ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, February 2, 2011

நான் யார் ? ? ?

ராதேக்ருஷ்ணா
  

நான் ராதிகாவின் வேலைக்காரி !

நான் ராதிகாவின் அடிமை !

நான் ராதிகாவின் சொத்து !

நான் ராதிகாவின் குழந்தை !

நான் ராதிகாவின் செல்லம் !

நான் ராதிகாவின் பாதுகை !

நான் ராதிகாவின் கிளி !

நான் ராதிகாவின் வஸ்திரம் !

நான் ராதிகாவின் ரசிகன் !

நான் ராதிகாவின் ஆபரணம் !

நான் ராதிகாவின் அன்பு !

நான் ராதிகாவின் ஹ்ருதயம் !

நான் ராதிகாவின் மனம் !

நான் ராதிகாவின் வார்த்தை !

நான் ராதிகாவின் உலகம் ! 

இப்பொழுது சொல் . . .
நான் யார் ?  ?  ?

இன்று அடியேன் ஒருவனை
வழியில் கண்டேன் . . .

நீ யாரெனக் கேட்டேன் . . .

அதற்குத்தான் அவன் சொன்ன
பதில்கள் ,இப்பொழுது நீ படித்தவையெல்லாம் . . !

அடியேன் சிரித்தேன் . . .

அதற்கு அவனும் சிரித்தான் . . .
சிரித்துக்கொண்டே கேட்டான் . . .
  
தெரியவில்லையா ? ? ?

இன்னும் ஒன்றைச் சொல்கிறேன் . . .

நான் ராதிகாவின் காதலன் . . .

இப்பொழுது கண்டுபிடித்திருப்பாயே . . .

ஆமாம் . . . நான் தான் க்ருஷ்ணன் . . .

எனக்கு அடையாளம் ராதிகா . . .
 ராதிகாவிற்கு அடையாளம் நான் . . .

ராதே என்றால் க்ருஷ்ணா . . .
க்ருஷ்ணா என்றால் ராதே . . .

சொன்னான் . . .சிரித்தான் . . .சென்றான் . . .

மீண்டும் அவனைக் காணத் தேடினேன் . . .
மறைந்து விட்டான் . . .

என்ன செய்வதென்று புரியவில்லை . . ?

யோசித்தேன் . . .அழுகை வந்தது . . .
கதறினேன் . . .அவன் சொன்னது நினைவில் வந்தது !

ராதே என்றால் க்ருஷ்ணா . . .
க்ருஷ்ணா என்றால் ராதே . . .

உடனே கத்தினேன் "ராதேக்ருஷ்ணா"

இருவர் வந்தனர் . . .
ஒரு அழகன் . . . ஒரு அழகி . . .
அழகன்  . . . அடியேன் பார்த்தவன் . . .
அழகி . . .அவன் சொன்னவள் . . . 

அழகி வந்தாள் ! என்னைத் தூக்கி
தன் இடுப்பில் வைத்துக்கொண்டாள் . . .

அழகன் வந்தான் ! எதற்கு அழைத்தாய்
குழந்தாய் ?. . .என்று என்னைக் கேட்டான் . . .

பதில் சொல்லத் தெரியவில்லை . . .
திருதிருவென்று முழித்தேன் . . .

என்ன பதில் சொல்வது ?
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் . . .
சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள் . . .
இந்தக் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் ! 
 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP