ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, April 29, 2011

நன்றாக வாழ்வோம் !

ராதேக்ருஷ்ணா

யாரும் நம்மைக்
கெடுக்கமுடியாது !
நாம் ஜாக்கிரதையாக
இருக்கும் வரை !

யாரும் நம்மை
அவமானப்படுத்தமுடியாது !
நாம் அவமானத்தை
கொண்டாடாதவரை !

யாரும் நம்மை
ஒதுக்கிவைக்கமுடியாது !
நாம் கடவுளின் குழந்தை
என்னும் நினைவிருக்கும்வரை !

யாரும் நம்முடைய
சொத்தை கொள்ளையடிக்கமுடியாது !
நம்முடையதெல்லாம்
க்ருஷ்ணனுடையது
என்று நாம் வைத்திருக்கும்வரை !

எவருமே நம்மை
ஏமாற்றமுடியாது !
நம் வாழ்க்கையின் பொறுப்பை
நாம் க்ருஷ்ணனிடம்
ஒப்படைத்திருக்கும்வரை !

யாராலும் நம்மை
அழிக்கமுடியாது !
நாம் உடலல்ல ஆத்மா,
என்னும் சிந்தனையிருக்கும்வரை !

எதிலும் நாம்
தோற்கவேமுடியாது !
நம் வாயில் க்ருஷ்ண
நாம ஜபம் உள்ளவரை !

எந்த நிலையிலும்
நாம் வீழமாட்டோம் !
நாம் குருவிடம்
திடமான நம்பிக்கை
கொண்டிருக்கும்வரை !

நிச்சயம் நன்றாக வாழ்வோம் !
வாழ்வை க்ருஷ்ணப் பிரசாதமாக
நாம் வைத்திருக்கும்வரை !


Read more...

Wednesday, April 27, 2011

வாழ்வே தவம் !

ராதேக்ருஷ்ணா
வாழ்க்கை அழகானது !


வாழ்க்கை அற்புதமானது !


வாழ்க்கை பயனுள்ளது !


வாழ்க்கை அர்த்தமுள்ளது !


வாழ்க்கை ஆனந்தமானது !


வாழ்க்கை அதிசயமானது !


வாழ்க்கை எளிமையானது !


வாழ்க்கை வித்தியாசமானது !


வாழ்க்கை புதிரானது !


வாழ்க்கை ரசமுள்ளது !


வாழ்க்கை நிறைவானது !


வாழ்க்கை நிரூபணமானது !


வாழ்க்கை ஆசிர்வாதமுள்ளது !


வாழ்க்கை அனுபவமானது !


வாழ்க்கை பதிலுள்ளது !


வாழ்க்கை வரமானது !


வாழ்க்கை தேவையானது !


வாழ்க்கை பரிசானது !


வாழ்க்கை வாய்ப்பானது !


வாழ்க்கை உடன்வருவது !


வாழ்க்கை பாடமானது !


வாழ்க்கை . . .


பல அர்த்தங்களுடையது !


நீ தான் உன் வாழ்க்கையின்
அர்த்தத்தை அறியவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கையின்
மகத்துவத்தை உணரவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கையின்
மதிப்பை உயர்த்தவேண்டும் !
நீ தான் உன் வாழ்க்கையை
ரசிக்கவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கையை
அனுபவிக்கவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கைக்கு
அர்த்தம் தரவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கையைக்
கொண்டாடவேண்டும் !


நீ தான் உன் வாழ்க்கையை
மாற்றவேண்டும் !நீ தான் உன் வாழ்க்கையை
வாழவேண்டும் !

உன் வாழ்க்கையை வாழ் !
அடுத்தவர் வாழ்க்கை வேறு !
உன் வாழ்க்கை வேறு !

புரிந்து வாழ் !

வாழ்வே தவம் !

Read more...

Saturday, April 23, 2011

கவனி ! ! !

ராதேக்ருஷ்ணா


உன்னைக் கவனி !

உன் மனதைக் கவனி !

உன் செயலைக் கவனி !

உன் எண்ணங்களைக் கவனி !

உன் நடவடிக்கைகளை கவனி !

உன் பேச்சைக் கவனி !

உன் உழைப்பைக் கவனி !

உன் உடலைக் கவனி !

உன் ஆனந்தத்தைக் கவனி !

உன் சோம்பேறித்தனத்தைக் கவனி !


உன் தவறுகளை கவனி !


உன் முட்டாள்தனங்களைக் கவனி !


உன் பயங்களைக் கவனி !


உன் தைரியத்தைக் கவனி !


உன் பொறுப்புகளைக் கவனி !


உன் கடமைகளைக் கவனி !


உன் ஒழுக்கத்தைக் கவனி !


உன் குழப்பங்களைக் கவனி !


உன் யோசனைகளைக் கவனி !


உன் ஆரோக்கியத்தைக் கவனி !


உன் எதிர்பார்ப்புகளைக் கவனி !


உன் ஏமாற்றங்களைக் கவனி !


உன் தோல்விகளைக் கவனி !


உன் வெற்றிகளைக் கவனி !


உன் பொறுமையைக் கவனி !


உன் பக்தியைக் கவனி !


உன் வாழ்வைக் கவனி !


இவையெல்லாம் முடிந்தபிறகு
அடுத்தவரின் குற்றங்களைக் கவனி !


இதையெல்லாம் ஒழுங்காகச்
செய்வதற்கே நேரமில்லையாம் !
அடுத்தவரின் குற்றங்களைக்
கவனிக்கவும்,பேசவும்,
24மணி நேரம் போதவில்லையாம் !


உருப்படியாக வாழவே நேரம் . . .


புரிந்துகொள்பவர் பாக்கியசாலி . . .Read more...

Saturday, April 16, 2011

வேட்டையாடினான் !

ராதேக்ருஷ்ணா


வேட்டையாடினான் . . .

மன்மதன் வேட்டையாடினான் !


பத்மநாபன் என்னும் மன்மதமன்மதன்
என்னை வேட்டையாடினான் !

வில் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
செங்கண் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

அம்பு கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
செம்பவளவாய் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

தங்க வில் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
பீதாம்பரம் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

கூர் அம்பு கொண்டு
என்னை வேட்டையாடவில்லை !
ப்ரேமப் பார்வையே அம்பாக
என்னை வேட்டையாடினான் !

வளைந்த வில் கொண்டு
என்னை வேட்டையாடவில்லை !
புருவ வில்லினால் அம்பெய்து
என்னை வேட்டையாடினான் !


அஸ்திரம் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை !
ஸ்திரமான புன்னகையைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


குதிரை மீது வந்து என்னை
வேட்டையாடவில்லை !
கருடன் மீதேறி வந்து
என்னை வேட்டையாடினான் !


யாருக்கும் தெரியாமல் வந்து
என்னை வேட்டையாடவில்லை !
எல்லோருக்கும் தெரிந்தே
என்னை வேட்டையாடினான் !


தன் வீரத்தை காட்டி
என்னை வேட்டையாடவில்லை !
தன் கருணையைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


அவன் சந்தோஷத்திற்காக
என்னை வேட்டையாடவில்லை !
நான் ஆனந்தக்கடலில் திளைக்க
என்னை வேட்டையாடினான் !


செந்தாமரைப் பாதம் காட்டி
என்னை வேட்டையாடினான் !


முத்து நகக் கண்களைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


கரு நீலத் திருமேனியை அம்பாக்கி
என்னை வேட்டையாடினான் !


தங்கச் சலங்கை சப்தத்தில்
என்னை வேட்டையாடினான் !


கணுக்காலின் அழகில் என்னை ஆழ்த்தி
என்னை வேட்டையாடினான் !


முழங்காலின் வழ வழப்பைக்கொண்டு
என்னை வேட்டையாடினான் !


பருத்த இரண்டு திருத்தொடைகளால்
என்னை வேட்டையாடினான் !


முத்தத்தின் அழகில் நான் மூழ்கியிருக்க,
என்னை வேட்டையாடினான் !


அழகுச் சிற்றிடையின் அரைச் சதங்கையால்
என்னை வேட்டையாடினான் !


தாமரைத் தொப்புள் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


விரிந்த மார்பைக் காட்டி
என்னை வேட்டையாடினான் !


அழகு வக்ஷஸ்தலத்தின் ஸ்பரிசத்தால்
என்னை வேட்டையாடினான் !


சங்கு கழுத்தின் எடுப்பில்
என்னை வேட்டையாடினான் !


உருண்டு திரண்ட தோளால்
என்னைக் கட்டி அணைத்து
என்னை வேட்டையாடினான் !


செந்தாமரைக் கைகளால் என்னை
வாரி எடுத்து உச்சி முகந்து
நன்றாக வேட்டையாடினான் !


செங்கனிவாயின் தித்திப்பைத்
தந்து என்னை ஏமாற்றி பித்தேற்றி
என்னை வேட்டையாடினான் !


முத்துப்பற்கள் கொண்டு என்
கன்னத்தைக் கடித்து காயம் செய்து
என்னை வேட்டையாடினான் !


செவ்வரியோடிய சிவந்த கண்களினால்
என்னை பைத்தியமாக்கி,
என்னை முழுவதுமாக வேட்டையாடினான் !


காதோரம் மகர குண்டலத்தின்
அசைவைக் காட்டி,
என்னை அசையாமலிருக்கச் செய்து
என்னை வேட்டையாடினான் !


முத்து வியர்வை வழியும்,
சுருண்ட மயிர்களால் அலங்காரமான
கஸ்தூரி திலக நெற்றியைக்கொண்டு
என்னை வேட்டையாடினான் !


வளைந்து,சுருண்டு,கருத்து,
வழவழப்பான,துளசி மணம் கமழும்,
குழல் கற்றைகள் என்னும்
எண்ணிலடங்கா அம்புகள்
கொண்டு என்னை வேட்டையாடினான் !


பின்னழகால் என்னை வேட்டையாடினான் !
முன்னழகால் என்னை வேட்டையாடினான் !


இடையழகால் என்னை வேட்டையாடினான் !
நடையழகால் என்னை வேட்டையாடினான் !
உடையழகால் என்னை வேட்டையாடினான் !


வேட்டையாடினான் !
வேட்டையாடிவிட்டான் !


அனந்தன்காட்டில் வேட்டையாடினான் !
அனந்தபத்மன் வேட்டையாடினான் !
ஆதியோடு அந்தமாய் வேட்டையாடினான் !
நாளை நீராட வருவான் !
என்னை நீராட்ட வருவான் !Read more...

Friday, April 15, 2011

குழந்தையாயிரு ! ! !

ராதேக்ருஷ்ணா
 
குழந்தையாயிரு ! ! !
எல்லா கவலைகளையும்
தூர எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா பயங்களையும்
வீசி எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா குழப்பங்களையும்
குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா எதிர்பார்ப்புகளையும்
சாக்கடையில் போட்டுவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா தோல்விகளையும்
தீயிட்டுக் கொளுத்திவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா ஏமாற்றங்களையும்
குழி தோண்டி புதைத்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா மனக்காயங்களையும்
துடைப்பத்தால் பெருக்கி,
வெளியில் கொட்டிவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா சந்தேகங்களையும்
மூட்டை கட்டி துர எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா திட்டங்களையும்
ஒட்டு மொத்தமாய்
தொலைத்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
நீ என்றுமே குழந்தைதான் ! ! !
இதில் மாற்றமில்லை ! ! !

உன் உடலுக்குத்தான் வயதாகியிருக்கிறது !
உன் உள்ளத்துக்கு வயசே கிடையாது !

இந்தப் புத்தாண்டில்
குழந்தை போல் குதூகலமாயிரு ! ! !

வாழ்க்கை சுகமாக இருக்கும் ! ! !
 
 குழந்தை அம்மாவை நம்பி
இருப்பதுபோல்,
நீ க்ருஷ்ணனை நம்பியிரு ! ! !
 
மற்றதெல்லாம் தானாக நடக்கும் ! ! !
 
 

Read more...

Wednesday, April 13, 2011

இதுவே தக்க சமயம் ! ! !

ராதேக்ருஷ்ணா


உன் தேசத்திற்காக என்ன செய்தாய் ?

உன் தேசத்தை கொண்டாடுகிறாயா ?

உன் தேசம் உன் உயிரை விட பெரியது !

உன் தேசம் உன் குடும்பத்தை விட பெரியது !

உன் தேசம் உன் மரியாதையை விட பெரியது !

உன் தேசம் உன் மானத்தை விட பெரியது !

உன் தேசம் உன் வாழ்வை விட பெரியது !

உன் தேசம் உன் சொத்தை விட பெரியது !

உன் தேசம் உன் உடலை விட பெரியது !

உன் தேசம் உன் சந்தோஷத்தை விட பெரியது !

உன் தேசம் உன் ஆசைகளை விட பெரியது !

உன் தேசம் உன் வெற்றியை விட பெரியது !

உன் தேசம் உன்னை விட பெரியது !

என் தேசம் என்னை விட பெரியது !

நம் தேசம் நம்மை விட பெரியது !

நாம் நம் தேசத்தை எப்படி அவமதிக்கலாம் ?

உன் தேசம் உன்னுடைய உரிமையைக்
கொண்டாடுகிறது ! ! !

இந்த தேசத்தின் தலை எழுத்து உன்னிடம்
இருக்கிறது ! ! !

இந்த தேசம் மாறவேண்டுமென்றால்
முதலில் நீ மாறவேண்டும் ! ! !

நம் தேசத்திற்காக நாம் மாறுவோம் !

நாம் மாறினால் நம் தேசம் ஜெயிக்கும் ! ! !

இந்த தேசத்தின் எதிர்காலம் நம்மிடம் ! ! !

நம் பாரதம் வாழ உறுதி கொள்வோம் !

நம் பாரதம் வெல்ல உயிர் கொடுப்போம் !

நம் பாரதம் தலை நிமிர நாம் நம்மை
திருத்திக்கொள்வோம் ! ! !

இதுவே தக்க சமயம் ! ! !

முதலில் நாம் திருந்துவோம் ! ! !
பிறகு நிச்சயம் நம் தேசம் வெல்லும் ! ! !

ஜெய் ஹிந்த் ! ! !

நம் பாரதம் வெல்லும் !
நம் பாரதம் வாழும் !
நம் பாரதம் தலை நிமிரும் !
நம் பாரதம் உலகை ஆளும் !
நம் பாரதம் சுத்தமாகும் !

நம் பாரதமாதாவின் 
சரண கமலங்களில் வந்தனம் ! ! !


Read more...

Sunday, April 10, 2011

கவலையில்லை !

ராதேக்ருஷ்ணா


உலகம் என்னை அவமதித்தாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னை ஒதுக்கித் தள்ளினாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னை அடித்தாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னை வெறுத்தாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் எனக்கு எதுவுமே 
தரவில்லைஎன்றாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னுடைய எல்லாவற்றையும்
பிடுங்கிகொண்டாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னை மனிதனாக
ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்
எனக்குக் கவலையில்லை !

உலகம் என்னை புழுவாக
நினைத்தாலும்
எனக்குக் கவலையில்லை ! 

உலகம் என்னை மறந்தேபோனாலும்
எனக்குக் கவலையில்லை !

எனக்குக் கவலையில்லை !
எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை !
துளி கூட கவலையேயில்லை !

என்னோடு என்றும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு என்ன கவலை ? ! !

என்னோடு எல்லா சமயத்திலும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு எதற்கு கவலை ? ! !

என்னோடு எல்லா இடத்திலும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு கவலை உண்டோ ? ! !

என்னிடத்தில் கவலை வந்தால்
சத்தியமாக கவலை செத்துவிடும் ! ! !

என்னிடம் கவலை வந்தால்
கவலைக்கு கவலை வந்துவிடும் ! ! !

என்னிடம் கவலை மறந்தும்
நெருங்கமுடியாது !

என்னிடம் கவலை நெருங்க
என் கிருஷ்ணன் சம்மதிக்கமாட்டான் ! ! !

என்னிடம் கவலை ஒரு நாளும்,
எந்த ஒரு ஜன்மாவிலும் நிச்சயம்
நெருங்கவே முடியவே முடியாது ! ! !

ஐயோ ! கவலையே !
நான் இருக்கும் திசைப்பக்கம் கூட
தலை வைத்து படுத்துவிடாதே !

உன் நன்மைக்காக சொல்கிறேன் !
கவலையே !
சீக்கிரம் ஓடிவிடு !
என் கண்ணன் உன்னைக் கொல்ல
வேகமாய் வருகிறான் !

நீ வழி தவறி என்னிடம் வந்துவிட்டாய் !
சீக்கிரம் தப்பித்து ஓடிவிடு !Read more...

Thursday, April 7, 2011

மனம் கொள் ! ! !

ராதேக்ருஷ்ணா

உலகம் என்ன தரப்போகிறதோ
என்று ஏங்காதே . . .
உலகம் எதைத் தந்தாலும்
ஏற்கும் மனம் கொள் ! ! !

உலகம் என்ன சொல்லப் போகிறதோ
என்று பயப்படாதே . . .
உலகம் என்ன சொன்னாலும்
கலங்காத மனம் கொள் ! ! !

உலகம் எப்படி நடத்துமோ
என்று நடுங்காதே . . .
உலகம் எப்படி நடத்தினாலும்
ஜெயிக்கும் மனம் கொள் ! ! !

 உலகம் எப்படி ஏமாற்றுமோ
என்று குழம்பாதே . . .
உலகம் எப்படி ஏமாற்றினாலும்
ஏமாறாத மனம் கொள் ! ! !

உலகத்தில் எப்படி வாழப்போகிறேனோ
என்று புலம்பாதே . . .
உலகத்தில் எப்படியும் வாழ்ந்தே தீருவேன்
என்னும் மனம் கொள் ! ! !

உலகம் என்னை ஏற்குமா
என்று சந்தேகப்படாதே . . .
 உலகம் என்னை ஏற்றுத்தான் ஆகவேண்டும்
என்ற திடம் கொள் ! ! !

உலகில் நான் வீணாகிவிடுவேனோ
என்று அழுதுகொண்டிருக்காதே . . .
உலகில் நான் சாதித்துக்காட்டுவேன்
என்ற வைராக்யம் கொள் ! ! !

உலகில் எனக்கு வாழ அதிகாரம்
இல்லை என்று உளராதே . . .
உலகில் நான் சந்தோஷமாக வாழவே
வந்திருக்கிறேன் என்று நினவில் கொள் ! ! !

உலகம் என்னை மதிப்பதில்லை
என்று அஹம்பாவத்தில் ஆடாதே . . .
உலகம் என்னை மதிக்கும்படியாக
காரியம் செய்வேன் என்று நம்பிக்கை கொள் ! ! !

உலகத்தில் யாரும் எனக்கு
உதவவில்லை என்று பழிபோடாதே . . .
உலகம் உதவவில்லையென்றாலும்
நான் வாழ்ந்துகாட்டுவேன் என்ற மனம் கொள் ! ! !

உலகம் என்பது சில தேசங்கள் ! ! !
உலகம் என்பது பல கோடி மனிதர்கள் ! ! !
உலகம் என்பது சில மொழிகள் ! ! !
 உலகம் என்பது பல பழக்கவழக்கங்கள் ! ! ! 

அவ்வளவு தான் ! ! !
இந்த உலகிற்காகவா நீ பயப்படுகிறாய் ! ? !

என்ன கொடுமை இது ? ? ?

இனி உலகம் உனக்குச் சொந்தம் என்று நம்பு ! ! !
இனி உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு ! ! !

வாழ்ந்துவிடு  . . .
உலகத்தை மறந்துவிடு . . .
உலகத்தை ஜெயித்துவிடு . . .Read more...

Sunday, April 3, 2011

இல்லை ! இல்லை ! இல்லை !

ராதேக்ருஷ்ணா


முயல்பவன் தோற்பதில்லை . . .

ஏமாற்றுபவன் ஜெயித்ததில்லை . . .

பொய்யன் நிம்மதியடைவதில்லை . . .

பயந்தவன் சாதிப்பதில்லை . . .

சோம்பேறி உருப்பட்டதில்லை . . .

நல்லவன் வீழ்வதில்லை . . .

கெட்டவன் வாழ்வதில்லை . . .

நன்றி மறந்தவர் மனிதரில்லை . . .

உதவுபவன் முட்டாளில்லை . . . 

பொறுமைசாலி வீண்போவதில்லை . . .

உழைப்பவன் தலை குனிவதில்லை . . .

 இன்னும் உண்டு . . .
முடியவில்லை . . .

வாழ்க்கைக்கு முடிவில்லை . . .

கருணைக்கு எல்லையில்லை . . .

அன்பிற்கு அழிவில்லை . . .

ஆனந்தத்திற்கு விலையில்லை . . .

துன்பத்திற்கு பலமில்லை . . .

பக்திக்கு பலவீனமில்லை . . .

பக்தருக்கு சோர்வில்லை . . .

வாழ்ந்து பார்ப்போம் ! ! !

வீழ்ச்சி இனியில்லை . . .
Read more...

Saturday, April 2, 2011

முயன்றால் முடியும் ! ! !

ராதேக்ருஷ்ணா


முயன்றால் முடியும் ! ! !

படிக்கத் தெரியாதவர்,
முயன்றால் படிக்க முடியும் !

சமைக்கத் தெரியாதவர்
முயன்றால் சமைக்க முடியும் !

ஜெயிக்கத் தெரியாதவர்
முயன்றால் ஜெயிக்க முடியும் !

பேசத் தெரியாதவர்
முயன்றால் நன்றாக பேசமுடியும் !

சேமிக்கத் தெரியாதவர்
முயன்றால் நிறைய சேமிக்கமுடியும் !

 காத்திரு . . .
முயன்று கொண்டேயிரு ! ! !

சம்பாதிக்கத் தெரியாதவர்கள்
முயன்றால் நிறைய சம்பாதிக்கமுடியும் !

கவனிக்கத் தவறியவர்கள்
முயன்றால் நன்றாக கவனிக்க முடியும் !தவறு செய்தவர்கள்
முயன்றால் நிச்சயம் திருந்தி வாழ முடியும் !

முயன்றால் முடியாதது எதுவுமில்லை !

முயற்சி என்பது கடவுளின் அருள் ! ! !

முயன்றவர் வாழ்வில் தோற்றதில்லை ! ! !

விடாமுயற்சி வீண்போகா வெற்றி . . .

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP