ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, February 5, 2011

திருவனந்தபுரம் . . .

ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரம் . . .
அனந்தபத்மநாபனின் அந்தப்புரம் !


திருவனந்தபுரம் . . .
த்வாரகாநாதனின் சொந்தப்புரம் !

திருவனந்தபுரம் . . .
 திவாகரமுனியை ஈர்த்த புரம் !

திருவனந்தபுரம் . . .
 பில்வமங்களரின் கண்ணி மாங்காய் புரம் !
  
திருவனந்தபுரம் . . .
பலராமனின் தீர்த்தயாத்ரா புரம் !திருவனந்தபுரம் . . .
ஹரிலக்ஷ்மியின் ராஜ்யபுரம் !
திருவனந்தபுரம் . . .
குடை படுக்கையான சயனபுரம் !
திருவனந்தபுரம் . . .
தாமரைக்கண்ணனின் தாமரைபுரம் !


திருவனந்தபுரம் . . .
தங்கமும் தவமிருக்கும் தவபுரம் !
திருவனந்தபுரம் . . .
தில்லை அம்பலவாணனின் சுகபுரம் !


திருவனந்தபுரம் . . .
 சதுர்முகனின் தொட்டில் புரம் !
திருவனந்தபுரம் . . . 
தேவர்களின் கைங்கர்ய புரம் !

 திருவனந்தபுரம் . . .
திருவட்டாறு ஆதிகேசவரின் சகோதரபுரம் !
திருவனந்தபுரம் . . .
உக்ர நரசிம்மரின் ரஹஸ்ய புரம் !

திருவனந்தபுரம் . . .
மோஹினி க்ருஷ்ணனின் லீலா புரம் !

திருவனந்தபுரம் . . .
ஸ்ரீராமனின் இரண்டு வேஷபுரம் !

திருவனந்தபுரம் . . .
ஆஞ்சநேயனின் வெண்ணைப்புரம் !

திருவனந்தபுரம் . . .
அனந்தபத்மநாபனின் வேட்டைப்புரம் !

திருவனந்தபுரம் . . .
 அழகன் பத்மநாபனின் ஆராட்டுப்புரம் !

திருவனந்தபுரம் . . .
லக்ஷ தீப மஹோத்சவ புரம் !

திருவனந்தபுரம் . . .
12008 சாளக்ராம சங்கமபுரம் !

திருவனந்தபுரம் . . .
திருப்பாற்கடல் பால் கசிந்தபுரம் !

திருவனந்தபுரம் . . .
சங்குமுகக் கடற்கரை புரம் !

 திருவனந்தபுரம் . . .
  ஒற்றைக்கல் மண்டப புரம் !திருவனந்தபுரம் . . .
விஜயனின் கால் வளர்ந்த புரம் !திருவனந்தபுரம் . . .
  அஸ்வத்தாம வ்யாஸ புரம் !


 திருவனந்தபுரம் . . .
365, 1/4 தூண்கள் ஸ்ரீபலி புரம் !


திருவனந்தபுரம் . . .
பத்ம தீர்த்த ஜல புரம் !
திருவனந்தபுரம் . . .
ஸ்வாமி நம்மாழ்வாரின் ப்ரபந்தபுரம் !


திருவனந்தபுரம் . . .
ஆளவந்தாரை அழைத்த புரம் !

திருவனந்தபுரம் . . .
ஸ்வாமி ராமானுஜரை அனுப்பிய புரம் !

திருவனந்தபுரம் . . .
ஸ்வாதித் திருநாளின் பூஜா புரம்!
திருவனந்தபுரம் . . .
கஜராணி ப்ரியதர்ஷினியின் சொகுசுபுரம் !


திருவனந்தபுரம் . . .
ஸ்ரீ லக்ஷ்மிவராஹரின் வாச புரம் !


திருவனந்தபுரம் . . .
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் த்யானபுரம் !  
 

 திருவனந்தபுரம் . . .
குழந்தைகளின் ஆனந்த நாட்டிய புரம் !திருவனந்தபுரம் . . .
பண்டிதர்களின் பாராயண புரம் !திருவனந்தபுரம் . . .
உன்னத பக்தர்களின் பக்திப்புரம் !திருவனந்தபுரம் . . .
வம்பளந்தாலும் முக்தி தரும் புரம் !திருவனந்தபுரம் . . .
கொட்டாங்குச்சியின் திருபுரம் !


திருவனந்தபுரம் . . .
மயில்பீலி ஸ்பர்சபுரம் !


திருவனந்தபுரம் . . .
மன்னர்களின் தாஸபுரம் !


திருவனந்தபுரம் . . .
ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேச புரம் !


திருவனந்தபுரம் . . .
அனாதைகளின் ரக்ஷபுரம் !

திருவனந்தபுரம் . . .
பசித்தவர்களுக்கு அன்னபுரம் !


திருவனந்தபுரம் . . .
ஆனந்த மஹிமா புரம் !


திருவனந்தபுரம் . . .
வர்ணிக்கமுடியாத வைகுந்தபுரம் !திருவனந்தபுரம் . . .
இன்றே புக வேண்டிய க்ருபாபுரம் !


திருவனந்தபுரம் . . .
நினைத்தாலே பரமபதம் தரும் சத்தியபுரம் ! ! !
திருவனந்தபுரம் . . .
திருவனந்தபுரம் . . .
திருவனந்தபுரம் . . .


ஜபித்தாலே வரவேற்க்கும் புரம் . . .

திருவனந்தபுரம் . . .
கோபாலவல்லியின் ஜீவ புரம் !


 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP