ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 ஏப்ரல், 2011

வேட்டையாடினான் !

ராதேக்ருஷ்ணா


வேட்டையாடினான் . . .

மன்மதன் வேட்டையாடினான் !


பத்மநாபன் என்னும் மன்மதமன்மதன்
என்னை வேட்டையாடினான் !

வில் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
செங்கண் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

அம்பு கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
செம்பவளவாய் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

தங்க வில் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை . . .
பீதாம்பரம் கொண்டு
என்னை வேட்டையாடினான் !

கூர் அம்பு கொண்டு
என்னை வேட்டையாடவில்லை !
ப்ரேமப் பார்வையே அம்பாக
என்னை வேட்டையாடினான் !

வளைந்த வில் கொண்டு
என்னை வேட்டையாடவில்லை !
புருவ வில்லினால் அம்பெய்து
என்னை வேட்டையாடினான் !


அஸ்திரம் கொண்டு என்னை
வேட்டையாடவில்லை !
ஸ்திரமான புன்னகையைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


குதிரை மீது வந்து என்னை
வேட்டையாடவில்லை !
கருடன் மீதேறி வந்து
என்னை வேட்டையாடினான் !


யாருக்கும் தெரியாமல் வந்து
என்னை வேட்டையாடவில்லை !
எல்லோருக்கும் தெரிந்தே
என்னை வேட்டையாடினான் !


தன் வீரத்தை காட்டி
என்னை வேட்டையாடவில்லை !
தன் கருணையைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


அவன் சந்தோஷத்திற்காக
என்னை வேட்டையாடவில்லை !
நான் ஆனந்தக்கடலில் திளைக்க
என்னை வேட்டையாடினான் !


செந்தாமரைப் பாதம் காட்டி
என்னை வேட்டையாடினான் !


முத்து நகக் கண்களைக் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


கரு நீலத் திருமேனியை அம்பாக்கி
என்னை வேட்டையாடினான் !


தங்கச் சலங்கை சப்தத்தில்
என்னை வேட்டையாடினான் !


கணுக்காலின் அழகில் என்னை ஆழ்த்தி
என்னை வேட்டையாடினான் !


முழங்காலின் வழ வழப்பைக்கொண்டு
என்னை வேட்டையாடினான் !


பருத்த இரண்டு திருத்தொடைகளால்
என்னை வேட்டையாடினான் !


முத்தத்தின் அழகில் நான் மூழ்கியிருக்க,
என்னை வேட்டையாடினான் !


அழகுச் சிற்றிடையின் அரைச் சதங்கையால்
என்னை வேட்டையாடினான் !


தாமரைத் தொப்புள் கொண்டு
என்னை வேட்டையாடினான் !


விரிந்த மார்பைக் காட்டி
என்னை வேட்டையாடினான் !


அழகு வக்ஷஸ்தலத்தின் ஸ்பரிசத்தால்
என்னை வேட்டையாடினான் !


சங்கு கழுத்தின் எடுப்பில்
என்னை வேட்டையாடினான் !


உருண்டு திரண்ட தோளால்
என்னைக் கட்டி அணைத்து
என்னை வேட்டையாடினான் !


செந்தாமரைக் கைகளால் என்னை
வாரி எடுத்து உச்சி முகந்து
நன்றாக வேட்டையாடினான் !


செங்கனிவாயின் தித்திப்பைத்
தந்து என்னை ஏமாற்றி பித்தேற்றி
என்னை வேட்டையாடினான் !


முத்துப்பற்கள் கொண்டு என்
கன்னத்தைக் கடித்து காயம் செய்து
என்னை வேட்டையாடினான் !


செவ்வரியோடிய சிவந்த கண்களினால்
என்னை பைத்தியமாக்கி,
என்னை முழுவதுமாக வேட்டையாடினான் !


காதோரம் மகர குண்டலத்தின்
அசைவைக் காட்டி,
என்னை அசையாமலிருக்கச் செய்து
என்னை வேட்டையாடினான் !


முத்து வியர்வை வழியும்,
சுருண்ட மயிர்களால் அலங்காரமான
கஸ்தூரி திலக நெற்றியைக்கொண்டு
என்னை வேட்டையாடினான் !


வளைந்து,சுருண்டு,கருத்து,
வழவழப்பான,துளசி மணம் கமழும்,
குழல் கற்றைகள் என்னும்
எண்ணிலடங்கா அம்புகள்
கொண்டு என்னை வேட்டையாடினான் !


பின்னழகால் என்னை வேட்டையாடினான் !
முன்னழகால் என்னை வேட்டையாடினான் !


இடையழகால் என்னை வேட்டையாடினான் !
நடையழகால் என்னை வேட்டையாடினான் !
உடையழகால் என்னை வேட்டையாடினான் !


வேட்டையாடினான் !
வேட்டையாடிவிட்டான் !


அனந்தன்காட்டில் வேட்டையாடினான் !
அனந்தபத்மன் வேட்டையாடினான் !
ஆதியோடு அந்தமாய் வேட்டையாடினான் !




நாளை நீராட வருவான் !
என்னை நீராட்ட வருவான் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP