ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 பிப்ரவரி, 2010

கனவு காண் !







ராதேக்ருஷ்ணா




கனவுகள்!




தினம் தினம் பலவிதமாய்,

பலரகமாய், கனவுகள் !




கைக்குழந்தையாக

இருந்தது முதல்

கடைசி மூச்சுவரை

கணக்கிலடங்கா கனவுகள் !




வாழ்க்கையில் எல்லோருமே

கனவு காண்பது வழக்கமே !




கனவு என்பது மனித வாழ்வில்

இரண்டற கலந்துவிட்ட ஒன்று !




படித்தவருக்கும் கனவு உண்டு !

படிக்காதவருக்கும் கனவு உண்டு !

ஆணுக்கும் கனவு உண்டு !

பெண்ணுக்கும் கனவு உண்டு !

குழந்தைக்கும் கனவு உண்டு !

முதியோருக்கும் கனவு உண்டு !

பணக்காரர்களுக்கும் கனவு உண்டு !

ஏழைக்கும் கனவு உண்டு !

அஞ்ஞானிக்கும் கனவு உண்டு !
விஞ்ஞானிக்கும் கனவு உண்டு !
மெய்ஞானிக்கும் கனவு உண்டு !
ஆஸ்தீகருக்கும் கனவு உண்டு !
நாஸ்தீகருக்கும் கனவு உண்டு !
சுயநலவாதிக்கும் கனவு உண்டு !
பொதுநலவாதிக்கும் கனவு உண்டு !
 


சில சமயங்களில் புரியாத கனவு !

சில சமயங்களில் பயங்கரமான கனவு !

சில சமயங்களில் பைத்தியக்காரத்தனமான கனவு !

சில சமயங்களில் சந்தோஷமான கனவு !

சில சமயங்களில் அதிசயமான கனவு !

சில சமயங்களில் சம்மந்தமில்லாத கனவு !

சில சமயங்களில் துக்கமான கனவு !

சில சமயங்களில் காமக் கனவு !

சில சமயங்களில் அதிர்ச்சிக் கனவு !

சில சமயங்களில் சாப்பாட்டுக் கனவு !

சில சமயங்களில் விரோதிகளின் கனவு !

சில சமயங்களில் ப்ரியமானவர்களின் கனவு !

பல சமயங்களில் கற்பனைக் கனவு !

சில சமயங்களில் ப்ரயாணக் கனவு !

சில சமயங்களில் பாம்புக் கனவு !

சில சமயங்களில் மரணக் கனவு !

சில சமயங்களில் பேய்க் கனவு !

சில சமயங்களில் அத்ருஷ்டக் கனவு !

சில சமயங்களில் நஷ்டக் கனவு !

சில சமயங்களில் தண்டனைக் கனவு !

சில சமயங்களில் பாவக் கனவு !

சில சமயங்களில் துரோகக் கனவு !

சில சமயங்களில் இளமைக் கனவு !

சில சமயங்களில் குழந்தைக் கனவு !

சில சமயங்களில் தொலைக்காட்சிக் கனவு !

சில சமயங்களில் ஆசைக் கனவு !




கனவுகள் பலவிதம் ! பாதிப்புகள் பலவிதம் !


ஆனால் காரணம் என்னவோ மனித மனம் மட்டுமே !




மனிதர்கள் மூன்று விதமான

மனோ நிலைகளில்தான் வாழ்கின்றனர் !




கனவு,விழிப்பு,தூக்கம் என்ற

மூன்றில் ஏதோ ஒன்றில்தான்

மனித மனம் இருக்கும் !




மனித வாழ்வில்,

மொத்த ஆயுளில்,

பாதி தூக்கத்தில்தான் கழிகிறது !




மிகச் சில சமயங்களில் மட்டுமே

மனிதர்கள் தெளிவான அறிவோடு

முழித்துக்கொண்டிருக்கிறார்கள் !




முக்கால்வாசி ஆயுள் கனவில்தான்

கழிந்துகொண்டிருக்கிறது !

அதில் தூக்கத்தில் கனவு காண்பது ஒரு விதம்!

அது எல்லோருக்குமே தெரியும் . . .




விழித்துக்கொண்டிருக்கும்பொதே

கற்பனையில் கரைந்து கனவு காண்பது

மற்றொருவிதம் !


அதாவது 10 வயதாக இருக்கும்போதே

25 வயதில் இப்படி இருக்கவேண்டுமென்று

யோசிப்பதே கனவுதான் !




கல்யாண வயது வந்தவுடனே,

தன்னுடைய ஜோடி இப்படி இருக்கவேண்டுமென்று


ஆசைப்பட்டு யோசிப்பதும் கனவுதான் !

படித்து முடிப்பதற்கு முன்பே

கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்று

சிந்தனை செய்வதும் கனவுதான் !

ரவு தூங்கும் சமயத்தில்
நாளைய காரியங்களைச்

சிந்தித்துக் கொண்டிருப்பதும் கனவுதான் !


அதாவது கற்பனைக் கனவுகள் !

விழித்துக்கொண்டிருக்கும்போதே காணும் கனவுகள் !

உத்தமமான பக்தர்களுக்கும்,
பக்தர்களை அண்டியிருப்பவர்களுக்கும்,
சத்சங்கத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும்,
பஜனை செய்கின்றவர்களுக்கும்,
நாம ஜபம் செய்பவர்களுக்கும்,
பகவத் த்யானத்தில் ஈடுபடுபவர்களுக்கும்,
கனவு உண்டு !

பக்தியில் திளைப்பவர்கள்
காணும் கனவுதான்
உத்தமமானது !

மற்றவரின் கனவுகளால் யாருக்கும்
ஒரு ப்ரயோஜனமில்லை !

மற்றவர்களின் கனவுகள் எந்தவிதத்திலும்
உயர்ந்ததில்லை !

வாழ்க்கையில் எத்தனையோ
கனவுகள் கண்டிருப்பாய் !

இனி பக்தி சம்மந்தமான
கனவுகள் காண் !

சில பக்தர்களின் உன்னதமான
கனவு உலகில் கொஞ்சம்
சஞ்சாரம் செய்வோமா ?
வருகிறாயா ! ! !

யோசிக்காதே !
நல்ல விஷயங்களில் சீக்கிரம்
முடிவெடுக்கவேண்டும் !

கொஞ்சம் வந்து அனுபவித்துப் பார் !

ஸ்ரீமதி கோதை நாச்சியார்
முதலில் கனவில் தான்
ஸ்ரீரங்கராஜனை வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்ய
திருக்கல்யாணம் செய்துகொண்டாள் !

சந்த் துகாராமிற்கு
பகவான் விட்டலன் சொப்பனத்தில்தான்
குருவாக தரிசனம் தந்து
"ராம் க்ருஷ்ண ஹரி ! வாசுதேவ ஹரி !"
என்று உபதேசம் செய்தான் !

ஸ்ரீ ஜகன்னாத மிஸ்ரருக்கு
ஒரு மஹாத்மா சொப்பனத்தில் தரிசனம் தந்து
அவருடைய பிள்ளை நிமாயி
ஸ்வயம் க்ருஷ்ணனின் அவதாரம்
என்று ரஹஸ்யத்தைச் சொன்னார் !

ஸ்வாமி ராமானுஜருக்கு
பகவான் சம்பத்குமாரன் கனவில் தரிசனம் தந்து,
தான் டில்லி பாதுஷாவின்
அரண்மனையில் இளவரசியுடன் இருப்பதை,
காதலுடன், புன்னைகையுடன் சொன்னான் !

ஸ்ரீ பெரியாழ்வாருக்கு
பகவான் வடபத்ரசாயி கனவில் காட்சி தந்து,
ஆண்டாள் ஸ்வயம் பூமிதேவி என்றும்,
அவள் சூடிக்களைந்த மாலைதான் தனக்கு
வேண்டுமென்றும் திருவாய்மலர்ந்தருளினான் !

ஸ்ரீமன் மாதவேந்திரபுரிக்கு
பகவான் கோபாலன் கனவில் காட்சி தந்து
தான் மறைந்திருக்கும் புதரிலிருந்து
தன்னை எடுத்து ப்ருந்தாவனத்தில் தனக்குக்
கோயில் கட்டுமாறு உத்தரவு கொடுத்தான் !

ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு
காஞ்சி வரதராஜப்பெருமாள் கனவில் வந்து,
அவருக்கு தனம் வேகவதிக் கரையில்
எங்கு கிடைக்கும் என்பதைச்சொல்லி
அவரின் ததீயாராதனத்திற்கு உதவி செய்தார் !

ஸ்வாமி இராகவேந்திரருக்கு
சரஸ்வதிதேவி கனவில் தரிசனம் தந்து,
அவரை உலக நலத்திற்க்காக,
குருவின் கட்டளைப்படி சன்னியாசம்
வாங்கிக் கொள்ளச் சொன்னாள் !

ஸ்ரீ மதி மீராவிற்கு,
பகவான் க்ருஷ்ணன் கனவில் காட்சி தந்து,
ஆலிங்கனம் செய்து,
ஆசீர்வாதம் அருளி,அவளை
தன் சொத்து என்று நிரூபணம் செய்தான் !

அசோக வனத்தில் சீதைக்குக் காவலிருந்த
த்ரிஜடைக்கு கனவில்
பகவான் ஸ்ரீ ராமன் இராவணனை வதம் செய்து
சீதையை மீட்டுக்கொண்டு அயோத்யா
செல்லும் காட்சி கிடைத்தது !

ப்ருந்தாவனத்தில் க்ருஷ்ண த்யானத்திலிருந்த
ஸ்ரீமன் நாதமுனிகளை,
தனக்குக் கைங்கர்யம் பண்ண ஸ்ரீ மன்னனார்
வீரநாராயணபுரத்திற்கு வருமாறு
கனவில்தான் கட்டளையிட்டார் !


திருவல்லிக்கேணியில் புத்திர வரம் வேண்டி
ப்ரார்த்தனை செய்த கேசவ சோமயாஜிக்கும்,
ஸ்ரீமதி காந்திமதி அம்மையாருக்கும்,இரவில் கனவில்
ஸ்ரீ பார்த்தசாரதி காட்சி தந்து,தானே அவர்களுக்கு
ஸ்வாமி ராமானுஜராகப் பிறப்பதாக வாக்களித்தான் !

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஆசார்யருக்கு கனவிலே காட்சி தந்து
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு, அவரை
ஸ்ரீ கதாதர கோஸ்வாமியிடம் சென்று,
பக்தி விஷயங்களைக் கேட்டு,
ஸ்ரீ மத் பாகவதத்தையும் கற்கச் சொன்னார் !

ஒரு தாஸி குஷ்டரோகத்தால் அவதிப்பட்ட
சமயத்தில் போர்த்தியிருந்த ஒரு போர்வையை
தனது ப்ருந்தாவனத்திற்கு சாற்றவேண்டுமென்று
ஸ்வாமி இராகவேந்திரர் சொப்பனத்தில்
அர்ச்சகருக்குக் கட்டளையிட்டார் !

ஸ்ரீமதி தம்மக்கா என்கிற வேலைக்காரிக்கு
பகவான் ஸ்ரீ ராமன் சொப்பனத்தில் காட்சி தந்து,
தான் பத்ராசல மலையில் இருக்குமிடத்தைக்
காட்டிக் கொடுத்து, அவளை தினமும்
தனக்கு அபிஷேகம் செய்யச்சொன்னான் !

இன்னும் எத்தனையோ பக்தர்களுக்கு
பகவானும்,மஹாத்மாக்களும்,மஹதிகளும்,
கனவில் காட்சி தந்திருக்கிறார்கள் !

அடியேன் சொன்னது மிகக்குறைவே !

இன்றும் உன்னதமான பக்தியுடையவருக்கு
பகவானும், அற்புதமான மஹாத்மாக்களும்,
பல சந்தர்ப்பங்களில் சொப்பனத்தில்
தரிசனம் தருகின்றார்கள் !

அதனால் நீயும் பக்தி செய் !
நீயும் விடாமல் நாம ஜபம் செய் !
நீயும் மனமுருகி ப்ரார்த்தனை செய் !

எப்படியும் தூக்கத்தை த்யாகம் செய்வதாயில்லை !

ஆனால் அந்தத் தூக்கத்தில்
உன்னதமான பகவத் அனுபவங்கள்
கனாவாக வந்தால் நல்லதுதானே !

இத்தனை நாள் தண்டமான கனவு கண்டாய் !

இனி பக்தி பூர்வமான கனவு காண் !
மஹாத்மாக்களைக் கனவு காண் !
க்ருஷ்ண லீலையைக் கனவு காண் !
பக்தி ரசத்தைக் கனவு காண் !
பரமபதத்தைக் கனவு காண் !
ஸ்ரீ ப்ருந்தாவனத்தைக் கனவு காண் !
ராச லீலையைக் கனவு காண் !
திவ்ய தேசங்களை கனவு காண் !
ஸ்ரீ மத் ராமாயணத்தைக் கனவு காண் !
ஸ்ரீ மத் பாகவதத்தைக் கனவு காண் !
பக்த விஜயத்தைக் கனவு காண் !
சத் சங்கத்தை கனவு காண் !
சத்குருவை கனவு காண் !

நன்றாகக் கனவு காண் !
கண்டது நினைவிருக்கும்படி கனவு காண் !
மரணத் தறுவாயிலும் நினைவில்
நிற்க கனவு காண் !

கண்ட கனாவை எனக்குச் சொல்வாயா ?!?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP