ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, May 28, 2010

வைகாசி விசாகம் - 27/05/2010

ராதேக்ருஷ்ணா

வைகாசி விசாகம் !
எங்கள் ஆழ்வாரின் பிறந்த நாள் !
க்ருஷ்ணனின் நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

கலியுகத்தின் முதல் பக்தன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

உடையநங்கையின் தவப் புதல்வன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

உத்தமர் காரியின் அன்புச் செல்வன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

திருக்குறுங்குடி நம்பியின் ஆசீர்வாதத்தில் பிறந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

  பகவான் ஸ்ரீ ராமனின் கலியுக அவதாரம்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

திருப்புளியாழ்வாரான லக்ஷ்மணனின் மடியிலிருக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

பிறக்கும்பொழுதே சடம் என்ற
மாயாவாயுவை விரட்டி சடகோபன்
என்ற திருநாமம் அடைந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் ! 

பிறந்த 12ம் நாள் தவழ்ந்து,
புளியமர பொந்தில்,பத்மாசனமிட்டு அமர்ந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

16 வருஷம் மல,மூத்திரம் விடாமல்,
அன்னம் சாப்பிடாமல்,தண்ணீர் அருந்தாமல்,
தியானத்திலிருந்த,மேனி துளியும் வாடாத
 ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

அன்னை உடையநங்கை அணிவித்த
மகிழம்பூ மாலையையே ஆபரணமாகக் கொண்ட,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

பலரும் முயன்றும்,பலவிதத்தில் முயன்றும்,
துளியும் தியானம் கலையாத,கலைக்கமுடியாத
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் ! 

ஒரு குண்டுக்கல்லை மதுரகவியாழ்வார்
எடுத்துக்கிழே போட அதைக்கேட்டுக் கண் விழித்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்ற கேள்வியை
மதுரகவியாழ்வார் கேட்க,அதற்கு புன்னகை பூத்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

அத்தை தின்று அங்கே கிடக்கும் என ஆத்மாவின்
நிலைமையை உள்ளபடி பதிலாய் சொன்ன
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

கிழவரான மதுரகவியாழ்வாரைச் சிஷ்யனாகத்
 தன்னுடைய 16ஆவது வயதில் ஏற்றுக்கொண்ட
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

4 வேதங்களையும் தமிழில்,
திருவாய்மொழியாக,திருவாசிரியமாக,திருவிருத்தமாக,
பெரியதிருவந்தியாகத் தந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

உண்ணும் சோறு,பருகும் நீர்,தின்னும் வெற்றிலையுமாகக்
கண்ணனைக் கலியுகத்தில் எல்லோருக்கும் புரியவைத்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

32 வருஷங்கள் புளியமரப் பொந்திலேயே இருந்து,
108 திவ்யதேசப் பெருமாள்களையும்,
தன்னிடத்திற்கு வரவழைத்து,
வரிசையில் நிற்க வைத்த,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று சொல்லி
எதிர்காலத்தில் பவிஷ்யதாசார்யனாக வரப்போகும்
ஸ்வாமி ராமானுஜரை முன்பே 
உலகுக்குக் காட்டிய
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

திருக்குறுகூர் என்ற திவ்யதேசத்தின் பெயரையே,
ஆழ்வார் திருநகரி என்று மாறவைத்த,
காரி மாறன்,பராங்குசன்,வகுளாபரணன்,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் என்று மதுரகவியாழ்வாரை
ஆசார்யபக்த சிரோன்மணியாக்கிய
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

எல்லோரும் மறந்த தமிழ் வேதமாகிய
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை,
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்குத் தந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !


கருவூர் சித்தரின் நாய் தினமும்
ஆழ்வார் திருநகரியில் எச்சிலை உண்ண,
அதற்கும் தாமிரபரணியின் வெள்ளத்தில்,
பரமபதத்தை அளித்த கருணாசாகரன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

நவதிருப்பதி எம்பெருமான்களான
ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்,
ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான்,
வரகுண மங்கை எம் இடர் கடிவான்,
திருப்புளியங்குடி காய்சினி வேந்தன்,
இரட்டைத்திருப்பதி அரவிந்தலோசனன்,
திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான், 
திருக்குளந்தை மாயக்கூத்தன்,
தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன்,
திருக்கோளூர் வைத்தமாநிதி என்று
எல்லோரையும் உற்சவத்தில் சேரவைக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !


இந்தப் பூவுலகில்,கலியுகத்தில்,
ஒன்றும் தெரியாத மூட ஜனங்களையும்
காப்பாற்ற இன்றும் ப்ரத்யக்ஷமாக
இருந்து அருள் பாலிக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

ஸ்வாமி நம்மாழ்வாரே !
நாங்கள் மூடர்கள் !
நாங்கள் அகம்பாவிகள் !
நாங்கள் சுயநலவாதிகள் !
நாங்கள் வேஷதாரிகள் !
நாங்கள் நம்பிக்கையற்றவர்கள் !

தயவு செய்து எங்களைக் கரையேற்றும் !

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின்
திருவடிகளில்
எங்களுக்கு திடமான பக்தியும்,
நம்பிக்கையும் வர ஆசீர்வதியுங்கள் !

இந்த வைகாசி விசாகத்தில்
ப்ரார்த்திக்கிறோம் !
உம்மைப்போல் பக்தியே
வாழ்க்கையாக வாழ
எங்களுக்கு அனுக்ரஹம் செய்யுங்கள் !

உம் தரிசனமே எங்கள் பாக்கியம் !

கனவிலாவது ஒரு முறை
எங்களுக்கு
தரிசனம் தரலாகாதோ ! ? ! 

இந்த வருஷம்
வைகாசி விசாகத்திற்கு
உயிரோடிருக்கிறோம் . . .

அடுத்த வருஷமும்
உயிரோடிருந்து
உங்கள் கோயிலில்
உற்சவத்தைக் காண
ஆசையோடு ப்ரார்த்திக்கிறோம் . . .
வைகாசி விசாகம் முடியவேண்டாம் . . .

அடுத்த வைகாசி விசாகமே சீக்கிரம் வா ! 
 
  

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP