ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, February 6, 2011

உதயாஸ்தமனம் . . .

ராதேக்ருஷ்ணா


சூர்ய உதயம் . . .
சந்திர அஸ்தமனம் . . .


ப்ரேம உதயம் . . .
காம அஸ்தமனம் . . .


ஞான உதயம் . . .
அஞ்ஞான அஸ்தமனம் . . .


பக்தி உதயம் . . .
பயம் அஸ்தமனம் . . .


வைராக்ய உதயம் . . .
ஆசை அஸ்தமனம் . . .


சத்சங்க உதயம் . . .
சந்தேக அஸ்தமனம் . . .


நாம ஜப உதயம் . . .
புலம்பல் அஸ்தமனம் . . .


அன்பு உதயம் . . .
விரோதம் அஸ்தமனம் . . .


சிரத்தை உதயம் . . .
அசிரத்தை அஸ்தமனம் . . .


ஆனந்த உதயம் . . .
துக்க அஸ்தமனம் . . .


ஆரோக்ய உதயம் . . .
வியாதி அஸ்தமனம் . . .


சத்குரு உதயம் . . .
சஞ்சல அஸ்தமனம் . . .


சரணாகதி உதயம் . . .
சிரமம் அஸ்தமனம் . . .


வினயம் உதயம் . . .
அஹம்பாவம் அஸ்தமனம் . . .


உத்ஸாக உதயம் . . .
சோம்பல் அஸ்தமனம் . . .


மோக்ஷ உதயம் . . .
சம்சார அஸ்தமனம் . . .


ஆத்ம ஸ்வரூப உதயம் . . .
சரீர அபிமான அஸ்தமனம் . . .
ஒவ்வொரு சூர்ய உதயத்திலும்,
புதிது புதிதாய் வாழ்க்கை உதயம் . . .
அதனால் எப்பொழுதும்
சந்தோஷமாயிரு . . .
துக்கத்தை அஸ்தமனம் செய்து,
ஆனந்தத்தை உதயமாக்கிவிடு ! ! !
இப்படி செய்ய நம்மால் ஆகுமோ ?
முடியாது அல்லவா ?
அப்பொழுது திருவனந்தபுரத்தில்,
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியின்
ஒரு நாள்
உதயாஸ்தமன பூஜையில் கலந்து கொள் !
உதயத்திலிருந்து,அஸ்தமனம் வரை
ஸ்ரீ பத்மநாபனை நீ அனுபவித்தால்,
தேவையில்லாதவை அஸ்தமனமாகி,
தேவையானவை நிச்சயம் உதயமாகும் . . .
அதனால் எந்த சூர்ய உதயத்திலிருந்து,
நீ ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியோடு
இருக்கப்போகிறாய் ? ? ?


இன்று நாங்கள் அனுபவித்த
உதயாஸ்தமன பூஜையில்
ஸ்ரீ அனந்த பத்மநாபன்,
அடியேனுக்கு சொன்னவையே இவை !


அடுத்த உதயாஸ்தமன பூஜைக்காக
ஏங்கும் ஸ்ரீ அனந்த பத்மநாபனின்
தாஸர்களின் தாஸானு தாஸன் . . .
ஹே ! பத்மநாபா !
ஒரு ஜன்மா என்னை உனக்குப்
பூஜை செய்யும் அர்ச்சகராக்கி,
நித்யம் உதயாஸ்தமன பூஜை
செய்யவைப்பாயா ?  ?  ?
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP