ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, September 18, 2010

எல்லை . . .

ராதேக்ருஷ்ணா

எல்லை . . .

எல்லா எல்லைகளையும்
உடைத்தெறி . . .

எல்லா எல்லைகளையும்
தாண்டி வா . . .

எல்லா எல்லைகளையும்
மாற்றி அமை . . .

எல்லா எல்லைகளையும்
வீசி எறி . . .

உனக்கு மொழியும் எல்லையில்லை !

உனக்கு வயதும் எல்லையில்லை !

உனக்கு குடும்பமும் எல்லையில்லை ! 

உனக்கு வீடும் எல்லையில்லை ! 

உனக்கு ஊரும் எல்லையில்லை !

உனக்கு தேசமும் எல்லையில்லை !

உன் பாலினமும் எல்லையில்லை !

உனக்கு ஜாதியும் எல்லையில்லை !

உனக்கு குலமும் எல்லையில்லை !

உனக்கு மதமும் எல்லையில்லை !

உனக்கு சொத்தும் எல்லையில்லை !

உனக்கு படிப்பும் எல்லையில்லை !

உனக்கு கனவுகளும் எல்லையில்லை !

உனக்கு பயமும் எல்லையில்லை !

உனக்கு பலவீனமும் எல்லையில்லை !

உனக்கு பகலும் எல்லையில்லை !

உனக்கு இரவும் எல்லையில்லை ! 

உனக்கு நேரமும் எல்லையில்லை !

உனக்கு விதியும் எல்லையில்லை !

உனக்கு ராசியும் எல்லையில்லை !

உனக்கு பெயரும் எல்லையில்லை !

உனக்கு குடும்பமும் எல்லையில்லை !

உனக்கு பூமியும் எல்லையில்லை !

உனக்கு கடலும் எல்லையில்லை !

உனக்கு சந்திரனும் எல்லையில்லை !

உனக்கு சூரியனும் எல்லையில்லை !

உனக்கு வானமும் எல்லையில்லை ! 

 நீ தான் எல்லையை வைத்துக்கொண்டிருக்கிறாய் !

நீ தான் எல்லையை நிர்ணயம் செய்திருக்கிறாய் !

ஒன்றை நீ தெளிவாகப் புரிந்துகொள் !

உனக்கு ஒரு எல்லையுமில்லை !

க்ருஷ்ணனும் எல்லையில்லாதவன் !

உனக்கும் எல்லையில்லை !

பிறகு ஏன் உன் வாழ்வில்
இத்தனை எல்லைகள் !

ஒவ்வொரு எல்லையும் உன்
வாழ்வை தீர்மானிக்கின்றதே ?

உன் வாழ்வை பல எல்லைகள்
தடை செய்கின்றனவே ?

உண்மையை சொல்லவா . . .

நிஜமாகவே யாரும் உன்னை
தடைசெய்யவில்லை . . .

உனக்கு யாருமே எல்லையை
நிர்ணயிக்கவில்லை . . .

உன் மனமே உன் வாழ்வின் எல்லை . . .எங்கெல்லாம் நீ எல்லையை
உணர்கிறாயோ,காண்கிறாயோ,
அங்கெல்லாம் உன் மனமே
உனக்கு எல்லை என்பதை புரிந்துகொள் !

உன் மனதிலுள்ள எல்லா
எல்லைகளையும் அழித்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் வாழ்விற்கும் எல்லையில்லை !

வாழ்க்கைக்கு எல்லையில்லாததால்
உன் சிந்தனைக்கும் எல்லையில்லை !

சிந்தனைக்கு எல்லையில்லாததால்
உனக்கு வாய்ப்புகளுக்கும் எல்லையில்லை !

வாய்ப்புகளுக்கு எல்லையில்லாததால்
வெற்றிகளுக்கும் எல்லையில்லை !

வெற்றிகளுக்கு எல்லையில்லாததால்
 உன் ஆனந்தத்திற்கும் எல்லையில்லை !

எல்லையில்லாத ஆனந்தத்தை
அனுபவி !

அதை எல்லை வைக்காமல்
எல்லோருக்கும் கொடு !

உலகின் ஆனந்த எல்லையை மாற்று . . .

உலகின் சிந்தனை எல்லையை சரிசெய் . . .

உலகின் எல்லைகளை அழித்துவிடு . . .

இனி ஒரு எல்லையுமில்லை . . .

Read more...

Thursday, September 16, 2010

இழப்பு ? ! ?

ராதேக்ருஷ்ணா

இழப்பு !


எப்பொழுது பார்த்தாலும்
ஏதேனும் இழந்ததைப்பற்றியே
பேசும் முட்டாள் கூட்டம் !

இருக்கும் வாழ்வை
ரசிக்கத்தெரியாத
பைத்தியக்காரக் கூட்டம் !

இழந்ததை நினைத்தே
இப்பொழுதிருக்கும் ஆனந்தத்தை
அனுபவிக்காத அசட்டுக்கூட்டம் !

அடுத்தவரிடம் தான்
இழந்ததைப் பற்றியே பேசி
வீணாகும் வீணர்கள் கூட்டம் !

அப்பப்பா . . .
தினமும் இந்த ஜனங்கள்
ஏதேனும் ஒரு இழப்பைப்பற்றியே
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ! 

ஒன்றுமில்லாத விஷயங்களை
இழந்ததற்கெல்லாம்
ஒரு பெரிய அழுகை,ஒப்பாரி எல்லாம் !

இழப்பையே யோசிப்பவர்கள்,
இருப்பதை ஏன் யோசிப்பதில்லை !


நாம் மிகப்பெரிய
அற்புதங்கள் பலவற்றை
இழந்துவிட்டோம் . . .

ஒரு கவலையுமில்லாத
நம்முடைய குழந்தைப் பருவத்தை
இழந்துவிட்டோம் . . .

எத்தனை இரவுகளை
தூக்கத்திலேயே தெரியாமல்
இழந்துவிட்டோம் . . .

எத்தனை பகல் பொழுதை
ஓட்டத்திலும்,உழைப்பிலும்
இழந்துவிட்டோம் . . .

கோபத்தினால் எத்தனை முறை
நல்ல ஆனந்தத்தை
இழந்துவிட்டோம் . . .

குழப்பத்தினால் எவ்வளவு
நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிட்டோம் . . .

அவசரத்தினால் எத்தனை
நல்ல விஷயங்களை
இழந்துவிட்டோம் . . .

முட்டாள்தனத்தினால்
எத்தனை தடவை
நிம்மதியை இழந்துவிட்டோம் . . .

அல்ப விஷயங்களில்
மனதை கொடுத்துவிட்டு
எத்தனை முறை தெய்வதரிசனத்தை
இழந்துவிட்டோம் . . .

பாசத்தினால் எத்தனை
முறை கோயிலுக்குப் போகும்
வாய்ப்புகளை இழந்துவிட்டோம் . . .

இதையெல்லாம் விட
நீ என்ன பெரியதாக இழந்துவிட்டாய் ?
சும்மா புலம்பாதே . . .

பணத்தை இழந்ததற்கு
ஒரு புலம்பல் . . .
உன்னை விட பணம் பெரியதல்ல . . .

தங்கத்தை இழந்ததற்கு
ஒரு ஒப்பாரி . . .
உன்னை விட தங்கம் சிறந்ததல்ல . . .

பிடித்த ஆடையை தொலைத்ததற்கு
ஒரு அழுகை . . .
உன்னை விட ஆடை உயர்ந்ததல்ல . . .

சில நாள் தூக்கம் கெட்டதற்கு
ஒரு வருத்தம் . . .
உன்னை விட தூக்கம் அழகமல்ல . . .

வீட்டை இழந்ததற்கு
ஒரு சோகம் . . .
உன்னை விட வீடு பெரியதல்ல . . .

செருப்பை இழந்ததற்கு
ஒரு பெரிய துன்பம் . . .
உன்னை விட செருப்பு அற்புதமல்ல . . .

சேர்த்த சொத்தை இழந்ததற்கு
கப்பல் கவிழ்ந்தார் போல்
முகம் முழுக்க சோகம் . . .
உன்னை விட சொத்து
விலைஉயர்ந்ததல்ல . . .

இன்னும் பல நான் சொல்வேன் . . .
போதுமே . . .
உன் புலம்பல் . . .
உன் அழுகை . . .
உன் சோகம் . . .
உன் வருத்தம் . . .
உன் ஒப்பாரி . . .

ஒன்றை நீ ஞாபகம் வைத்துக்கொள் !

நீ இழந்ததை விட
நீ பெரியவன்/பெரியவள் . . .

இதை புரிந்துகொள் !

இழப்பை விட
நம்மிடம் இருப்பது அதிகம்தான் . . .


நாம் இழக்காதவற்றை சொல்கிறேன் !

நாம் ஒரு நாளும் க்ருஷ்ணனை
இழக்கவில்லை . . .

நாம் இன்று வரை நம்
வாழ்வை இழக்கவில்லை . . .

நம் வாழ்க்கை நாம் இழந்ததை
எல்லாம் நமக்கு திருப்பித்தரும்
ஆற்றல் உடையது . . .

நாம் இழந்த மனிதர்களின்
அரவணைப்பைத் தர
நம் க்ருஷ்ணன் இருக்கிறான் . . .

இப்போது வாழ் . . .
உனக்காக வாழ் . . .
உன் வாழ்க்கைக்காக வாழ் . . .

நீ எதையெல்லாம்
இழந்தாயோ அதையெல்லாம்
உன் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு !

இனி இழப்பை சிந்திக்காதே . . .
இனி இருப்பதை மட்டும் யோசி . . .
இனி வாழ்வை நேசி . . .

இனி உன்னைச் சுற்றி இருப்பதை ரசி . . .
இனி உன்னிடம் இருப்பதை அனுபவி . . .

இழந்ததை நினைத்து ஏங்காதே . . .
இருப்பதை ரசிக்காமல் புலம்பாதே . . 

.

Read more...

என்னோடு எனக்காக . .

ராதேக்ருஷ்ணா

நான் மிகவும் பாக்கியவான் . . .

நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன் . . .

நான் மிகவும் நிம்மதியாக
இருக்கிறேன் . . .

நான் நல்ல ஆரோக்கியமாக
இருக்கிறேன் . . .

நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் . . .

நான் சந்தோஷமாக
சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறேன் . . .

இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?

இதன் ரகசியம் சொல்லவா . . .

என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
திருக்கோளூர்
வைத்தமாநிதி பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர்
வைத்தியர் வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
திருக்கச்சி
பேரருளாளன் வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன்
ரண் சோட் ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன்
ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல்
திருப்பதி ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம்
மாலோல நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி
பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி
சுந்தர பரிபூரண நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன்
பாங்கே பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?

சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .


நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?


இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !


நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
விட்டலன்,பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை
மகர நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம்
நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
ஸ்ரீரங்கம்
ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர்
உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை
ஸ்தல சயனப் பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி
ஸ்ரீ க்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருப்பாடகம்
பாண்டவர் தூத பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !


அதனால் என் தேவைகளைப் பற்றி,
என் வாழ்க்கையைப் பற்றி,
என் எதிர்காலத்தைப் பற்றி,
என் மரணத்தைப் பற்றி,
என் குடும்பத்தைப் பற்றி,
என் கௌரவத்தைப் பற்றி
நான் யோசிப்பதேயில்லை . . .


ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .


எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம்
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?


நான் ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .


எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .


எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
ஆனந்தமாகவே இருப்பேன் . . .


நீயும் இவர்களை உன்னோடு
வைத்துக்கொள் !


உன் வாழ்க்கையும் நிச்சயம்
ஆனந்தமாகவே
இருக்கும் . . .Read more...

Wednesday, September 15, 2010

சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்

ராதேக்ருஷ்ணா

இலங்கை . . .

பூமிப்பந்தின் அழகான தீவு . . .

இயற்கை அன்னையின்
அற்புதத்தீவு . . .

குபேரனின் பட்டிணம் . . .

அரக்கர் குல சிகாமணி
விபீஷண ஆழ்வாரைத் தந்த
ஒரு புண்ணியத் தீவு. . .

சீதா பிராட்டியும் தவமிருந்து
பதிவிரதையின் பலத்தை
நிரூபணம் செய்த தீவு . . .

வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும்,
"ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து
சீதையைத் தேடிப் பறந்த தீவு . . .

சிறிய திருவடி ஆஞ்சநேயரும்
அழகிலும்,ஐஸ்வர்யத்திலும்,
அசந்துபோன தீவு . . .

ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து,
அவளை சமாதானப்படுத்தி,
ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . .

ராமனின் கை மோதிரத்தைக் கண்டு,
உகந்து,சீதையும் ராமனுக்கு தன்
சூடாமணியை தந்த தீவு . . .

சக்ரவர்த்தி திருமகன் ராமனும்,
தன்னுடைய திருவடியைப் பதித்த
உயர்ந்த தீவு . . .

கடலரசனின் மடியில்
தனக்கும்,பாரதத்திற்கும்
சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம்
உறுதி செய்யும் தீவு . . .

எங்கள் ஸ்ரீரங்கராஜனும்,
எப்பொழுதும் தன் திருக்கண்களால்
கடாக்ஷிக்கும் தீவு . . .

கருணையின் உறைவிடம்
சீதா பிராட்டி அரக்கிகளுக்கு
அபயம் அளித்த தீவு . . .

எங்கள் சீதா மாதாவை
பத்திரமாகப் பாதுகாத்த
உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . .

வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும்,
தங்கள் வாக்கியங்களில்
கொண்டாடி மகிழ்ந்த தீவு . . .

ஆஞ்சநேயரும்,விபீஷணரும்,
பகவான் ராமனைப் பற்றி
அளவளாவிய தீவு . . .

ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான
சுந்தரகாண்டத்தை தன்னுள்
வைத்திருக்கும் தீவு . . .

ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும்
தைரியமும் நிரூபணம் ஆன
பக்தித் தீவு . . .

ஆஞ்சநேயரும் தன்னை
சுயசோதனை செய்துகொண்டு,
தன் மனதை உணர்ந்த தீவு . . .

பதிவிரதை மண்டோதரியும்,
பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக
வாழ்ந்த பெருமை மிகு தீவு . . .

அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து,
ராவணனின் அஹம்பாவத்தை
வதம் செய்த அற்புதத் தீவு . . .

சீதையை ராமன் அக்னிப்ரவேசம்
செய்யச் சொல்ல அவளின்
கற்பை நிரூபணம் செய்த தீவு . . .

அழகன் ராமனும்,அழகி சீதையும்,
புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு
புறப்பட்ட தீவு . . .

இன்றும் ராமாயணத்தின்
அடையாளத்தை மறக்காத,
அழிக்காத,மறைக்காதத் தீவு . . .

எங்கள் பாரதியும்,
"சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்" என்று
புலம்பிய தீவு . . .

இத்தனை பெருமை உடைய தீவு . . .
இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . .

ஹே விபீஷணா !
அங்கே அமைதி திரும்ப
நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . .

ஹே ஆஞ்சநேயா !
இலங்கையில் நிம்மதி உண்டாக
உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . .

ஹே சீதா மாதா !
ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும்
ஒற்றுமையாய் வாழ வரம் தா . . .

ஹே ராமா !
இலங்கை உன் சன்னிதானத்தில்
ஆனந்தமாய் வாழ அருள் செய் . . .

இலங்கை மாதா !
நீ நன்றாக இருக்கவேண்டும் !
பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !


பாரதவாசிகளுக்கு
இலங்கைமாதாவே நீ சித்தி . . .
இலங்கைவாசிகளுக்கு
பாரதமாதாவே நீ பெரியம்மா . . .பாரதமாதா எப்பொழுதும்
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . .


பாரதமும்,இலங்கையும்

பாரதமாதா எப்பொழுதும்,
உன் உச்சி முகந்து,
உன்னை அன்போடு
ரசித்துக்கொண்டிருக்கிறாள் !

நீயும்,பாரதமாதாவும்
கை கோர்த்து உலகையே
வசம் செய்யும் அந்த நாள்
சீக்கிரத்தில் வர வேண்டும் . . .

வரும். . .
தமிழரும்,சிங்களரும்
ஒன்றாய் வாழும் பொன்னாள்
சீக்கிரத்தில் வந்தே தீரும் . . .

அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை
செய்வோம் . . .

நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .Read more...

ராதிகாவைத் தா !

ராதேக்ருஷ்ணா

ராதே . . . ராதே . . .

இந்தத் திருநாமத்திற்கு தான்
எத்தனை பலம் . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை ப்ரேமை . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை கருணை . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை வசீகரம் . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை அமைதி . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை அழகு . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை உரிமை . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை எளிமை . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை அன்பு . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தில் தான்
எத்தனை வாத்சல்யம் . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமத்தை
பகவான் க்ருஷ்ணனே
ஜபித்துக்கொண்டிருக்கிறான் . . .

ராதே . . . ராதே . . .
ப்ருந்தாவனமே இந்தத்
திருநாமத்தில் தான்
ஜீவித்துக்கொண்டிருக்கிறது . . .

ராதே . . . ராதே . . .
இந்தத் திருநாமம்
பூமியில் உள்ளவர்களுக்குக்
கிடைக்காவிடில்,
க்ருஷ்ண ப்ரேமையே
தெரியாமல் போயிருக்கும் . . .

ராதே . . . ராதே . . .
ராதிகாவின் அவதாரம்
இந்தப் பூமியில் உள்ள
மனிதக்கூட்டத்திற்கு,
க்ருஷ்ண ப்ரேம ரசத்தை
புரியவைப்பதற்க்காகவே . . .

இன்று ராதாஷ்டமி . . .
க்ருஷ்ண ப்ரேமாஷ்டமி . . .
கோபிகா நாயகி அஷ்டமி . . .
பர்சானா ராணி அஷ்டமி . . .
ராசராசேஸ்வரி அஷ்டமி . . .
நிகுஞ்சேஸ்வரி அஷ்டமி . . .

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளில்
நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம் . . .

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
உன் திருவடிகளில் சமர்ப்பணம் . . .

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
எங்களின் நமஸ்காரங்கள் . . .

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
க்ருஷ்ணன் உனக்கு
என்ன தருவான் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
நீ க்ருஷ்ணனுக்கு
என்ன தருவாய் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
நாங்கள் என்ன தருவது ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
நீ என்ன தரப்போகிறாய் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
உன் தோழிகள் என்ன தருவார்கள் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
உன் தோழிகளுக்கு நீ என்ன தருவாய் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
என்ன வண்ணத்தில் வஸ்திரம்
உடுத்திக்கொள்ளப்போகிறாய் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளுக்கு
யசோதையும்,நந்தகோபரும்,
என்ன தருவார்கள் ?

ஹே ராதே . . .
உன் பிறந்தநாளில் யாரிடம்
சென்று ஆசிர்வாதம் வாங்குவாய் ?

ஹே ராதே . . .
இந்த பிறந்தநாளை
எங்களோடு கொண்டாட வருவாயா ?

எங்கள் வீட்டிற்கு வந்து
நாங்கள் தரும் பிறந்தநாள் பரிசை
வாங்கிக்கொள்வாயா ?

வா . . .ராதே . . . வா
வா...உன் க்ருஷ்ணனோடு வா . . .
வா...உன் தோழிகளோடு வா . . .
வா...உன் பக்தர்களோடு வா . . .


உனக்காகக் காத்திருக்கிறோம் . . .


ஹே ராதே . . .
இந்த பக்தி இல்லாத ஏழைகளை
பக்தியில் பணக்காரர்களாக மாற்ற
தயவு செய்து வா . . .


ஹே ராதே . . .
இந்த ப்ரேமையில்லாத காமப்பிசாசுகளை
உன் தாசிகளாக்கிக்கொள்ள
கருணை கூர்ந்து வா . . .


ஹே ராதே . . .
இந்த அஹம்பாவிகளை சரி செய்து
க்ருஷ்ண கூட்டத்தில்
சேர்த்துவிட அன்போடு வா . . .


ஹே ராதே . . .
இந்தப் பாவக்கூட்டத்தை
க்ருஷ்ண ப்ரேம ரசத்தில்
திளைக்க வைக்க வா . . .


இந்த சுயநலக்கூட்டத்தை,
க்ருஷ்ணனுக்கு பிரியமானதாக
மாற்ற உரிமையோடு வா . . .


ஹே ராதே . . .
உன்னை விட்டால் எங்களுக்கு
யாருமில்லை . . .


உன்னைத் தவிர இந்தக்
குழந்தைகளுக்கு கதியில்லை . . .


ஹே ராதே . . .
தயை கூர்ந்து அருள் செய் . . .


எங்களை மன்னித்து
உன் திருவடிகளில் இடம் கொடு . . .


க்ருஷ்ணா . . .
எங்களுக்கு ராதிகாவைத் தா . . .


க்ருஷ்ணா . . .
எங்களுக்கு ராதிகா வேண்டும் . . .


க்ருஷ்ணா. . .
இனியும் ராதிகாவையும்,
எங்களையும் தள்ளி வைக்காதே . . .

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP