ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, October 17, 2010

விஜய தசமி !

ராதேக்ருஷ்ணா

விஜயதசமி !

நிஜமாகவே அடியேனுக்கு
இன்று விஜயம் தந்த தசமி தான் !

அடியேனுக்கு இன்று
திவ்ய தேச விஜயம் தந்த தசமி தான் !

திருவை இடமாகக் கொண்ட எந்தையை
தரிசித்த விஜயமான தசமிதான் !

இன்று அடியேனை லக்ஷ்மிவராஹர்
ஆட்கொண்ட விஜயதசமி !

நித்யகல்யாண பெருமாள் இன்று
அடியேனை ஏற்றுக்கொண்ட கல்யாணதசமி !

ஸ்ரீலக்ஷ்மிவராஹஸ்வாமி,திருவிடவெந்தை 
Sri lakshmivaraha murthy of Thiruvidavendhai

பூமியைப் பிரளயத்திலிருந்து மீட்ட
ஆதிவராஹர் என்னையும் மீட்டார்  !

இரண்யாக்ஷணை வதம் செய்த
பூவராஹர் என் அஹம்பாவத்தையும் வதைத்தார் !

லக்ஷ்மியை இடது பக்கம் கொண்ட
என் லக்ஷ்மிவராஹர் என்னையும்
தன் அருகில் வைத்துக்கொண்டார் !

ஒரு கையால் தாயாரைப் பிடித்திருக்கும்
ஸ்ரீவராஹர் என்னையும் பிடித்துக்கொண்டார் !

ஸ்ரீ லக்ஷ்மிதேவிக்கு உபதேசித்த அழகுவராஹர்
எனக்கும் வாழ்வை உபதேசித்தார் !

ஒரு கையில் சங்கும்,ஒரு கையில் சக்கரமும்
கொண்ட கருப்பு வராஹர்,
என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் !

திருமங்கையாழ்வாரை விரஹதாபத்தில்
புலம்ப வைத்த நித்ய கல்யாண பெருமாள்,
இந்த கோபாலவல்லியையும் புலம்பவைத்தார் !

கடலோரத்தில் அமைதியாக தாயாரோடு,
ஏகாந்தமாக உபதேச நிலையிலிருக்கும்
அழகிய வராஹமூர்த்தி இந்தக் குழந்தையை
அன்போடு விஜயதசமியன்று தன்னுடைய
சன்னிதானத்தில் அழைத்து அனுக்ரஹித்தார் . . .

திருவிடவெந்தை பிரானே !
உன் சரணகமலங்களில் சரணடைகிறேன் !
உன் பூமியில் இந்த ஜந்துவும் பக்தி செய்து
வாழ ஆசீர்வாதம் செய்தாயே . . .
இந்தக் கருணைக்கு நான் என்ன தவம் செய்தேன் ?

உன் கருணைக்கு முன் நான் ஒன்றுமில்லை ! ! !

என்றும் இந்த கருணைக்கு அடியேன் அடிமை . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP