ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, July 27, 2010

மரணம் . . .

ராதேக்ருஷ்ணா

உலகில் பலருக்கும் புரியாத
ஒன்று . . . மரணம் . . .

விஞ்ஞானமும் தெளிவாகச்
சொல்லமுடியாதது . . . மரணம் . . .

பலரும் பயப்படும் ஒன்று . . . மரணம் . . .

கஷ்டத்திலும்,பிரிவிலும்,அவமானத்திலும்,
நஷ்டத்திலும்,பயத்திலும்,தோல்வியிலும்,
வெறுப்பிலும்,குழப்பத்திலும்
பலரும் விரும்பும் ஒன்று . . . மரணம் . . .


மரணம் என்றால் என்ன ?


முடிவா . . . தொடக்கமா . . .


வா... யோசித்துப் பார்ப்போம் . . .


மரணம் . . .


தேவைகளின் முடிவா ?

 
துன்பங்களின் முடிவா ?ஆசைகளின் முடிவா ?

 
இம்சைகளின் முடிவா ?

 
தேடலின் முடிவா ?
 
பொறுப்புகளின் முடிவா ?


புலம்பல்களின் முடிவா ?

தொல்லைகளி்ன் முடிவா ?வியாதிகளின் முடிவா ?அவமானங்களின் முடிவா ?பிரச்சனைகளின் முடிவா ?பாவங்களின் முடிவா ?களைப்பின் முடிவா ?
 

அழுகையின் முடிவா ?

 
ஆதங்கத்தின் முடிவா ?
 

அஹம்பாவத்தின் முடிவா ?
 

போராட்டங்களின் முடிவா ?


புகழின் முடிவா ?


புரியாத புதிர்களின் முடிவா ?


விரோதத்தின் முடிவா ?


சிரிப்பின் முடிவா ?


சுகத்தின் முடிவா ?


கேள்விகளின் முடிவா ?


கேளிக்கைகளின் முடிவா ?


தோல்விகளின் முடிவா ?


வெற்றியின் முடிவா ?


சண்டைகளின் முடிவா ?


வெறுப்புகளின் முடிவா ?


காதலின் முடிவா ?


காமத்தின் முடிவா ?


செலவுகளின் முடிவா ?


சம்பாத்தியத்தின் முடிவா ?


கனவுகளின் முடிவா ?


லக்ஷியங்களின் முடிவா ?


சேமிப்பின் முடிவா ?


சேதங்களின் முடிவா ?


கோபத்தின் முடிவா ?


குதூகலத்தின் முடிவா ?


பலவீனத்தின் முடிவா ?


பாசத்தின் முடிவா ?


வேஷத்தின் முடிவா ?


கடமைகளின் முடிவா ?


கடன்களின் முடிவா ?


விபத்துகளின் முடிவா ?


ஆபத்துகளின் முடிவா ?


அவசரத்தின் முடிவா ?


அனுதாபங்களின் முடிவா ?


இன்னும் கேட்டுக்கொண்டே போகலாம் . . .

ஆனால் இது எதுவுமேயில்லை !


மரணம் என்பது
வெறும்
உடலின் முடிவுதான் . . .

மரணம் என்பது
உயிருக்கும், இந்த உடலுக்கும்
உள்ள பந்தத்தின் முடிவுதான் . . .

மற்ற எதுவுமே முடிவதில்லை . . .

காமமும் தொடரும் . . .

கடனும் தொடரும் . . .

கனவும் தொடரும் . . .

சண்டையும் தொடரும் . . .

போராட்டங்களும் தொடரும் . . .

புலம்பல்களும் தொடரும் . . .

பாவங்களும் தொடரும் . . .

பைத்தியக்காரத்தனங்களும் தொடரும் . . .


இந்த உடல் முடிந்து,
அடுத்த உடலுக்கு இந்த ஆத்மா
போய் சேரும்போது,

இந்த உடலில் அனுபவித்ததன்
பாதிப்புகள்,அடுத்த உடலுக்கு
நிச்சயம் வந்து சேரும் . . .

எப்படி ஒரு வாடகை வீட்டை விட்டு,
அடுத்த வீட்டுக்கு நம்முடையவற்றை
எடுத்துச் செல்கிறோமோ அதுபோலே,
ஆத்மாவும் எடுத்துச் செல்கிறது . . .

அப்பொழுது இதற்கு முடிவே கிடையாதா ?

ஏன் கிடையாது . . .

அப்போதைக்கு இப்போதே,
க்ருஷ்ண நாமத்தை,
வாயினால் பாடி,
மனதினால் சிந்தித்து வை . . .

அப்பொழுது இப்பொழுதிருக்கும்
வாடகை வீடான,
இந்த உடலை விட்டுப் போகும்போது
எதையும் எடுத்துக்கொண்டு
போகவேண்டாம் . . .

நேரடியாக வைகுந்தம் சென்று,
உனக்கென்று க்ருஷ்ணன் தயாராக
வைத்திருக்கும்,
பரமானந்தத்தை மட்டுமே
அனுபவிக்கலாம் . . .

சீக்கிரம் முடிவு செய் . . .

மரணம் யாருக்கு,என்று,எப்படி,எங்கு,
என்று
யாராலும் சொல்லமுடியாது . . .

முடிவு செய்துவிட்டாயா ?

செய்தால் நல்லது . . .Read more...

Monday, July 26, 2010

என் உலகம் !

ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் ஒரு உலகம் உண்டு !

எனக்கும் ஒரு உலகம் உண்டு !

என் உலகத்தைப் பற்றி
தெரிந்துகொள்ள ஆசையா ? ! ?

வா... சொல்கிறேன் !

என் உலகம் ஆனந்தமயமானது . . .
அங்கே துக்கமே கிடையாது !

என் உலகம் அழகானது . . .
அங்கே அவலக்ஷணமே கிடையாது !

என் உலகம் ஞானமயமானது . . .
அங்கே அஞ்ஞானமே கிடையாது !

என் உலகம் அன்பு மயமானது . . .
அங்கே விரோதமே கிடையாது !

என் உலகம் வெற்றியின் இருப்பிடம் . . .
அங்கே தோல்விகளே கிடையாது !

என் உலகில் குறும்புகளுக்கு குறைவில்லை . . .
அங்கே குற்றங்களுக்கு இடமில்லை !

என் உலகம் செல்வச்செழிப்பானது . . .
அங்கே ஏழ்மையில்லை !

என் உலகம் வீரம் நிறைந்தது  . . .
அங்கே பயம் வாழ வழியில்லை !

என் உலகம் மங்களகரமானது . . .
அங்கே அமங்களங்களே கிடையாது !

என் உலகம் சுகந்தமானது . . .
அங்கே துர்கந்தமே கிடையாது !

என் உலகில் சிரிப்பிற்க்கு பஞ்சமில்லை . . .
அங்கே ஆனந்த அழுகையுமுண்டு !

என் உலகில் சோம்பேறித்தனமே கிடையாது !
அங்கே எப்பொழுதும் கர்மயோகம் தான் !

என் உலகில் தனிமையில்லை . . .
அங்கே எப்பொழுதும் கொண்டாட்டம்தான் !

என் உலகில் பஞ்சமில்லை . . .
அங்கே எல்லா வளமும் என்றுமுண்டு !

என் உலகில் பொறாமையில்லை . . .
அங்கே எல்லோருக்கும் எல்லாம் உண்டு !

என் உலகில் பாரபட்சமில்லை . . .
அங்கே எல்லோரும் சமமே !

என் உலகில் காமம் இல்லை . . .
அங்கே ப்ரேமைக்கு மட்டுமே இடம் உண்டு !

என் உலகில் தயக்கமில்லை . . .
அங்கே உரிமைதான் மிக முக்கியம் !

என் உலகில் எதிர்பார்ப்பில்லை . . .
அங்கே அதனால் ஏமாற்றமில்லை !

என் உலகம் பரிவானது . . .
அங்கே கடுமையே கிடையாது !

என் உலகம் அத்ருஷ்ட மயமானது . . .
அங்கே துரத்ருஷ்டமே கிடையாது !

என் உலகில் கனவுகளே கிடையாது . . .
அங்கே விழிப்புதான் உண்டு !

என் உலகில் இருட்டே கிடையாது . . .
அது எப்பொழுதும் ஜொலித்துக்கொண்டுதான் இருக்கும் !

என் உலகம் தூங்குவதே கிடையாது . . .
அது எப்பொழுதும் நன்மையே சிந்திக்கிறது !

என் உலகில் பேய்,பிசாசுகளே கிடையாது . . .
அங்கே பக்தியும்,முக்தியும்தான் உண்டு !

என் உலகில் பொய்யுண்டு . . .
என் உலகில் மற்றவர் பொய் சொல்ல முடியாது !

என் உலகம் சத்தியமானது . . .
அதனால் எப்பொழுதும் நிரந்தரமானது !

என் உலகை உள்ளபடி வர்ணிக்க
யாராலும் முடியாது . . .
வேதமே தோற்றுப்போகும் ஓரிடம் . . .
என் உலகம் . . .

அந்த உலகம் என்னை எப்பொழுதும்
தாங்கிக்கொண்டேயிருக்கும் . . .

இன்னும் கோடி விதமாய் சொன்னாலும்
உனக்குப் புரியாது . . .
ஏனெனில் வார்த்தைகளே தேவையில்லாத
ஓரிடம் என் உலகம் . . .

உனக்குப் புரியும்படியாக
ஒரு வார்த்தையில்
சொல்லட்டுமா ? ! ?

என் உலகை ஆள்பவர் யார் தெரியுமா ?
ப்ரேம ஸ்வரூபிணி ராதிகா ராணி . . .

இப்பொழுது கண்டுபிடித்தாயா ?
இருந்தாலும் நானே சொல்கிறேன் . . .

என் உலகம்..... க்ருஷ்ணன் . . .
க்ருஷ்ணன் . . . என் உலகம் . . .
இப்பொழுது உனக்குப் புரிந்திருக்குமே !

மீண்டும் ஆரம்பத்திலிருந்துப்
படித்துப் பார் !

நன்றாகத் தெளிவாகப் புரியும் !

க்ருஷ்ணனே என் உலகம் . . .
க்ருஷ்ணனே உன் உலகம் . . .
க்ருஷ்ணனே நம் உலகம் . . .

க்ருஷ்ணனை உலகாகப் பார் . . .
உலகை க்ருஷ்ணனாகப் பார் . . .

உலகம் . . .க்ருஷ்ணன் . . .உலகம் !
க்ருஷ்ணன் . . . உலகம் . . . க்ருஷ்ணன் !


Read more...

Sunday, July 25, 2010

குருவே என் ஆதாரம் !

ராதேக்ருஷ்ணா
குருவே எனக்கு துணை !

குருவே எனக்கு கதி !

குருவே என் ரக்ஷகன் !

குருவே என் தேவை !

குருவே என் பலம் !

குருவே என் அறிவு !

குருவே என் தனம் !
குருவே என் சேமிப்பு !

குருவே என் மழை !

குருவே என் பிராணன் !

குருவே என் பூமி !

குருவே என் ஆகாசம் !

குருவே என் எதிர்காலம் !

குருவே என்  ஆகாரம் !

குருவே எனக்கு வெளிச்சம் !

குருவே எனக்கு வழி !

குருவே எனது பந்து !

குருவே என் ஞானம் !

குருவே என் வைராக்யம் !

குருவே என் பக்தி !

குருவே என் நலம்  விரும்பி !

குருவே எனக்கு எல்லாம் !

குருவே என்  ஆதாரம் !
இ ன்று நானிருப்பது என்  குருவால் மட்டுமே !


குரு  பூர்ணிமாவிற்கு
என்
குருஜீ அம்மாவிற்கு
கோடி கோடி நன்றிகள் !

குரு இல்லாமல் நானில்லை !

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP