ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, July 27, 2010

மரணம் . . .

ராதேக்ருஷ்ணா

உலகில் பலருக்கும் புரியாத
ஒன்று . . . மரணம் . . .

விஞ்ஞானமும் தெளிவாகச்
சொல்லமுடியாதது . . . மரணம் . . .

பலரும் பயப்படும் ஒன்று . . . மரணம் . . .

கஷ்டத்திலும்,பிரிவிலும்,அவமானத்திலும்,
நஷ்டத்திலும்,பயத்திலும்,தோல்வியிலும்,
வெறுப்பிலும்,குழப்பத்திலும்
பலரும் விரும்பும் ஒன்று . . . மரணம் . . .


மரணம் என்றால் என்ன ?


முடிவா . . . தொடக்கமா . . .


வா... யோசித்துப் பார்ப்போம் . . .


மரணம் . . .


தேவைகளின் முடிவா ?

 
துன்பங்களின் முடிவா ?ஆசைகளின் முடிவா ?

 
இம்சைகளின் முடிவா ?

 
தேடலின் முடிவா ?
 
பொறுப்புகளின் முடிவா ?


புலம்பல்களின் முடிவா ?

தொல்லைகளி்ன் முடிவா ?வியாதிகளின் முடிவா ?அவமானங்களின் முடிவா ?பிரச்சனைகளின் முடிவா ?பாவங்களின் முடிவா ?களைப்பின் முடிவா ?
 

அழுகையின் முடிவா ?

 
ஆதங்கத்தின் முடிவா ?
 

அஹம்பாவத்தின் முடிவா ?
 

போராட்டங்களின் முடிவா ?


புகழின் முடிவா ?


புரியாத புதிர்களின் முடிவா ?


விரோதத்தின் முடிவா ?


சிரிப்பின் முடிவா ?


சுகத்தின் முடிவா ?


கேள்விகளின் முடிவா ?


கேளிக்கைகளின் முடிவா ?


தோல்விகளின் முடிவா ?


வெற்றியின் முடிவா ?


சண்டைகளின் முடிவா ?


வெறுப்புகளின் முடிவா ?


காதலின் முடிவா ?


காமத்தின் முடிவா ?


செலவுகளின் முடிவா ?


சம்பாத்தியத்தின் முடிவா ?


கனவுகளின் முடிவா ?


லக்ஷியங்களின் முடிவா ?


சேமிப்பின் முடிவா ?


சேதங்களின் முடிவா ?


கோபத்தின் முடிவா ?


குதூகலத்தின் முடிவா ?


பலவீனத்தின் முடிவா ?


பாசத்தின் முடிவா ?


வேஷத்தின் முடிவா ?


கடமைகளின் முடிவா ?


கடன்களின் முடிவா ?


விபத்துகளின் முடிவா ?


ஆபத்துகளின் முடிவா ?


அவசரத்தின் முடிவா ?


அனுதாபங்களின் முடிவா ?


இன்னும் கேட்டுக்கொண்டே போகலாம் . . .

ஆனால் இது எதுவுமேயில்லை !


மரணம் என்பது
வெறும்
உடலின் முடிவுதான் . . .

மரணம் என்பது
உயிருக்கும், இந்த உடலுக்கும்
உள்ள பந்தத்தின் முடிவுதான் . . .

மற்ற எதுவுமே முடிவதில்லை . . .

காமமும் தொடரும் . . .

கடனும் தொடரும் . . .

கனவும் தொடரும் . . .

சண்டையும் தொடரும் . . .

போராட்டங்களும் தொடரும் . . .

புலம்பல்களும் தொடரும் . . .

பாவங்களும் தொடரும் . . .

பைத்தியக்காரத்தனங்களும் தொடரும் . . .


இந்த உடல் முடிந்து,
அடுத்த உடலுக்கு இந்த ஆத்மா
போய் சேரும்போது,

இந்த உடலில் அனுபவித்ததன்
பாதிப்புகள்,அடுத்த உடலுக்கு
நிச்சயம் வந்து சேரும் . . .

எப்படி ஒரு வாடகை வீட்டை விட்டு,
அடுத்த வீட்டுக்கு நம்முடையவற்றை
எடுத்துச் செல்கிறோமோ அதுபோலே,
ஆத்மாவும் எடுத்துச் செல்கிறது . . .

அப்பொழுது இதற்கு முடிவே கிடையாதா ?

ஏன் கிடையாது . . .

அப்போதைக்கு இப்போதே,
க்ருஷ்ண நாமத்தை,
வாயினால் பாடி,
மனதினால் சிந்தித்து வை . . .

அப்பொழுது இப்பொழுதிருக்கும்
வாடகை வீடான,
இந்த உடலை விட்டுப் போகும்போது
எதையும் எடுத்துக்கொண்டு
போகவேண்டாம் . . .

நேரடியாக வைகுந்தம் சென்று,
உனக்கென்று க்ருஷ்ணன் தயாராக
வைத்திருக்கும்,
பரமானந்தத்தை மட்டுமே
அனுபவிக்கலாம் . . .

சீக்கிரம் முடிவு செய் . . .

மரணம் யாருக்கு,என்று,எப்படி,எங்கு,
என்று
யாராலும் சொல்லமுடியாது . . .

முடிவு செய்துவிட்டாயா ?

செய்தால் நல்லது . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP