ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, September 15, 2010

சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்

ராதேக்ருஷ்ணா

இலங்கை . . .

பூமிப்பந்தின் அழகான தீவு . . .

இயற்கை அன்னையின்
அற்புதத்தீவு . . .

குபேரனின் பட்டிணம் . . .

அரக்கர் குல சிகாமணி
விபீஷண ஆழ்வாரைத் தந்த
ஒரு புண்ணியத் தீவு. . .

சீதா பிராட்டியும் தவமிருந்து
பதிவிரதையின் பலத்தை
நிரூபணம் செய்த தீவு . . .

வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும்,
"ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து
சீதையைத் தேடிப் பறந்த தீவு . . .

சிறிய திருவடி ஆஞ்சநேயரும்
அழகிலும்,ஐஸ்வர்யத்திலும்,
அசந்துபோன தீவு . . .

ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து,
அவளை சமாதானப்படுத்தி,
ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . .

ராமனின் கை மோதிரத்தைக் கண்டு,
உகந்து,சீதையும் ராமனுக்கு தன்
சூடாமணியை தந்த தீவு . . .

சக்ரவர்த்தி திருமகன் ராமனும்,
தன்னுடைய திருவடியைப் பதித்த
உயர்ந்த தீவு . . .

கடலரசனின் மடியில்
தனக்கும்,பாரதத்திற்கும்
சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம்
உறுதி செய்யும் தீவு . . .

எங்கள் ஸ்ரீரங்கராஜனும்,
எப்பொழுதும் தன் திருக்கண்களால்
கடாக்ஷிக்கும் தீவு . . .

கருணையின் உறைவிடம்
சீதா பிராட்டி அரக்கிகளுக்கு
அபயம் அளித்த தீவு . . .

எங்கள் சீதா மாதாவை
பத்திரமாகப் பாதுகாத்த
உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . .

வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும்,
தங்கள் வாக்கியங்களில்
கொண்டாடி மகிழ்ந்த தீவு . . .

ஆஞ்சநேயரும்,விபீஷணரும்,
பகவான் ராமனைப் பற்றி
அளவளாவிய தீவு . . .

ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான
சுந்தரகாண்டத்தை தன்னுள்
வைத்திருக்கும் தீவு . . .

ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும்
தைரியமும் நிரூபணம் ஆன
பக்தித் தீவு . . .

ஆஞ்சநேயரும் தன்னை
சுயசோதனை செய்துகொண்டு,
தன் மனதை உணர்ந்த தீவு . . .

பதிவிரதை மண்டோதரியும்,
பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக
வாழ்ந்த பெருமை மிகு தீவு . . .

அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து,
ராவணனின் அஹம்பாவத்தை
வதம் செய்த அற்புதத் தீவு . . .

சீதையை ராமன் அக்னிப்ரவேசம்
செய்யச் சொல்ல அவளின்
கற்பை நிரூபணம் செய்த தீவு . . .

அழகன் ராமனும்,அழகி சீதையும்,
புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு
புறப்பட்ட தீவு . . .

இன்றும் ராமாயணத்தின்
அடையாளத்தை மறக்காத,
அழிக்காத,மறைக்காதத் தீவு . . .

எங்கள் பாரதியும்,
"சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்" என்று
புலம்பிய தீவு . . .

இத்தனை பெருமை உடைய தீவு . . .
இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . .

ஹே விபீஷணா !
அங்கே அமைதி திரும்ப
நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . .

ஹே ஆஞ்சநேயா !
இலங்கையில் நிம்மதி உண்டாக
உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . .

ஹே சீதா மாதா !
ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும்
ஒற்றுமையாய் வாழ வரம் தா . . .

ஹே ராமா !
இலங்கை உன் சன்னிதானத்தில்
ஆனந்தமாய் வாழ அருள் செய் . . .

இலங்கை மாதா !
நீ நன்றாக இருக்கவேண்டும் !
பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !


பாரதவாசிகளுக்கு
இலங்கைமாதாவே நீ சித்தி . . .
இலங்கைவாசிகளுக்கு
பாரதமாதாவே நீ பெரியம்மா . . .பாரதமாதா எப்பொழுதும்
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . .


பாரதமும்,இலங்கையும்

பாரதமாதா எப்பொழுதும்,
உன் உச்சி முகந்து,
உன்னை அன்போடு
ரசித்துக்கொண்டிருக்கிறாள் !

நீயும்,பாரதமாதாவும்
கை கோர்த்து உலகையே
வசம் செய்யும் அந்த நாள்
சீக்கிரத்தில் வர வேண்டும் . . .

வரும். . .
தமிழரும்,சிங்களரும்
ஒன்றாய் வாழும் பொன்னாள்
சீக்கிரத்தில் வந்தே தீரும் . . .

அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை
செய்வோம் . . .

நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP