ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, May 20, 2010

எங்கள் குருஜீஅம்மா !

ராதேக்ருஷ்ணா

பிறந்த நாள் !
இன்று பிறந்த நாள் !

எங்கள் குமுதவல்லியின் பிறந்தநாள் !
எங்கள் பெருந்தேவியின் பிறந்தநாள் !
எங்கள் வேதவல்லியின் பிறந்தநாள் !

எங்கள் கோபாலக்ருஷ்ணரின்
பத்னிக்குப் பிறந்தநாள் !

ராதேக்ருஷ்ணாசத்சங்கத்தின்
ஸ்தாபகரின் பிறந்தநாள் !

பல குழந்தைகளின் தாய்க்கு
பிறந்தநாள் !

பலரின் வழிகாட்டிக்கு
பிறந்தநாள் !

க்ருஷ்ணனின் கோபிக்கு
பிறந்தநாள் !

ப்ருந்தாவனத்திற்கு மட்டுமே
ஏங்கும் தாஸியின் பிறந்தநாள் !

ராதிகாவின் தோழிக்குப்
பிறந்தநாள் !

ராஜாமடத்தின் செல்லத்துக்குப்
பிறந்தநாள் !

ஸ்ரீநிவாஸராகவரின் புதல்விக்குப்
பிறந்தநாள் !
  
எங்கள் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவுக்குப்
பிறந்தநாள் ! 
 
என் குருஜீஅம்மாவின்
பிறந்தநாள் !

எங்கள் வாழ்வின் பிறந்தநாள் !

எங்கள் பக்தியின் பிறந்தநாள் !

எங்கள் நாமஜபத்தின் பிறந்தநாள் !

எங்கள் ஞானத்தின் பிறந்தநாள் !

எங்கள் வைராக்கியத்தின் பிறந்தநாள் !

எங்கள் ஆசீர்வாதத்தின் பிறந்தநாள் !

எங்கள் தாயாரின் பிறந்தநாள் !

எங்கள் குழந்தையின் பிறந்தநாள் !

எங்கள் நலம் விரும்பியின் பிறந்தநாள் !

எங்கள் வாழ்வின் பிறந்தநாள் !

ராதேக்ருஷ்ணா !

ஒரு வேளை இந்த தினத்தில்
1946ம் வருடம்
குருஜீ அம்மா பிறக்கவில்லையென்றால்  . . .

ஸ்ரீநிவாஸராகவருக்கு ஒரு
அழகான புதல்வி
கிடைத்திருக்கமாட்டாள் ! 

கோபாலக்ருஷ்ணருக்கு ஒரு
அற்புதமான துணைவி
கிடைத்திருக்கமாட்டாள் . . .

க்ருஷ்ணனுக்கு ஒரு
நல்ல பக்தை
கிடைத்திருக்கமாட்டாள் . . .
உலகத்திற்கு
ராதேக்ருஷ்ணா சத் சங்கம்
கிடைத்திருக்காது . . .

எத்தனையோ
சம்சாரிகளுக்கு நாமஜபம்
தெரிந்திருக்காது . . .

பல மூடர்களுக்கு
"ராதேக்ருஷ்ணா"
சொல்லத் தெரிந்திருக்காது . . .

பல குழந்தைகளுக்கு
சத்சங்கம்
கிடைத்திருக்காது . . .

நிறைய மூடஜனங்களுக்கு
க்ருஷ்ண பக்தி
புரிந்திருக்காது . . .

பல ஏழைகளுக்கு
ஞான தனம்
லபித்திருக்காது . . .

இதோ...இந்த ஆனந்தவேதம்
நான் எழுதியிருக்கமாட்டேன் . . .
நீயும் படித்திருக்கமாட்டாய் . . . 

ஐயோ !
வீணாகப் போயிருப்போம் !

நல்ல வேளை !

குருஜீ அம்மா பிறந்தார்களோ,
எங்கள் பிறவியும்
பயனுடையதாயிற்று ! ! !

குருஜீ அம்மா,
எங்களைப் பிடித்து
இழுத்தார்களோ,
நாங்கள் யமனிடமிருந்தும்,
நரக வேதனைகளிலிருந்தும்,
தப்பித்தோம். . .பிழைத்தோம் . . .

குருஜீஅம்மாவை
எங்களுக்குத் தந்த
எங்கள் க்ருஷ்ணனுக்கு

கோடானுகோடி வந்தனங்கள் !

ராதேக்ருஷ்ணனை 
எங்களுக்குத் தந்த
எங்கள் குருஜீஅம்மாவிற்கு
கோடானுகோடி நன்றிகள் !

சர்வம் குரு அர்ப்பணம் !

க்ருஷ்ணா !
உன்னிடம் ஒரு ப்ரார்த்தனை !

எங்கள் குருஜீ அம்மாவை
சௌக்கியமாக,சந்தோஷமாக,
ஆரோக்கியமாக,நிம்மதியாக,
ஒரு குறையில்லாமல்
குறைந்தது ஒரு 100 வருஷங்களாவது
இந்தப் பூமியில்
வாழ வை !

குருஜீ அம்மா !
உங்களிடம் ஒரு வேண்டுகோள் !
நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு. . .

 எங்களுக்கு நல்ல புத்தியில்லை !
எங்களுக்கு நல்ல நாமஜபமில்லை !
எங்களுக்கு நல்ல திடமில்லை !
எங்களுக்கு நல்ல நம்பிக்கையில்லை !
 எங்களுக்கு நல்ல வினயமில்லை !
எங்களுக்கு நல்ல பக்தியில்லை !
எங்களுக்கு நல்ல க்ருஷ்ண ப்ரேமையில்லை ! 

ஆனால் நிச்சயம் ஒரு நாள்
உங்களின் ஆசிர்வாதத்தால்,
ஒரு நாள்
நாங்களும் நல்ல பக்தர்களாக,
நல்ல பக்தைகளாக
மாறியே தீருவோம் ! ! !

தயவு செய்து . . .
எங்களை தள்ளி விடாதீர்கள் . . .

உங்களைத் தவிர
இந்த உலகில்
எங்களுக்கு யாருமில்லை . . .
எங்களுக்கு யாரையும் தெரியாது . . .

எப்படியாவது,
எங்களை இந்த கோரமான
சம்சாரத்திலிருந்து
கரையேற்றிவிடுங்கள் . . .

எங்களுக்கு
உங்களை உள்ளபடி
புரியவுமில்லை . . .

ஒரு நாள் புரியும் . . .
எங்களின்
உடல் கீழே
விழுமுன் . . .
ஒரு நாள் புரியும் . . . 
 

ஜெய் ஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவுக்கு ஜெய் ! 
 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP