ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, January 31, 2011

என் அன்புக் காதலா !

ராதேக்ருஷ்ணா

என் அன்பு க்ருஷ்ணனுக்கு !
சாக்ஷாத் மன்மத மன்மதனுக்கு !
கரு நீல கட்டழகனுக்கு !

ஒரு தாசியின் காதல் கடிதம் !
ரகசியமாய் ஒரு காதல் கடிதம் !
வெட்கத்தைவிட்டு எழுதும் கடிதம் !

 க்ருஷ்ணா . . .
உன்னையே நம்புகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே நேசிக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே தொழுகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடமே கேட்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடமே பேசுகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே நினைக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
 உன்னிடமே யாசிக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடத்தில் கதறுகின்றேன் !

க்ருஷ்ணா . . .க்ருஷ்ணா. . .க்ருஷ்ணா . . .

என்னவென்று சொல்வேனடா என் கண்ணே !
உன்னையே காதலிக்கிறேன் . . .

இந்தக் கோபிக்காக
உன்னிடம் தூது செல்ல யாருமில்லை . . .

அதனால் என்னையே உன்னிடம்
தூது அனுப்பினேன் . . .

ஆனால் உன்னிடம் வந்த நான்
என்னை மறந்துவிட்டேன் . . .

அதனால் திரும்பவும் தேடினேன் . . .
உன்னிடம் தூது செல்ல ஒருவரை . . .

தேடித் தேடி கடைசியாக
ஒரு நல்ல தூதுவன் கிடைத்தான் . . .


அவனை நான் உனக்கு
அறிமுகப்படுத்துகிறேன் . . . 


அவன் பஞ்சபாண்டவருக்காகத்
தூது சென்றவன் . . .
த்வாரகையின் நாதன் !
ஸ்ரீமதி ருக்மிணியின் கணவன் !
தேவகியின் பிள்ளை !
யசோதையின் தத்துப்பிள்ளை !
வசுதேவரின் தவப்புதல்வன் !
நந்தகோபரின் அன்புச்செல்வன் !
குழலூவதில் மன்னன் !
வெண்ணை திருடுவதில் சமர்த்தன் !
மாடு மேய்ப்பதில் கெட்டிக்காரன் !
பெண்களை அழவைப்பதில் ப்ரியன் !
நம்பினவரைக் காப்பதில் தவறாதவன் !
உடல் வண்ணத்தில் கருப்பன் !
பொய் சொல்பவர்களின் ராஜன் !
காக்க வைப்பதில் முதல்வன் !
காதலை ரசிக்கும் ரசிகன் !
உபதேசிப்பதில் ஜகத்திற்கு ஆசார்யன் !
ராதிகாவின் ப்ரேம நாயகன் !
 கோபர்களைக் காக்கும் தலைவன் !
ராச நாட்டியத்தில் ராஜாதி ராஜன் !
ஏங்க வைப்பதில் சூரன் !
அனாதைகளின் அன்பன் !
தீனர்களின் தோழன் !
உள்ளத்தைக் கொள்ளையடிப்பதில் கள்ளழகன் ! 
மொத்தத்தில் சகலகலா வல்லவன் ! 
  
என் காதலை நான் இவனிடமே
சொல்லி அனுப்புகிறேன் . . . 

இவன் பெயர் கண்ணன் . . .
கோபிகைகளின் காதலன் . . .
அவனுக்கு காதல் என்றால்
ரொம்பவும் பிடிக்குமாம் !

அதனால் அவனை உன்னிடம்
தூது அனுப்புகின்றேன் !
நீயும் இவனிடம் ஜாக்கிரதையாக இரு !
நல்லவன் தான் . . .ஆனாலும்
மிகவும் ஜாக்கிரதையாக இரு !
உன் மனதையும் கொள்ளையடித்துவிடுவான் !
நீ எனக்கு வேண்டும் !
இவனுக்கு அடிமையாகி விடாதே !
ஜாக்கிரதை . . . ஜாக்கிரதை ! 

அந்தக் கண்ணன் இந்தக் கோபியின்
காதலை உன்னிடம் சொல்வான் !

அதைக் கேட்டவுடன் தாமதிக்காமல் வா !

தாமதித்தால் உனக்குத் தான் நஷ்டம் !
ஒரு நல்ல காதலியை இழப்பாய் . . .

 என் அன்புக் காதலா !
உன் காதலினால் வாழும்/வாடும்
ராதிகா தாசி கோபாலவல்லி . . .
 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP