ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, January 4, 2011

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !

ராதேக்ருஷ்ணா

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல் 
காமத்தில் மயங்காத மனது வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எதற்க்கும் அஞ்சாத தைரியம் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
பகவானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
அழகாகவும், அர்த்தத்தோடும் பேச வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எப்பொழுதும் வினயத்தோடு இருக்கவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராமனிஷ்டமாக வாழ வேண்டும் !


ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
புத்தி சாதுர்யமும், பலமும் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராம கதை கேட்டால் கண்ணீர் வழியவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
சகல சாஸ்திரங்களையும் கற்கவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராம தாஸனாகவே வாழ்ந்துகாட்ட வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்..................

உன்னைப்போல் என்னை மாற்றிவிடு !
இதைக் கேட்க எனக்கு அதிகாரமில்லை . . .

ஆனால் உன்னைப்போல் இருந்தால்தான்
இந்த சம்சாரத்தில் நான் ஜெயிக்கமுடியும் . . .

சம்சார சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
இந்த அல்ப ஜந்துவை,
உன் வாலால் கட்டித் தூக்கி,
பகவானின் சரணகமலங்களில் போட்டுவிடு . . .

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன் திருவடிகளில் சரணடைந்தேன் . . .

இந்த ஏழைக்குழந்தைக்காக
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் தூது செல் !

செல் . . .என்னை ஏற்றுக்கொள்ளச் சொல் . . .
  

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP