ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, October 31, 2010

சில மணிநேரங்கள் !

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் எத்தனையோ
காரியங்கள் செய்துகொண்டேயிருக்கிறோம் !

பயனற்ற செயல்கள் பலகோடி . . .
முட்டாள்தனமான காரியங்கள் சிலகோடி  . . .

சில சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே,
நாம் மிக அற்புதமான சில காரியங்களில்,
ஈடுபடுகின்றோம். . .


தெய்வத்தின் அனுக்ரஹத்தால் மட்டுமே
நாம் தெய்வீக சக்தியால் உந்தப்பட்டு
உருப்படியான காரியங்களை செய்கின்றோம் . . .


 அப்படி நாம் செய்யும் காரியம்தான்
கோவிலுக்குச் செல்வது . . .


தெய்வம் நிச்சயம் நமக்கு
என்றும் நன்மையே செய்கிறது!


மலையப்ப ஸ்வாமியை மிஞ்சின
கலியுக தெய்வம் வேறொன்று உண்டோ ? ? ?


திருமலை ஸ்ரீநிவாசன் தான் எங்களை
திருமலைக்கு அழைத்துச்சென்றது  . . .


திருமலை பாலாஜியின் அருளல்லாமல்
ஒரு ஜந்துவும் திருமலையில் நுழையமுடியாது . . .


இந்த இரண்டு கால் ஜந்துக்களையும்,
அலர்மேல் மங்கா உறை மார்பன்,
தன் திருமலைக்கு வரவழைத்தான் . . .
திருமலை மிக அழகானது . . .
திருமலை மிக அற்புதமானது . . .
திருமலை மிக உயர்ந்தது . . .
திருமலை மிக விசேஷமானது . . .
திருமலை மிக ஆச்சரியமானது . . .


திருமலையில் இருக்கும் நேரம்,
நிச்சயம் வைகுண்டத்தில் வாழும் நேரமே. . .


நாங்கள் மலையேறி ப்ரபுவின்
பொன்னடியில் சரணாகதி செய்ய
ஆவலோடு வரிசையில் நின்றோம் . . .


பொதுவாக எல்லாவற்றிற்க்கும்,
 காத்திருக்கும் மக்கள் கூட்டம்,
கோயிலில் மட்டும் காத்திருக்க
பொறுமையோடு இருப்பதில்லை . . .


கோவிலில் எத்தனை நேரம்
காத்திருக்கிறோமோ அத்தனை
நேரம் நம் கர்ம வினை நம்மை
அணுகவே அணுகாது . . .


அதனால் எப்பொழுதும் கோயிலில்
நிறைய நேரம் காத்திருக்க,
தொடர்ந்து ப்ரார்த்தனை செய் . . .


நாங்களும் ஆனந்தமாக பொறுமையாக
ஆசையோடு காத்திருந்தோம் . . .
காத்திருக்க வைத்தான் ஸ்ரீநிவாஸன் . . .


அவன் மலையில் இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்,
வைகுண்ட வாசம் தானே . . .


பக்தர்கள் கூட்டத்தில் நாமும்,
அடியவரின் அடியவராக,
நிற்பதே பெரிய வரப்ரசாதம் . . .


கூடியிருந்து குளிர்ந்து என்று
ஆண்டாள் சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் பக்த கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு
பகவானுக்காக காத்திருத்தலே ஆகும் . . .


3 மணி நேரம் . . .180 நிமிஷங்கள் . . .
ஆஹா. . .இந்த சில மணி நேரங்கள் . . .
பணம் கொடுத்தாலும் கிடைக்காது . . .
பதவி இருந்தாலும் கிடைக்காது . . .
ராஜனாய் இருந்தாலும் நடக்காது . . .
எத்தனை படித்தாலும் கிடைக்காது . . .


வாழ்க்கையில் வைத்தியருக்காக
காத்திருந்தோம் . . .
இளவயதில் கல்யாணத்திற்க்காக
காத்திருந்தோம் . . .
ப்ரயாணம் செய்ய வண்டிக்காக
காத்திருந்தோம் . . ,
யாரோ வருவதற்காக கால்கடுக்க
காத்திருந்தோம் . . .
வெட்டியாய் பல விஷயங்களுக்காக
காத்திருந்தோம் . . .
 வங்கியில் நம் பணத்தை எடுக்க
காத்திருந்தோம் . . .
கல்யாண வீட்டில் சாப்பாட்டிற்க்காக
காத்திருந்தோம் . . .
தூங்குவதற்காக இரவு வர
காத்திருந்தோம் . . .
பல சமயங்களில் வேலைக்காரர்களுக்காக
காத்திருந்தோம் . . .
இன்னும் இது போல் பல காத்திருப்புகள் . . .


ஆனால் இவற்றினால் இதுவரை
ஆனந்தம் அடைந்ததேயில்லை . . .
ஆனந்தம் என்று மயங்கினோம் . . .


உண்மையில் ஆனந்தம் . . .
திருமலையில் ஸ்ரீநிவாஸனைக் காண
காத்திருப்பதேயாகும் . . .


வாழ்வில் எப்பொழுதோ நாம் சென்று
அவனைத் தொழ . . .அந்த நாளுக்காக,
அந்த சில மணித் துளிகளுக்காக...
ஸ்ரீநிவாஸனே நமக்காகவே 
காத்திருக்கும்போது ,
அல்ப மனிதக் கூட்டம்,
அழுக்குடம்பு,எச்சில்வாய்,அஹம்பாவிகள்
நாம் காத்திருக்கக்கூடாதே என்ன ?  ?  ?


ஸ்ரீநிவாஸன் எங்களுக்காக காத்திருக்கிறான்
என்ற சுகத்திலேயே மேனி சிலிர்க்க,
ஆனந்தத்தில் அவனுடைய வைபவத்தை
சத்சங்கமாய் அனுபவித்துக்கொண்டு,
நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க,
வரிசையும் நகர, ஸ்ரீநிவாஸனிடம்
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தோம் . . .


சிறிது சிறிதாக வரிசை நகர நகர,
பெரிய மலை போன்ற பாபங்கள்,
நெருப்பிலிட்ட பஞ்சாக எறிந்துபோக,
மனதில் சமாதானம் அதிகமாக,
வாயிலே நாமஜபம் திடமாக வந்தது . . .
 
தீபாவளி வந்துவிட்டது ...

முடிந்தவுடன் மீண்டும் திருமலை செல்வோம் . . .


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP