ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, August 2, 2010

கற்றுக்கொள் !ராதேக்ருஷ்ணா

யார் என்ன சொன்னாலும்
அமைதியாக இரு !
பொறுமையை வளர்த்துக்கொள் . . .

யார் எப்படி நடத்தினாலும்
நிதானமாக இரு !
உறுதியை வளர்த்துக்கொள் . . .

என்ன அவமானம் வந்தாலும்
கலங்காமல் இரு !
வைராக்கியத்தை வளர்த்துக்கொள் . . .

எந்த வியாதி வந்தாலும்
தைரியமாக இரு !
மனோதிடத்தை வளர்த்துக்கொள் . . .

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும்
சோர்ந்து போகாதிரு !
சமாளிக்கத் தெரிந்துகொள் . . .

யார் நம்பிக்கை துரோகம் செய்தாலும்
மனது உடையாமல் இரு !
மனிதர்களை புரிந்துகொள் . . .


எத்தனை செலவு வந்தாலும்
நடுங்காமல் இரு !
நாம ஜபத்தை பிடித்துக்கொள் . . .


 எத்தனைபேர் உன்னை விட்டு
விலகினாலும் தளர்ந்து போகாதிரு !
ஆத்ம பந்துக்களை தேடிக்கொள் . . .


உலகமே உனக்கு விரோதியானாலும்
பயப்படாமலிரு !
சத்சங்கத்தை அதிகமாக்கிக்கொள் . . .


எத்தனை குழப்பங்கள் வந்தாலும்
தப்பித்து ஒடாதிரு !
தெளிவாக சிந்திக்க பழகிக்கொள் . . .

எத்தனை தோல்விகள் வந்தாலும்
புலம்பாமலிரு !
வெற்றியடைய விடாமுயற்சி கொள் . . .


மொத்தத்தில் நம்பிக்கை கொள் !
க்ருஷ்ணனிடம் அசையாத நம்பிக்கை கொள் !
நாம ஜபத்தில் சிரத்தை கொள் !
சத்சங்கத்தில் ஆசை கொள் !
சத்குருவிடம் மரியாதை கொள் !முடிவாக,
வாழ கற்றுக்கொள் . . .

அழகாக வாழ கற்றுக்கொள் . . .அற்புதமாக வாழ கற்றுக்கொள் . . .அன்பாக வாழ கற்றுக்கொள் . . .


சரியாக வாழ கற்றுக்கொள் . . .


ஒழுங்காக வாழ கற்றுக்கொள் . . .

 
சந்தோஷமாக வாழ கற்றுக்கொள் . . .

பொறுப்பாக வாழ கற்றுக்கொள் . . .

பொறுமையோடு வாழ கற்றுக்கொள் . . .

வீரத்தோடு வாழ கற்றுக்கொள் . . .

விவேகத்தோடு வாழ கற்றுக்கொள் . . .


ஞானத்தோடு வாழ கற்றுக்கொள் . . .


உன் வாழ்க்கையை
வாழ கற்றுக்ககொள் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP