ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 ஜனவரி, 2011

புதியன புகுவாய் . . .

ராதேக்ருஷ்ணா
போகி வந்ததா . . .

பழையன கழிந்தாயா ?
புதியன புகுந்தாயா ?

நீ களையாத பழையன
பலவற்றை இங்கே நான் சொல்லவா ?

கோடி ஜன்மாவாக
நீ களையாதது உன்
பழைய அகம்பாவத்தை . . .

பல ஜன்மங்களாக
நீ களையாதது உன்
பழைய சுயநலத்தை . . .

பல வருஷங்களாக
நீ களையாதது உன்
பழைய சந்தேகத்தை . . .

பல பிறப்புகளாக
நீ களையாதது உன்
பழைய பாபங்களை . . .

பல கோடி ஜன்மங்களாக
நீ களையாதது உன்
பழைய கர்ம வினைகளை . . .

பல நாட்களாக 
நீ களையாதது உன்
பழைய சோம்பேறித்தனங்களை . . .

பல பிறவிகளாக
நீ களையாதது உன்
பழைய அறியாமைகளை . . .

பல ஜன்மாக்களாக
நீ களையாதது உன்
பழைய காமத்தை . . .

பல பிறவிகளாக
நீ களையாதது உன்
பழைய கோபத்தை . . .

இப்படி பல
பழைய குப்பைகளை
இன்னும் நீ களையவில்லை . . .

போகி முடிந்துவிட்டதே
என்று நீ நினைக்கிறாயா ?

நாள் முடிந்தால் அந்தப்
பண்டிகை முடிந்ததென யார் சொன்னார் ?

நம் போகிப்பண்டிகை
இன்னும் முடியவில்லை . . .

நீ உடனே உன்னிடம்
இருக்கும் இத்தனை
பழைய விஷயங்களையும்
களைந்து விடு . . .

களைந்து விட்டு வா . . .

பிறகு சொல்கிறேன் . . .

களைந்து விட்டாயா ? ! ?

இப்போது உன் மனம்
வெற்றிடமாக இருக்குமே . . .

எதையெதை எடுத்தாயோ,
அந்தந்த இடங்களில்
வேறு நல்லவற்றை வைப்போம் வா . . .

அகம்பாவத்தை எடுத்த
இடத்தில் பக்தியை வை . . .

சுயநலத்தை எடுத்த
இடத்தில் நாமஜபத்தை வை . . .

சந்தேகத்தை எடுத்த
இடத்தில் நம்பிக்கையை வை . . .

பாபத்தை எடுத்த
இடத்தில் சத்சங்கத்தை வை . . .

கர்ம வினைகளை எடுத்த
இடத்தில் சத்குருவை வை . . .

சோம்பேறித்தனத்தை எடுத்த
இடத்தில் சிரத்தையை வை . . .

அறியாமைகளை எடுத்த
இடத்தில் க்ருஷ்ணனை வை . . .

காமத்தை எடுத்த
இடத்தில் ப்ரேமையை வை . . .

கோபத்தை எடுத்த
இடத்தில் பணிவை வை . . .

இன்னும் எதையெல்லாம்
களைந்தாயோ, அந்த இடங்களில்
பக்தர்களை வை . . .

நிதானமாகச் செய் . . .
அவசரம் ஒன்றுமில்லை . . .

இப்படியே பழையன கழிது,
புதியன புகுவாய் . . .

வாழ்வை வெல்வாய் . . .

இந்தப் பொங்கலில்
ஞானம் பொங்கி வழியட்டும் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP