ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, August 10, 2010

மனிதர்களே ! மனிதர்களே !


ராதேக்ருஷ்ணா


ஹே மனிதர்களே !

ஏன் சில மனிதர்களை
வெறுக்கிறீர்கள் . . .

ஏன் சில மனிதர்களை
நேசிக்கிறீர்கள் . . .


மனிதரைப் பார்க்காமல்
வாழவேண்டுமென்றால்
காட்டிற்க்குதான் போகவேண்டும் . . .


மனிதரோடு பழகாமலிருக்க
உயிரைத்தான் விடவேண்டும் . . .


ஆடு,மாடு,நாய்,காகம் கூட
மனிதர்களை ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது . . .


மனிதர்களிடத்தில்
மனதைக் கொடுக்காதே என்றுதான்
எல்லா பெரியவர்களும் சொல்கிறார்கள் . . .


மனிதர்களை வெறுத்துவிடு
என்று யாரும் சொல்லவில்லை. . .


நீ பார்க்கும் மனிதர்களில்
எத்தனை பக்தர்கள்
ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?


நீ பார்ப்பவர்கள் அனைவரையும்
பக்தராக நீ நினைக்க,
உனக்கு மிகவும் நல்லது . . .


உன் வாழ்வில் சமாதானம் கிட்டும் . . .


பக்தியில்லாத மனிதர்களை
எப்படி பக்தர்களாய் பார்ப்பது ?


அதற்குத்தானே இந்த ஆனந்தவேதம் . . .


சொல்கிறேன் ...கேள்....


வேலைக்காரியைப் பார்த்தால்
நாரதரை நினைத்துக்கொள் !

கைகாலில்லாதவரைப் பார்த்தால்
கூர்மதாஸரை நினைத்துக்கொள் !

குருடரைப் பார்த்தால்
சூரதாஸரை நினைத்துக்கொள் !

முகம்மதியரைப் பார்த்தால்
கபீர்தாஸரை நினைத்துக்கொள் !
 
குதிரைவண்டிக்காரனைப் பார்த்தால்
  சஞ்சயனை நினைத்துக்கொள் !
 
படகோட்டியைப் பார்த்தால்
 கோமாபாயை நினைத்துக்கொள் !


பெண் குழந்தையைப் பார்த்தால்
 ஆண்டாளை நினைத்துக்கொள் !

ஆண் குழந்தையைப் பார்த்தால்
துருவனை நினைத்துக்கொள் !


தம்பியைப் பார்த்தால்
லக்ஷ்மணனை நினைத்துக்கொள் !மீனவப் பெண்களைப் பார்த்தால்
வேதவ்யாசரை நினைத்துக்கொள் !கஞ்சனைப் பார்த்தால்
புரந்தரதாஸரை நினைத்துக்கொள் !


தாடியோடு யாரையாவது பார்த்தால்
கூரத்தாழ்வானை நினைத்துக்கொள் !


மாடு மேய்ப்பவர்களைப் பார்த்தால்
கோபர்களை நினைத்துக்கொள் !


வேசியைப் பார்த்தால்
கானோபாத்ராவை நினைத்துக்கொள் !காய்கறிகாரனைப் பார்த்தால்
சாருகாதாஸரை நினைத்துக்கொள் !


கையில்லாதவர்களைப் பார்த்தால்
கோரா கும்பாரை நினைத்துக்கொள் !


திருடரைப் பார்த்தால்
திருமங்கையாழ்வாரை நினைத்துக்கொள் !


பெண்டாட்டிதாசனைப் பார்த்தால்
பிள்ளை உறங்காவில்லிதாஸரை
நினைத்துக்கொள் !


பிச்சைக்காரனைப் பார்த்தால்
பந்து மஹாந்தியை நினைத்துக்கொள் !

ஊமையைப் பார்த்தால்
இராமானுஜரின் சிஷ்யர் 
ஊமை சிஷ்யரை நினைத்துக்கொள் !


சமையல்காரரைப் பார்த்தால்
கிடாம்பியாச்சானை நினைத்துக்கொள் !


தொழுநோயாளியைப் பார்த்தால்
 வாசு தேவ கோஷை நினைத்துக்கொள் !

பக்கவாதம் வந்தவரைப் பார்த்தால்
ஸ்ரீ மன் நாராயண பட்டத்தரியை நினைத்துக்கொள் !

பைத்தியத்தைப் பார்த்தால்
 சதாசிவ ப்ரும்மேந்திரரை நினைத்துக்கொள் !

நன்றாக அலங்காரம் செய்யும்
ஆணைப் பார்த்தால்
புண்டரீக வித்யா நிதியை நினைத்துக்கொள் !

வியாபாரியைப் பார்த்தால்
சந்த் துகாராமை நினைத்துக்கொள் !

தயிர் விற்பவர்களைப் பார்த்தால்
இராமானுஜரின் தயிர்காரியை நினைத்துக்கொள் !


விவசாயியைப் பார்த்தால்
தனா சாடரை நினைத்துக்கொள் !

மண்பானை செய்பவரைப் பார்த்தால்
குரவ நம்பியை நினைத்துக்கொள் !


பொற்கொல்லரைப் பார்த்தால்
நரஹரி சோனாரை நினைத்துக்கொள் !

சேவகர்களைப் பார்த்தால்
ஜய, விஜயர்களை நினைத்துக்கொள் !
 
கர்ப்பிணியைப் பார்த்தால்
தேவகியை நினைத்துக்கொள் !

அரசரைப் பார்த்தால்
சத்ரபதி சிவாஜியை நினைத்துக்கொள் !


இரட்டையரைப் பார்த்தால்
லவ குசாவை நினைத்துக்கொள் !


இப்படி உன்னைச் சுற்றி
பக்தர்கள் பல விதமாய்
அலைகிறார்கள் !


நீ தான் இத்தனை நாள்
கோட்டைவிட்டாய் !


இனி விடமாட்டாய் என்று
திடமாக நம்புகிறேன் . . .

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP