ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, February 28, 2011

வாழ்கிறேன் ! ! !

ராதேக்ருஷ்ணா

வாழ்கின்றேன் !

எதற்காக வாழ்கிறேன்  . . .
 தெரியாது !

  ஏன் வாழவேண்டும் . . .
தெரியாது !

எப்படி வாழவேண்டும் . . .
தெரியாது !

ஆனாலும் வாழ்கின்றேன் . . .

எனக்கு வாழத் தகுதியிருக்கிறதா ?
தெரியாது . . .

என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ?
தெரியாது . . .

 ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

என் வாழ்வினால் என்ன ப்ரயோஜனம் ?
தெரியாது . . .

நான் வாழாவிட்டால் என்ன நஷ்டம் ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

இதுவரை வாழ்ந்து என்ன சாதித்தேன் ?
தெரியாது . . .

என் வாழ்வின் லக்ஷியம் என்ன ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

நான் ஒழுங்காக வாழ்கிறேனா ?
தெரியாது . . .

நான் திருப்தியாக வாழ்கிறேனா ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் . . .

எத்தனை நாள் வாழப்போகிறேன் ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் . . .

க்ருஷ்ணன் இஷ்டப்படி வாழ்கிறேனா ?
தெரியாது . . .

தெய்வத்தை பூரணமாக நம்புகின்றேனா ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் ! ! !

இப்படி ஒன்றும் தெளிவில்லாமல்
ஏன் வாழவேண்டும் ? ? ?

என்னையே நான் கேட்கிறேன் ! ! !

என் மனம் எனக்குச் சொன்ன பதில் . . .

காத்திரு . . .
ஒரு நாள் க்ருஷ்ணனைப் பார்ப்பாய் . . .
அதற்காக வாழ்ந்துகொண்டிரு . . .

எத்தனையோ ஜன்மங்கள் வாழ்ந்துவிட்டாய் !

இந்தப் பிறவியிலும் வாழ்ந்து விடு !

வாழ்க்கைக்காக வாழ் . . .

ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்தாலும்,
க்ருஷ்ணனுக்கு உன்னைத் தெரியும் . . .

அதனால் வாழ் . . .
என் மனம் எனக்குச் சொன்னது . . .

அதனால் வாழ்கிறேன் . . .
அதனால் வாழ்வேன் . . .

வாழ்ந்தே தீருவான் . . .

என் க்ருஷ்ணனுக்காக வாழ்கின்றேன் . . .

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP