ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, September 16, 2010

இழப்பு ? ! ?

ராதேக்ருஷ்ணா

இழப்பு !


எப்பொழுது பார்த்தாலும்
ஏதேனும் இழந்ததைப்பற்றியே
பேசும் முட்டாள் கூட்டம் !

இருக்கும் வாழ்வை
ரசிக்கத்தெரியாத
பைத்தியக்காரக் கூட்டம் !

இழந்ததை நினைத்தே
இப்பொழுதிருக்கும் ஆனந்தத்தை
அனுபவிக்காத அசட்டுக்கூட்டம் !

அடுத்தவரிடம் தான்
இழந்ததைப் பற்றியே பேசி
வீணாகும் வீணர்கள் கூட்டம் !

அப்பப்பா . . .
தினமும் இந்த ஜனங்கள்
ஏதேனும் ஒரு இழப்பைப்பற்றியே
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ! 

ஒன்றுமில்லாத விஷயங்களை
இழந்ததற்கெல்லாம்
ஒரு பெரிய அழுகை,ஒப்பாரி எல்லாம் !

இழப்பையே யோசிப்பவர்கள்,
இருப்பதை ஏன் யோசிப்பதில்லை !


நாம் மிகப்பெரிய
அற்புதங்கள் பலவற்றை
இழந்துவிட்டோம் . . .

ஒரு கவலையுமில்லாத
நம்முடைய குழந்தைப் பருவத்தை
இழந்துவிட்டோம் . . .

எத்தனை இரவுகளை
தூக்கத்திலேயே தெரியாமல்
இழந்துவிட்டோம் . . .

எத்தனை பகல் பொழுதை
ஓட்டத்திலும்,உழைப்பிலும்
இழந்துவிட்டோம் . . .

கோபத்தினால் எத்தனை முறை
நல்ல ஆனந்தத்தை
இழந்துவிட்டோம் . . .

குழப்பத்தினால் எவ்வளவு
நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிட்டோம் . . .

அவசரத்தினால் எத்தனை
நல்ல விஷயங்களை
இழந்துவிட்டோம் . . .

முட்டாள்தனத்தினால்
எத்தனை தடவை
நிம்மதியை இழந்துவிட்டோம் . . .

அல்ப விஷயங்களில்
மனதை கொடுத்துவிட்டு
எத்தனை முறை தெய்வதரிசனத்தை
இழந்துவிட்டோம் . . .

பாசத்தினால் எத்தனை
முறை கோயிலுக்குப் போகும்
வாய்ப்புகளை இழந்துவிட்டோம் . . .

இதையெல்லாம் விட
நீ என்ன பெரியதாக இழந்துவிட்டாய் ?
சும்மா புலம்பாதே . . .

பணத்தை இழந்ததற்கு
ஒரு புலம்பல் . . .
உன்னை விட பணம் பெரியதல்ல . . .

தங்கத்தை இழந்ததற்கு
ஒரு ஒப்பாரி . . .
உன்னை விட தங்கம் சிறந்ததல்ல . . .

பிடித்த ஆடையை தொலைத்ததற்கு
ஒரு அழுகை . . .
உன்னை விட ஆடை உயர்ந்ததல்ல . . .

சில நாள் தூக்கம் கெட்டதற்கு
ஒரு வருத்தம் . . .
உன்னை விட தூக்கம் அழகமல்ல . . .

வீட்டை இழந்ததற்கு
ஒரு சோகம் . . .
உன்னை விட வீடு பெரியதல்ல . . .

செருப்பை இழந்ததற்கு
ஒரு பெரிய துன்பம் . . .
உன்னை விட செருப்பு அற்புதமல்ல . . .

சேர்த்த சொத்தை இழந்ததற்கு
கப்பல் கவிழ்ந்தார் போல்
முகம் முழுக்க சோகம் . . .
உன்னை விட சொத்து
விலைஉயர்ந்ததல்ல . . .

இன்னும் பல நான் சொல்வேன் . . .
போதுமே . . .
உன் புலம்பல் . . .
உன் அழுகை . . .
உன் சோகம் . . .
உன் வருத்தம் . . .
உன் ஒப்பாரி . . .

ஒன்றை நீ ஞாபகம் வைத்துக்கொள் !

நீ இழந்ததை விட
நீ பெரியவன்/பெரியவள் . . .

இதை புரிந்துகொள் !

இழப்பை விட
நம்மிடம் இருப்பது அதிகம்தான் . . .


நாம் இழக்காதவற்றை சொல்கிறேன் !

நாம் ஒரு நாளும் க்ருஷ்ணனை
இழக்கவில்லை . . .

நாம் இன்று வரை நம்
வாழ்வை இழக்கவில்லை . . .

நம் வாழ்க்கை நாம் இழந்ததை
எல்லாம் நமக்கு திருப்பித்தரும்
ஆற்றல் உடையது . . .

நாம் இழந்த மனிதர்களின்
அரவணைப்பைத் தர
நம் க்ருஷ்ணன் இருக்கிறான் . . .

இப்போது வாழ் . . .
உனக்காக வாழ் . . .
உன் வாழ்க்கைக்காக வாழ் . . .

நீ எதையெல்லாம்
இழந்தாயோ அதையெல்லாம்
உன் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு !

இனி இழப்பை சிந்திக்காதே . . .
இனி இருப்பதை மட்டும் யோசி . . .
இனி வாழ்வை நேசி . . .

இனி உன்னைச் சுற்றி இருப்பதை ரசி . . .
இனி உன்னிடம் இருப்பதை அனுபவி . . .

இழந்ததை நினைத்து ஏங்காதே . . .
இருப்பதை ரசிக்காமல் புலம்பாதே . . 

.

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP