ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, August 20, 2010

கை வீசம்மா கை வீசு !

 ராதேக்ருஷ்ணாகுழந்தைப் பருவம் . . .

நாம் மறக்கவே முடியாதது . . .

நாம் பலவற்றை மறந்த வயது . . .

நாம் பலரையும் நேசித்த வயது . . .

நாம் பலதையும் ரசித்த வயது . . .

நாம் பல விஷயத்திற்கும் அழுத வயது !

நாம் ஆனந்தமாய் சிரித்த வயது !

நாம் எதையும் யோசிக்காத வயது !

நாம் மறந்தும் திட்டமிடாத வயது !

நாம் வேறுபாடு அறியாத வயது !

நாம் பணத்தை கணக்கிடாத வயது !

நாம் குப்பையையும்
அழகாய் பார்த்த வயது !

நாம் ஆசைப்பட்டு
குளிக்காத வயது !

நாம் மழலையில் எல்லோரையும்
வசப்படுத்திய வயது !

நாம் சைகையினால் பல
காரியங்களை சாதித்த வயது !

நாம் மரியாதையைப் பற்றிக்
கவலைப்படாத வயது !

நாம் கௌரவத்தைப் பற்றி
யோசிக்காத வயது !

நம் பலவீனம் தெரியாத வயது !

நம் பலம் புரியாத வயது !

நாம் காமத்தைக் கொண்டாடாத வயது !

நாம் காதலில் தோற்காத வயது !

நாம் காதலை அறியாத வயது !

நாம் ஜாதியைப் பற்றி தெரியாத வயது !

நாம் எதிர்காலத்தைப் பற்றி
கவலைப்படாத வயது !

நாம் மீண்டும் கிடைக்காதா
என்று
ஏங்கும் வயது !

மீண்டும் கிடைக்குமா ?
மீ்ண்டும் கிடைத்தால் ?

எப்படி ஆரம்பிக்கலாம் . . .

மிகவும் சரியான ஆரம்பமாய்
அது இருக்க வேண்டும் . . .

இப்பொழுது நீ
சிறிய குழந்தை என்று
நினைத்துக்கொள் . . .

இப்பொழுது உனக்குத்
தெரிந்த,
ஆனால் தெரியாத
ஒரு பாடலைச்
சொல்லித்தருகிறேன் . . .

கற்றுக்கொள் . . .

கை வீசம்மா கை வீசு !

சத் சங்கம் போகலாம் கை வீசு !

கிச்சா கதை கேட்கலாம் கை வீசு !

நாம ஜபம் பண்ணலாம் கை வீசு !

பக்தர்களைப் பார்க்கலாம் கை வீசு !

பஜனை பண்ணலாம் கை வீசு !

குதித்து ஆடலாம் கை வீசு !

ராதிகாவை நினைக்கலாம் கை வீசு !

பூஜை பண்ணலாம் கை வீசு !

சத்குருவை சேவிக்கலாம் கை வீசு !

நிவேதனம் பண்ணலாம் கை வீசு !

ஆரத்தி காட்டலாம் கை வீசு !

ப்ரசாதம் சாப்பிடலாம் கை வீசு !

சந்தோஷமாய் வாழலாம் கை வீசு !

கை வீசம்மா கை வீசு !

இப்படியே சொல்லிக்கொண்டிரு . . .
ஒரு நாள் நீ க்ருஷ்ண குழந்தை
என்று உனக்குப் புரியும் . . .

அதுவரை
கை வீசம்மா கை வீசு !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP