குடும்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கௌரவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதர்மம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


காதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நோய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுதந்திரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுயநலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தோல்வி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெற்றி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விரோதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாசம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழுகை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோம்பேறித்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


லாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஜனனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


மரணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அபிமானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறியாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அலட்சியம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசிரத்தை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திட்டுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திருஷ்டி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


செய்வினை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சந்தேகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புகழ் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாரபட்சம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அநியாயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதர்மம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பதவி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


செல்வம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வயிற்றெரிச்சல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நடிப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெளிவேஷம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கருமித்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆடம்பரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதிசயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாஸ்தீகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அவநம்பிக்கை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துரோகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஒழுங்கீனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஏமாற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கற்பனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கனவுகள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புலம்பல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிவாதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திமிர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உரிமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கடன் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வஞ்சகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சூழ்ச்சி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அனாதை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறிவாளி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அஞ்ஞானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறியாத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசுத்தம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பயங்கரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பலவீனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கொலை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தற்கொலை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இயலாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இறந்தகாலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


எதிர்காலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தப்பித்தல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குறை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தனிமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உறவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தூரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நெருக்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பைத்தியம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புத்திசாலி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தடங்கல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அபசகுணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அத்ருஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துரத்ருஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இம்சை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கொடுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாகரீகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விஞ்ஞானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ராசி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரத்தினங்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தோஷம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புதியது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழையது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழக்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புதுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாதனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோதனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வலி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாராட்டு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பேய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிசாசு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாத்தான் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பங்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சலிப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சரிவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சண்டை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சலனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சஞ்சலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரஹஸ்யம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிரிவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சேர்க்கை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஏழ்மை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தவறு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உளரல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நொந்துபோகுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நோகடித்தல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


மறதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தடுமாற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இன்னும் சொல்லாத,
சொல்லமுடியாத,மாயையின்
பல பரிமாணங்கள்
உன்னை விட்டு விலகட்டும் !


இத்தனை விதமான மாயையின்
தன்மைகளும்
உன்னை விட்டு விலகினால்
எப்படியிருக்கும் தெரியுமா ? ! ?


ஆனால் இத்தனையும் உடனே
விலகுமா . . .


ஏன் விலகாது . . .


மாயைக்கு அதிபதியான
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனைப்
பிடித்தால் மாயை ஓடிவிடும் !


க்ருஷ்ணனின் சரணகமலத்தில்
அடைக்கலம் அடைந்துவிடு !


க்ருஷ்ண நாமத்தில்
பூரண நம்பிக்கை வைத்துவிடு !


க்ருஷ்ண ரூபத்தில்
மனதை நிறுத்தி விடு !


க்ருஷ்ண லீலைகளை
காதால் கேட்டு விடு !


க்ருஷ்ண பஜனையில்
புத்தியை கொடுத்து விடு !


க்ருஷ்ண நாம சங்கீர்த்தனத்தை
நாவால் ஜபித்து விடு !


க்ருஷ்ணனுக்காக உன்
கடமைகளை செய்து விடு !


க்ருஷ்ணனுக்காக உன்
வாழ்க்கையை தந்து விடு !


க்ருஷ்ணனிடத்தில் உன்னை
சமர்ப்பித்து விடு !


பிறகு மாயை உன் சேவகன் !


உன்னை விட்டு மாயை
விலகியே நிற்கும் . . .


சீக்கிரம்...இதோ மாயை
உன்னை ஆட்டிப்படைக்கிறது . . .


ஸ்வாமி நம்மாழ்வாரைப்போல்
கோபத்துடன் மாயைத் துரத்து . . .


இன்னும் எத்தனை காலம்
வாழ்க்கையோ...தெரியாது ?


ஆனால் அதில்
ஞானியாக வாழ்ந்து விடு . . .
பக்தனாக/பக்தையாக வாழ்ந்து விடு . . .
நிம்மதியாக வாழ்ந்து விடு . . .


மாயையே ஓடிப் போ . . .
க்ருஷ்ணனே என்னுடன் இருக்கிறான். . .
ராதிகாவே என்னை ஆசீர்வதித்திருக்கிறாள் . . .


ஓம் சாந்தி...சாந்தி...சாந்தி...

Read more...

Wednesday, February 17, 2010

ஆற்றங்கரை . . .


ராதேக்ருஷ்ணா

ஆற்றங்கரை . . .

கவிஞருக்கும் பிடிக்கும் . . .
குழந்தைக்கும் பிடிக்கும் . . .
இளைஞருக்கும் பிடிக்கும் . . .
முதியோருக்கும் பிடிக்கும் . . .
 பறவைகளுக்கும் பிடிக்கும் . . .
விலங்கினங்களுக்கும் பிடிக்கும் . . .
தாவரங்களுக்கும் பிடிக்கும் . . . 
 
நாஸ்தீகருக்கும் பிடிக்கும் . . .
ஆஸ்தீகருக்கும் பிடிக்கும் . . .

நம்முடைய சனாதன இந்து
தர்மத்தில்,இதிஹாசங்களிலும்,
புராணங்களிலும்,பக்த வைபவங்களிலும்
பல கோடி விஷயங்கள்
ஆற்றங்கரையைப் பற்றிக்
கொட்டிக் கிடக்கிறது . . .

கொஞ்சம் பக்தி ஆற்றின்
கரையில் புரளுவோம் . . .
புரண்டு எவ்வளவு ஒட்டுகிறதோ
அதை அள்ளிக்கொண்டு,
மூட்டை கட்டிக்கொண்டு,
மோக்ஷம் வரை செல்வோம் வா . . .

பிள்ளையில்லாத தசரதன்,
ரிஷ்ய ஸ்ருங்க ரிஷியின் உத்தரவோடு
புத்ர காமேஷ்டி யாகம் செய்தது,
சரயு ஆற்றின் கரையில் !

சீதையைப் பிரிந்த ராமன்,
லக்ஷ்மணனோடு சபரியைச் சந்தித்து
அவள் தந்த பழங்களை ஏற்றது,
பம்பையாற்றின் கரையில் !

பகவான் க்ருஷ்ணன் மாடு மேய்க்கும்
சிறுவர்களோடு,கன்றுகளை மேய்த்து,
அவைகளை நீரூட்டி விளையாடினது,
யமுனையாற்றின் கரையில் !

தேவரிஷி நாரதர்,மனம் குழம்பியிருந்த
வேதவ்யாஸருக்கு ஸ்ரீ மத் பாகவதத்தை
எழுதக் கட்டளையிட்டது
சரஸ்வதியாற்றின் கரையில் !

சுகப்ரும்ம மஹரிஷி,7 நாளில் மரணம்
என்கிற நிலையிலிருந்த பரீக்ஷித்து ராஜனுக்கு
ஸ்ரீ மத் பாகவதத்தைச் சொன்னது
கங்கையாற்றின் கரையில் !

யக்ஞம் செய்துகொண்டிருந்த சௌனகாதி
ரிஷிகளின் கேள்விகளுக்கு, சூத பௌராணிகர்
ஸ்ரீ மத் பாகவதத்தைப் பதிலாகச் சொன்னது
கோமுகியாற்றின் கரையில் !

தன் ப்ரிய சிஷ்யனான ராமானுஜருக்கு
ஏற்ற சமையல் செய்யும் சிஷ்யனாக
கிடாம்பியாச்சானை,திருக்கோஷ்டியூர் நம்பி
தேர்வு செய்தது காவேரியாற்றின் கரையில் !

பலவிதமான ப்ரேம ரஹஸ்யங்களை
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்,
ராஜா ராமானந்தரும் பேசிக்கொண்டது
கோதாவரியாற்றின் கரையில் !


திருமங்கையாழ்வாருக்கு ததீயாராதனத்திற்கு
தேவையான தனத்தை காஞ்சி வரதராஜர்
காட்டியருளியது
வேகவதியாற்றின் கரையில் !

தன்னுடைய ஆசார்யனான ஸ்வாமி ஆளவந்தாரைப்
பிரிந்த தெய்வவாரியாண்டான் அவரைக்
கண்டு சேவித்து ஆனந்தித்தது
திருவனந்தபுரம் கரைமனையாற்றங்கரையில் !

ஸ்வாமி இராகவேந்திரர் தான்
ஜீவ சமாதியடைய தேர்ந்தெடுத்த
மாஞ்சாலை கிராமம் இருப்பது
துங்கபத்திரா ஆற்றங்கரையில் !

புண்டலீகனின் ப்ரார்த்தனைக்காக
அவன் கொடுத்த செங்கல்லின் மேல்
க்ருஷ்ணன் பாண்டுரங்கனாக நிற்பது
சந்திரபாகா ஆற்றின் கரையில் !

ஞானத்தை உலகோற்கு உபதேசம்
செய்து,பக்தியை நிரூபித்த
ஞானேஸ்வரர் ஜீவ சமாதியடைந்தது
இந்திரயாணி ஆற்றங்கரையில் !

கலியும் கெடும் என்று சொன்ன
மாறன் சடகோபன் வகுளாபரணன்
ஸ்வாமி நம்மாழ்வார் இருப்பது
தாமிரபரணி ஆற்றங்கரையில் !

ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
கைகளில் கிடைத்தது
க்ருஷ்ணவேணி ஆற்றங்கரையில் !
 


க்ரௌஞ்ச பக்ஷிகளின் துக்கத்தைச்
சகிக்கமுடியாத வால்மீகி மஹரிஷியின்
திருவாயிலிருந்து ஸ்ரீ மத் ராமாயணம்
வெளிவந்தது தமஸா ஆற்றங்கரையில் !

ஸ்ரீ ராமன்,லக்ஷ்மணனோடும்,முனிவர்களோடும்,
விஸ்வாமித்திரரின் சத்சங்கத்தைக் கேட்டு
அனுபவித்து இரவு தங்கியிருந்தது
உன்னதமான சோணா ஆற்றங்கரையில் !

அக்ஷோப்ய தீர்த்தரின் ப்ரார்த்தனைக்கு
வசப்பட்டு ஸ்ரீ மத்வாசார்யார் அவருக்கு
சத் சிஷ்யனைக் காட்டிக்கொடுத்தது
பீமா ஆற்றங்கரையில் !

சுந்தர பரிபூரண நம்பி ராயரான
திருக்குறுங்குடி திருமலை நம்பி
ஆனந்தமாய் வசிப்பது
தெளிந்த நம்பி ஆற்றங்கரையில் !

தன்னுடைய பக்த ஜனங்களுக்கென
ஸ்ரீ க்ருஷ்ணன் உருவாக்கிய
த்வாரகாபுரி இருப்பது கடலோடு
சங்கமிக்கும் கோமதி ஆற்றங்கரையில் !

உலகையே மயக்கும் கள்ளழகர்
மீனாக்ஷி திருக்கல்யாணத்திற்காக
செல்வதைப் பார்க்க ஜனங்கள் காத்திருப்பது
அற்புதமான வைகை ஆற்றங்கரையில் !


இன்னும் இதுபோலே
நர்மதா,மணிமுத்தாறு,அம்பலப்புழா,
பாரதப்புழா,சிந்து,பாலாறு என்று
எத்தனையோ ஆற்றின் கரைகளில்
பல அற்புதமான பக்தி வைபவங்கள்
அரங்கேறியுள்ளது !

நான் சொன்ன வைபவங்களும்
மிகவும் கொஞ்சம் தான் !

ஒவ்வொரு நதியின் கரையிலேயே
பல நூறு வைபவங்கள்
பக்தியை இன்னும் அழகாகச்
சொல்லிக்கொண்டிருக்கின்றன !

இந்த ஆறுகளில் நீராடி,
இந்த ஆற்றின் கரைகளில்,
பக்தியுடன் நாம ஜபம் செய்து,
பகவானைப் ப்ரார்த்தனை செய் !

நேரம் கிடைத்தால் கொஞ்சம்
குடும்பத்தோடு சென்று வா !
முடிந்தால் நானும் உன்னோடு
வருகிறேன் !

என்னோடு மானசீகமாக
இந்த ஆற்றங்கரைகளில் புரண்டதே
இத்தனை சுகமென்றால்,
ப்ரத்யக்ஷத்தில் சென்றால்
எத்தனை ஆனந்தமாயிருக்கும் !

இப்படியே நேரம் கிடைக்கும்போதெல்லாம்
இந்த ஆற்றங்கரைகளில் சென்று
வந்தால், ஒரு நாள் இந்த மனித
உடலை விட்டு
பரமபதமாகிய ஸ்ரீ வைகுண்டம்
செல்வாய் !

அங்கேயும் ஒரு ஆற்றங்கரை உண்டு !

அதுதான் வ்ரஜா நதியின் கரை !

அந்த ஆற்றில் நீராடி
எழுந்தால்,
ஸ்ரீ வைகுண்டத்தில்
உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் !

அந்த ஆற்றின் கரையில்
"அமானவான்" என்ற தேவன்
நீ எந்த வாசல் வழியாக பரமபதத்தில்
நுழையவேண்டும் என்பதைச் சொல்வான் !

அதன் வழியாக நீ உள்ளே
நுழைய, இந்த ஆற்றங்கரைகளில்
எந்த மஹாத்மாக்களை நினைத்தாயோ,
அத்தனை பேரையும் நீ,
உனக்காகக் காத்திருப்பவர்களாகவும்,
உன்னை வரவேற்பவர்களாகவும்,
ப்ரத்யக்ஷத்தில் பார்க்கலாம் . . .

அப்போது அங்கே பேரிகைகள்
முழங்கும்...
அப்போது அங்கே துந்துபிகள்
சப்திக்கும் . . .
அப்போது அங்கே சங்கங்கள்
முழங்கும் . . .
உன்னைச் சுற்றி நித்ய சூரிகள்,
நித்ய முக்தர்கள் எல்லோரும்
ஆனந்தமாய் நிற்பர் . . .

அங்கே பொன்மயமான
மண்டபத்தில்,
ஆதிசேஷ சிம்மாசனத்தில்,
ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி,
சமேதனாக
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனான,
சர்வ லோக ரக்ஷகனான,
ஸர்வ லோக சரண்யனான,
ஸ்ரீயப்பதியான பகவான்
ஸ்ரீ மன் நாராயணனைக் காண்பாய் . . .

ஒரு வேளை உனக்கு இது
பிடிக்கவில்லையென்றால்,
கோலோக ப்ருந்தாவனத்தில் நுழைவாய் . . .

அங்கே ராசலீலா மண்டபத்தில்,
நம் ராதிகா ராணியின் ப்ரேமையில்
மயங்கிக் கிடக்கும்,
புவன சுந்தரனான பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணனை,
புவன சுந்தரி,ப்ரேம ஸ்வரூபினி
ராதா தேவியோடும்,
அஷ்ட சகிகளோடும்,
குயில்கள் சப்திக்க,
மயில்கள் ஆட,
வேணு கான இசையோடு,
பக்தர்களின் பஜனையோடும்,
ஆனந்த ந்ருத்யத்தோடும்
அனுபவிப்பாய் . . .

அதனால் உடனே கிளம்பு . . .

இந்த ஆற்றங்கரைகளை நினை . . .

ஒரு நாள் வ்ரஜா நதிக்கரைக்குச்
செல்வாய் . . .

நான் உன்னை வரவேற்பேன் . . .
அல்லது
நீ என்னை வரவேற்பாய் . . .

அப்போது நீ சொல்...
நான் கேட்கிறேன்...
இந்த ஆற்றங்கரை மஹிமையை . . .
 

Read more...

Saturday, February 13, 2010

தியாகம் . . .


 
ராதேக்ருஷ்ணா

தியாகம் என்பதுதான்
உலகை வெல்லும் ரஹஸ்யம் !

தியாகமில்லை என்றால்
உலகில் பல அற்புதங்கள்
சத்தியமாக நடந்திருக்காது !

தியாகத்தினால் உலகையே வெல்லலாம் !

தொட்டதற்கெல்லாம் மனித சமுதாயம்
உச்சரிக்கும் ஒரு வார்த்தை "தியாகம்" !

இன்று தியாகம் என்கிற வார்த்தையின்
உண்மையான அர்த்தம்
தெரியாமல் பலர் உளருகின்றார்கள் !

அல்ப விஷயங்களை எல்லாம்
தியாகம் என்றும்,
சுயநலவாதிகளை தியாகிகள்
என்றும் பேசுகின்றார்கள் !

இன்று உலகில் சாதாரணமாக
சொல்லப்படும் பல தியாகங்கள்
சத்தியமாக தியாகமில்லை !

அதைப் புரிந்துகொண்டாலே
எது தியாகம் என்பது
தெளிவாகத்தெரிந்துவிடும் !

எது தியாகமில்லை என்பதைச்
சொல்கிறேன் !
கொஞ்சம் கவனி !

தன்னுடைய இளமையின் தேவைக்காக
யாரோ ஒருவரைக் காதலித்து, அதற்காக
பெற்றோரையும்,மற்றோரையும் தள்ளிவிட்டால்
அது தியாகமில்லை !

பிள்ளைகளின் ஆசைகளுக்கு அடிமையாகி,
அதற்கு தடை போட முடியாமல்,
பெற்றோர்கள் தங்கள் கொள்கைகளை விட்டால்
அது தியாகமில்லை !

உடல் பலஹீனமான நோயாளிகளைக்
கவனிப்பதற்காகச் சில இரவுகள்
அறைகுறையாகத் தூங்கி,விழித்திருந்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய குடும்பத்தை ஒழுங்காக
நடத்துவதற்காக தனத்தைச் சேகரிக்க,
ஓடித் திரிந்துச் சம்பாதித்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய எதிர்காலம் நன்றாயிருக்க,
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற,
தொலைக்காட்சியையும்,திரைப்படத்தையும்
தவிர்த்தால் அது தியாகமில்லை !

மனைவியை இழந்தபிறகு, தன்னுடைய
குழந்தைகளின் நலத்திற்காக இன்னொரு
கல்யாணம் செய்துகொள்ளாமலிருந்தால்
அது தியாகமில்லை !

முதியோருக்கும்,உடல் ஊனமுற்றோருக்கும்
பேருந்திலோ,ரயிலிலோ உட்காரத் தன்னுடைய
இருக்கையைக் கொடுத்தால்
அது தியாகமில்லை !

சிறு குழந்தைகளை வளர்ப்பதற்காக,
தாய்மார்கள் இரவுகளில் கண் விழித்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய ஏழ்மை நிலை மாற,
அல்லும் பகலும் அயராது உழைத்தால்,
அதன் பெயர் தியாகமில்லை !

வயதானவர்களைக் கவனித்துக்கொள்ள,
இளையவர்கள் தங்கள் உடல் உறவு
சுகத்தைத் தள்ளிவைத்தால்,
அதற்குப் பெயர் தியாகமில்லை !

கணவனை இழந்த பிறகு,
கடமைக்காகவும்,குடும்பத்திற்காகவும்,
தன் ஆசைகளை விட்டு வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

பாடுபட்டுச் சம்பாதித்தப் பணத்தை,
தன் குடும்பத்தினரின் மருத்துவத்திற்காகச்
செலவு செய்தால் அது தியாகமில்லை !

வெறுப்பினாலும்,குழப்பத்தினாலும்,
நடக்காததாலும்,கல்யாணமே
செய்துகொள்ளாமல் வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

தனக்குக் குழந்தை பாக்கியம்
இல்லையென்று தெரிந்தவுடன்
ஒரு அனாதைக் குழந்தையைத்
தத்து எடுத்துக்கொண்டால் அது தியாகமில்லை !

தான் பெற்ற பெண்ணின் கல்யாணத்தை,
நன்றாகச் செலவு செய்து நடத்தினால்,
அதற்கு தியாகம் என்று பெயரில்லை !

வேலை நிமித்தமாகத் தன்னுடையக்
குடும்பத்தை விட்டு,வெளியூரோ,
வெளிநாடோ சென்றால் அது தியாகமில்லை !

சொந்தப் பிள்ளைகளோடு வாழ,
தன் சொந்த வீட்டையோ,சொந்தபந்தங்களையோ,
சொந்த ஊரையோ விட்டுச்சென்றால்
அது தியாகமில்லை !

பயத்தினாலும்,இயலாமையினாலும்,
பல விஷயங்களில்,பல சந்தர்ப்பங்களில்,
மௌனமாக இருந்து,வருவதை ஏற்றுக்கொண்டால்,
அது தியாகமில்லை !

குடும்பத்தின் அவசரத் தேவைக்காகத்
தன்னுடைய நகைகளை அடகுவைத்தாலோ,
விற்றாலோ அதன் பெயர் தியாகமில்லை !

தான் ஆசைப்பட்டப் பொருளோ,
வாழ்க்கையோ கிடைக்காமல் போனால்,
கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

ப்ராரப்தத்திற்கு தகுந்தாற் போல்,
மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள்
பிறக்க,அதைச் சிரமப்பட்டு வளர்த்தால்
அது தியாகமில்லை ! தன் குடும்பத்திலிருக்கும் உடல் ஊனமுற்ற 
ஒருவரைக் காப்பாற்ற தன்னால்
முடிந்த சரீர,பண உதவிகளைச் செய்வதும்
தியாகத்தில் சேர்த்தியில்லை !

இன்னும் இது போலே பல அல்ப
விஷயங்கள் எல்லாம் தியாகத்தில்
சேர்த்தியில்லை !

உன் மனதை நீ ஆராய்ந்து பார் !
ஆராய்ந்து பார்த்தால் உன்னால்
ஜீரணமே செய்யமுடியாத பல
உண்மைகள் உன்னைப்பற்றியும்,
அடுத்தவரைப்பற்றியும்,
உலகைப்பற்றியும்,
 உனக்கே புரியும் !


எது தியாகமில்லை என்பதைப்
பார்த்தாய் !

இப்பொழுது எது தியாகம் என்பதையும்,
யார் தியாகி என்பதையும்,
கொஞ்சம் சொல்கிறேன் !
சிரத்தையுடன் கேள் !

தன்னுடைய தந்தை சந்தனுவின் சுகத்திற்காக,
தன்னுடைய இள வயதில்,
திருமணமே செய்துகொள்ளாமல்,
யுவராஜ பதவியையும் வீசி எறிந்த,
பீஷ்மர் உத்தமமான தியாகி!

பகவான் ஸ்ரீ ராமனின் அவதார காரியத்திற்காக
அவனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டு,
உலகில் தனக்கு ஏற்பட்டக் கேவலத்தையும்,
தன் பிள்ளை பரதனுக்கேற்பட்ட பழியையும்,
துச்சமாக மதித்த கைகேயி மாதா தியாகிதான் !

தன் தந்தையான யயாதிக்கு இளமையின் சுகத்தில்
தீராத ஆசை இருப்பதைக் கண்டு, தன்னுடைய
உத்தமமான இளமையை அவனுக்குத் தந்து,
அவனுடைய முதுமைத்தனத்தைத் தான்
வாங்கிக்கொண்ட பூரு மஹாராஜன் செய்தது தியாகமே !

ஸ்ரீ ராமன் வனவாசம் செல்கிறான் என்றவுடன்,
"காட்டில் வாழத்தான் உன்னைப் பெற்றேன்"
என்று சொல்லித் தன் பிள்ளை லக்ஷ்மணனுக்கு
ஆசி கூறி அவனை அனுப்பின
தெய்வத்தாய் சுமத்ராதேவி தியாகிதான் !

வரமாகத் தாய் வாங்கி வைத்திருந்தபோதும்,
பகவான் ஸ்ரீ ராமனே ராஜ்ய பரிபாலனம் செய்
என்று சொல்லிய போதும், ராஜ பதவியை
ஏற்காமல்,ஸ்ரீ ராமனின் பாதுகைக்கு
பட்டாபிஷேகம் செய்த பரதன் தியாகராஜன் தான்!

பகவான் ராமனும்,சீதையும் வனவாசம் செல்ல,
தன் மனைவியையும்,மற்றவரையும் விட்டு,
அவர்களுக்குச் சேவை செய்ய காட்டிற்கு சென்று,
14 வருஷம் சகலவிதமான கைங்கர்யங்களையும்
செய்த லக்ஷ்மணன் தியாக சிகாமணிதான் !

11 வருஷங்கள் பல விதமான லீலைகள்
செய்து பரவசப்படுத்திய பகவான் க்ருஷ்ணனை,
தேவகி வசுதேவரின் குழந்தை என்று அறிந்தவுடன்,
விட்டுக்கொடுத்த யசோதை, நந்தகோபர்
செய்தது உலகின் மிகப்பெரிய தியாகம்தான் !

தன் கணவர் கர்தமரின் தவத்திற்கு இடையூறு
நேராதவண்ணம் தன் இளமையையும் மறந்து
அவருக்குக் கைங்கர்யம் செய்த இளவரசி தேவஹூதி
செய்தது அற்புதமான தியாகம்தான் !

தான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை,
பல ஜீவர்கள் மோக்ஷம் அடைந்தால்போதுமென்று,
திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்திலேறி,
 ரஹஸ்ய மந்திரத்தை பலருக்கும் சொல்லிக்கொடுத்த காரேய் கருணை 

ஸ்வாமி ராமானுஜர் செய்ததுதான் தியாகம் !

தன் குருவின் படுக்கையில் ஒரு தொந்தரவும்
இருக்கக்கூடாதென்று,தனக்கு நரகம்
வாய்த்தாலும் தவறில்லையென்று, அந்தப்
படுக்கையை விரித்துத் தான் அதில் உறங்கிச்
சரிபார்த்த எம்பார் கோவிந்தர் தியாகமணி தான் !

தீப்பிடித்து எரிகின்ற கோயிலிலிருந்த
பெருமாளுக்கு,ஒரு தீங்கும் நேரா வண்ணம்,
அவரைக் கட்டிக்கொண்டு தன் உடலையும்,
உயிரையும் விட்ட பிள்ளை திருநறையூர் அரையர்,
சத்தியமாக தியாகச்செம்மல்தான் !

தான் தங்கியிருக்கும் மரத்தடிக்கு,
மழையில் ஒதுங்க வந்த,தன் ஜோடியைப் பிடித்த
வேடனுக்குக் குளிர் காய சருகையும்,
அவன் பசி தீர பழங்களையும்,தன் உடலை
அக்னியிலிட்டு,தன் மாமிசத்தையும் தந்த புறா,
ஸ்ரீ ராமன் சொன்னபடி தியாகிதான் !

பசியில் குடும்பமே 48 நாட்கள் வாடி
இளைத்திருந்தாலும்,தனக்குக் கிடைத்த,
அறுசுவை ஆகாரத்தையும்,தண்ணீரையும்,
பசி,தாகத்தோடு வந்த மூவருக்குத் தந்த
ராஜா ரந்திதேவனின்
தியாகம் உலகைவிடப் பெரியதே!

மாயையில் மயங்கிக் கிடக்கும் ஜீவர்களைக்
கரையேற்ற 24 வயதில் சன்னியாசியாக
ஆசைப்பட்ட ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரை,
தடுத்து நிறுத்தாத அவரின் பத்தினி
18 வயதான ஸ்ரீ மதி விஷ்ணுப்ரியாதேவியின்
 தியாகத்திற்கு மோக்ஷமும் சமமில்லை !


பாண்டுரங்கனின் பக்தர்களுக்கு

ஆகாரம் தருவதற்காக மளிகைக்
கடையிலிருந்துச் சாமான் எடுத்த
தன்னைக் கடைக்காரன் பிடிக்க,தந்தையைத்
தன்னுடையத் தலையை வெட்டி எடுக்கச்
சொன்ன கபீர்தாஸரின் பிள்ளை 
கமாலின் தியாகத்திற்கு முன்
 பெருங்கடலும் குட்டையே!

தரித்ரத்திலிருக்கும் தன் வீட்டிற்கு
வந்த ஸ்வாமி ராமானுஜருக்கும்,
அவரது சிஷ்யர்களுக்கும் உணவு
ஏற்பாடு செய்ய, ஒரு வியாபாரியின்
ஆசைக்காக தன் உடலைத் தரச்
சம்மதித்த லக்ஷ்மி அம்மாளும்,அதற்குச்
சம்மதித்த அவள் கணவர்
வரதாசார்யரும் தியாகசிகரங்கள்தான் !

பல பிள்ளைகளை இழந்தபிறகும்,
தன்னுடைய மூத்த பிள்ளை சன்னியாசியான
பிறகும்,வயதான காலத்தில்,
இளைய பிள்ளை நிமாயி சன்னியாசியாக
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரானதை ஏற்ற
சசீமாதாவின் தியாகத்திற்கு உலகமே
நன்றிக்கடன்பட்டிருக்கிறது !

 தன்னுடைய குருவின் உடலில்
ஒரு கஷ்டம் இல்லாமலிருக்க,
அவருடைய ராஜ பிளவை நோயைத்
தான் ஏற்ற ஸ்வாமி ஆளவந்தாரின்
சிஷ்யர் ஸ்ரீ மாறனேரி நம்பி,
தியாகம் என்ற வார்த்தையின்
உண்மையான அர்த்தம்தான் !

தன்னுடைய குரு ஸ்வாமி ராமானுஜருக்கு
ஒரு கஷ்டமும் வரக்கூடாதென்று,
ராஜ சபைக்கு அவரைப்போல் வேடமிட்டுச்
சென்றுத் தன் கண்ணையும் இழந்த
ஸ்ரீ கூரத்தாழ்வானின் தியாகத்திற்கு
உலகமே தலை வணங்கவேண்டும் !

 பிறந்த பிள்ளை தங்களைக்
கொண்டாடவுமில்லை,ஞாபகம்
வைத்துக்கொள்ளவுமில்லை என்ற
போதும்,அந்தக் குழந்தையை 16
வருடங்கள் கண்ணின் மணியாகக்
கவனித்து உலகிற்கு அந்தக் குழந்தையைத்
தந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் பெற்றோர்,
காரி,உடையநங்கை ஆகியோரின் தியாகம்
ப்ரபஞ்சத்தைக்காட்டிலும் ஸ்ரேஷ்டமானது !

இன்னும் கோடிபேரை சொல்லவா . . .

நீ மாறவேண்டும் . . .
 யார் எப்படி வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும் . . .
நீ உன்னை மாற்றிக்கொள்  . . .

இதுவரை தியாகம் என்று
தற்பெருமை பேசினது போதும் !

தியாகம் செய்கிறாயோ இல்லையோ
ஒன்றும் இல்லாத விஷயத்தை
இனியாவது தியாகம் என்று
உளராமல் இருந்தால் சரி !

இனியாவது தியாகத்தைச்
சரியாகப் புரிந்துகொள் !

கொஞ்சம் வெளியில் வந்து
புதிய கண்ணோட்டத்துடன்
உலகைப் பார் !

கொஞ்சம் சுயநலத்திலிருந்து
வெளியில் வந்து வாழ்வைப்
புரிந்துகொள் !

நம்முடைய மூதாதையர்களின்
தியாகத்தைக் கொண்டாடு !

நம்முடைய சுயநலத்தைச்
சுட்டுப் பொசுக்கு !

வா! உலகை சுத்தம் செய்வோம் !

பொய்த்தனத்திலிருந்து
விடுதலை அடையவேண்டிய
நேரமிது !

இனி ஒரு சுதந்திரம் !

இனி ஒரு சத்தியம் !

இனி ஒரு வேஷமில்லாத வாழ்க்கை !

இனி ஒரு தியாக வாழ்க்கை !

வாழ்ந்து பார்ப்போமா . . .

தியாகத்திற்கு எல்லையில்லை . . .
 தியாகத்திற்கு சமமில்லை . . .
தியாகத்திற்கு அழிவில்லை . . .

தியாகம் இல்லையென்றால் நான்
இன்று சுதந்திரமாக இதைச்
சொல்ல முடியாது . . .
நீயும் சுதந்திரமாக இதை
வாசிக்க முடியாது . . .

இந்த சுதந்திரத்தை நாம் அடைய
நம்முடைய மூதாதையர்கள்,
தங்கள் வாழ்வையே தியாகம்
செய்தார்கள் ! ! !

இதை ஒரு நாளும் மறவாதே . . .

வா . . .நாளை சுத்தமான
ஒரு சமுதாயம் உருவாக
நாமும் ஒரு சிறு தியாகமாவது
செய்வோம் . . .

தியாகத்தின் நிழலில் வாழக்
கற்றுக்கொண்டுவிட்டோம் . . .
இனி தியாக நிழலில் மற்றவர்
இளைப்பாற தயாராவோம் . . .

மனதில் ஒரு ப்ரார்த்தனை செய் . . .

"க்ருஷ்ணா !எதை நான் தியாகம் செய்தால்
உனக்குப் பிடிக்கும்" என்று உன் க்ருஷ்ணனிடம்
கேள் !

உன் க்ருஷ்ணன் சொல்வதைக் கேள் ! 
 

Read more...

Friday, February 12, 2010

என்னைக் காப்பாற்று !

ராதேக்ருஷ்ணா

என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா என்னைக் காப்பாற்று !

எப்படியாவது என்னைக் காப்பாற்று !

உன்னைத் தவிர யாரும் என்னை
இந்த உலகில் காப்பாற்றமுடியாது !

உன்போல் கருணையோ,
அக்கறையோ,அன்போ,
உலகில் யாருக்கும் கிடையாது !

உன்னிடம் மட்டுமே நான்
உரிமையுடன் கேட்க்கமுடியும் !

க்ருஷ்ணா! உன்னால் மட்டுமே
என் மனதை
உள்ளபடி புரிந்துகொள்ளமுடியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
உடலை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அழுகை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கோபமும் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பயம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
உணர்வுகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பரிதவிப்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
தேவைகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
வெட்கம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கர்மவினைகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கடந்தகாலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
நிகழ்காலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
எதிர்காலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கேள்விகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கேள்விகளுக்குப் பதில் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அன்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
தேடல் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அசட்டுத்தனம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பொறுமை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
முணுமுணுப்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே
என்னைப்பற்றி
எல்லாம் உள்ளபடி தெரியும் !

அதனால் நீ தான் என்னைக்
காப்பாற்றமுடியும் !
இத்தனை நாள் நீ தான் என்னைக்
காப்பாற்றினாய் !
இனியும் நீ தான் என்னைக்
காப்பாற்றவேண்டும் !

க்ருஷ்ணா !
தயவு செய்து என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அகம்பாவிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வேஷதாரிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பொறாமைக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சுயநலவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாவிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை காமாந்தகக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை நம்பிக்கை துரோகிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை தீவிரவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை முட்டாள்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வஞ்சகர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைப் பேய்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைத் திருடர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை மிருகங்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை மனிதர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் குடும்பத்தினரிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை நாஸ்தீகவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சம்சாரிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை போலி மதகுருமார்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அஞ்ஞானிகளிடமிருந்து
காப்பாற்று !

இவைகளிலிருந்து மட்டும்
காப்பாற்றினால் போதாது !
இன்னும் பல விஷயங்களிலிருந்து
என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அகம்பாவத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சுயநலத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் காமத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கோபத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பலவீனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பயத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அவநம்பிக்கையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் கர்மவினையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாவத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை தற்பெருமையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை குழப்பத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அழுகையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பொறாமையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கேலிக்கூத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கெட்டவார்த்தைகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாசத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பந்தத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை விரோதத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சந்தேகத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வியாதிலியிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அருவருப்பிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சோம்பேறித்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை உடல்கவர்ச்சியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை ஆசையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அசிரத்தையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கோள்சொல்வதிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை ஏமாற்றுத்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் கருமித்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வீண் செலவுகளிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அறைகுறை பக்தியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அல்பத்தனங்களிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வேஷ பக்தியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கற்பனை த்யானத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கனவுகளிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வயிற்றெரிச்சலிலிருந்து
காப்பாற்று !

இன்னும் சொல்லத்தெரியாத
சொல்லமுடியாத,
எல்லாவற்றிலிருந்தும்
காப்பாற்று !

காப்பாற்று ! காப்பாற்று ! காப்பாற்று !

நான் இந்தப் பிறவியை
அடைவதற்கு முன்னும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் தந்தையின் உடலில்
யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தபோதும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் தாயின் கர்ப்பத்தில்
சிறைபட்ட சமயத்திலும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் இந்த உலகில் வந்து
பிறந்த போதும்,
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

எனக்கு ஒன்றும் தெரியாத போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

நான் வளரும்போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

நான் என்னையே மறந்து
தூங்கும் போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றுகின்றாய் !

நான் கனவில் சஞ்சரிக்கும்போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றுகின்றாய் !

க்ருஷ்ணா !
இனியும் காப்பாற்று !
என்றும் காப்பாற்று !
எப்பொழுதும் காப்பாற்று !
எங்கும் காப்பாற்று !
எல்லோரிடமிருந்தும் காப்பாற்று !
எல்லாவற்றிடமிருந்தும் காப்பாற்று !

மரணம் வரையிலும் காப்பாற்று !
மரணத் தறுவாயிலும் காப்பாற்று !
மரணத்திற்குப் பிறகும் காப்பாற்று !

எல்லா ஜன்மத்திலும் காப்பாற்று !
எந்தப் பிறவியிலிருந்தாலும் காப்பாற்று !
எதுவாயிருந்தாலும் காப்பாற்று !
எல்லா லோகங்களிலும் காப்பாற்று !

முக்கியமாக
என்னிடமிருந்து என்னைக் காப்பாற்று !

த்ரௌபதியைக் காப்பாற்றியது
உண்மையென்றால் என்னையும் காப்பாற்று !
கஜேந்திரனைக் காப்பாற்றியது
சத்தியமென்றால் என்னையும் காப்பாற்று !
கோகுலத்தைக் காப்பாற்றியது
நிஜமென்றால் என்னையும் காப்பாற்று !

ஸ்வாமி ராமானுஜரைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
மீராமாதாவைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
ப்ரஹ்லாதனைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
அஜாமிளனைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !

க்ருஷ்ணா ! உன்னால் முடியும் !
க்ருஷ்ணா ! உன்னால் தான் முடியும் !
க்ருஷ்ணா ! உன்னால் மட்டுமே முடியும் !

சரணாகதி செய்துவிட்டேன் !
எப்போதைக்கும் இப்போதே சொல்லிவிட்டேன் !
உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன் !

க்ருஷ்ணா ! இனி உன் இஷ்டம் !
இனி நான் உன் உடைமை !

உன் பொருளை நீ காப்பாற்றிக்கொள் !

க்ருஷ்ணா !
அதுதான் உனக்கு மரியாதை !

என்னைக் காப்பாற்றி
உன் மரியாதையைக்
காப்பாற்றிக்கொள் ! ! !

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP