ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, February 5, 2010

உன்னைப் பிடிக்கும் !


ராதேக்ருஷ்ணா

தினமும் காலையில்
எந்த சிந்தனை நம் மனதில்
இருக்கிறதோ
அப்படியேதான் அன்றைய
பொழுது செல்லும் !


சமாதானம்,சாந்தி,நிம்மதி
என்பது வெளியில் இல்லை !


உன் மனதின் எண்ணங்களில்தான்
உன்னுடைய நிம்மதி
ஒளிந்து கொண்டிருக்கிறது !


உன் மனதை நீ சரியாக
வைத்திருந்தாலே
எல்லாம் சரியாக நடக்கும் !


ஒவ்வொரு நாளும்
உன் மனதை உற்றுக்
கவனித்துப் பார் !


உண்மை புரியும் !


உன் மனது சரியாக இருந்தால்
எல்லாம் தானாக நடக்கும் !


இனி காலையில்
தினமும்
பகவான் க்ருஷ்ணனிடத்தில்
இப்படி ஒரு ப்ரார்த்தனை செய் !


செய்தால் நீ நன்றாக இருப்பாய் . . .

ஹே க்ருஷ்ணா !
எனக்கு ஒரு நாளும் 
விரோதிகளே வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
எனக்கு யாருடனும்
சண்டை போடவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
நான் யாரையும்
குற்றம் சொல்ல வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
எனக்கு யார் மீதும்
பொறாமை வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
எனக்கு யார் மீதும்
வெறுப்பு வேண்டவே வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாரைப் பற்றியும் நான்
யாரிடமும் வம்பு பேசவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யார் மனதும் நோகும்படியாக
நான் பேசவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
நான் யாரையும்
அவமானப்படுத்தவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாருடைய பொருளுக்கும்
நான் ஆசைப்படவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாருடைய கஷ்டத்திலும்
நான் சந்தோஷப்படவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாருடைய சந்தோஷத்திலும்
நான் வயிற்றெரிச்சல் படவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாரையும் நான் மனதினாலோ,
வாயினாலோ திட்டவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
என்னைவிட தாழ்ந்தவர்கள் என்று 
யாரிடமும் அகம்பாவம் எனக்கு வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
எனக்கு கெடுதல் செய்பவர்களிடமும்
அன்போடு நான் இருக்கவேண்டும் !


ஹே க்ருஷ்ணா !
என்னைக் கஷ்டப்படுத்தவேண்டும்
என்ற எண்ணமும் யாருக்கும் வரவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
என்னால் உலகில் எந்த ஒரு
ஜீவராசிக்கும் கஷ்டம் வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாரைப் பற்றியும் நான்
விமர்சனம் செய்யவேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
யாரிடமும் எந்த விஷயத்திலும்
எனக்கு பயமே வேண்டாம் !

ஹே க்ருஷ்ணா !
மற்றவருடைய பொருள்களில்
எனக்கு மறந்தும் ஆசை வரவேண்டாம் !ஹே க்ருஷ்ணா !
உன்னுடைய நாம ஜபத்தில்
எனக்கு தயக்கமே வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
ஒருநாளும் உன்னிடத்தில்
எனக்கு சந்தேகமே வேண்டாம் !


ஹே க்ருஷ்ணா !
என் குருவிடத்தில் எனக்கு
ஒருநாளும் அவநம்பிக்கை வரவேண்டாம் !


இப்படியே நினைக்க நினைக்க
உன் வாழ்க்கையில்
நிம்மதி உனக்கு அடிமையாயிருக்கும் !


உன்னை எல்லோருக்கும் பிடிக்கும் !


உலகமே உன்னை கொண்டாடும் !


உனக்கே உன்னைப் பிடிக்கும் !


இப்பொழது முதல்
நீ
நிரஞ்சனனாவாய் !

இப்பொழுது முதல்
நீ
க்ருஷ்ண குழந்தையாவாய் !


இப்பொழுது முதல்
நீ
மஹாத்மா ஆவாய் !

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP