ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, May 28, 2010

வா ! நரசிம்மா ! வா!

ராதேக்ருஷ்ணா

நரசிம்மா !
அழகிய சிங்கமே !
ப்ரஹ்லாத வரதா !

வா ! நரசிம்மா ! வா!
என் அஹம்பாவத்தைக்
கிழித்துப்போடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் சுயநலத்தைக்
கொன்றுபோடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் காமத்தை
அழித்துப்போடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் கோபத்தைக்
இல்லாமல் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
என் குழப்பத்தை
வதம் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
என் சந்தேகத்தைக்
குடித்துவிடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் பாவத்தை மாலையாகப்
போட்டுக்கொள்ளும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு ப்ரஹ்லாதனைப்போல்
பக்தியைத் தாரும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு தடைபடாத நாமஜபத்தை
அருள்செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு சுத்தமான ஞானத்தை
தந்தருளும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு வைராக்யத்தைக்
கொடுத்துவிடும் !

வா ! நரசிம்மா ! வா! 
 என்னை இந்த ஸம்சாரத்திலிருந்து
விடுதலை செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
இந்த கோரமான மனிதரிடமிருந்து
என்னைக் காப்பாற்றும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் அபயக்கரங்களை
என் தலையில் வையும் !

வா ! நரசிம்மா ! வா!
இந்த அடியேனை உன்
மடியில் அமர்த்திக்கொள்ளும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் திருநாக்கால் என்னையும்
நக்கி சுத்தம் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் திருவடியில் இந்த
ஜந்துவையும் வைத்துக்கொள் !

வா! நரசிம்மா ! வா!
இந்த உடல் முடியும் சமயத்தில்
உன் மடியில் என்னை
வைத்துக்கொள்ளும் !

நான் ப்ரஹ்லாதன் அல்ல !
நான் இரண்யகசிபுதான் !
அதனால் இந்த உடலைக்
கிழித்துப்போடும் !
இந்த உடலால் ஒரு
நல்லவையும் சம்பவிக்கவில்லை !

வீணடித்துவிட்டேன் ஜன்மா முழுவதையும் !
ஒரு நல்ல காரியமும் செய்ததில்லை மறந்தும் !
அதனால் கிழித்துவிடும் !
உன் கோபத்தை என் மீது காட்டி
என்னைக் காப்பாற்றும் !

எனக்கு கருணையே வேண்டாம் !
உன் கோபம் ஒன்றுதான்
என்னை சரிசெய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
கொன்று போடு !
கிழித்துப் போடு !
குடலை உருவி எடு !
ரத்தத்தைக் குடித்து விடு !

அப்போதாவது
நான் உருப்படுகிறேனா என்று
பார்க்கலாம் . . .

வா ! நரசிம்மா ! வா!
சீக்கிரம் வா . . .
உடனே வா . . .
விரைந்தோடி வா . . .

உக்கிர நரசிம்மனாக வா . . .

என்னை இல்லாமல் செய்ய வா . . .
வா ! நரசிம்மா ! வா!
  
 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP