ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, May 22, 2011

யாருக்குச் சொந்தம் ?

ராதேக்ருஷ்ணா

இந்த உடல் யாருக்கு சொந்தம் ? 

வயிற்றில் பத்து மாதம்
சுமந்த அம்மாவுக்கா ?

தன் வீர்யத்தை விதைத்த
தந்தைக்கா ?

சுகமாய் கொஞ்சி மகிழும்
பந்துக்களுக்கா ?

பாடம் சொல்லிக்கொடுக்கும்
வாத்தியாருக்கா ?

வேலை தந்து சம்பளம் தரும்
யஜமானனுக்கா ?

இளவயதில் சுகம் தரும்
மனைவிக்கா / கணவனுக்கா ?

வயதான காலத்தில்
உடனிருக்கும் மகனுக்கா/மகளுக்கா ?

மதித்துக் காப்பாற்றும்
மருமகனுக்கா / மருமகளுக்கா ?

பல வித வியாதிகளிருந்து
காக்கும் வைத்தியனுக்கா ?

மானத்தைக் காப்பாற்றும்
நம்முடைய ஆடைக்கா ?

தேவையான உதவி செய்யும்
நண்பர்களுக்கா ?

தன் வசத்திற்கு இழுக்கும்
காமத்துக்கா ?

நம்மையே மறக்கடிக்கும்
கோபத்திற்கா ?

நடுநடுங்க வைக்கும்
பயத்திற்கா ?

தேவையான சுகத்தை
ஏற்படுத்தித்தரும் பணத்திற்கா ?

நினைத்தபோதெல்லாம் படுத்தும்
வியாதிகளுக்கா ?

அந்திம காலத்தில் எரித்துச்
சாம்பலாக்கும் அக்னிக்கா ?

புதைத்தால் உணவாக்கிக் கொள்ளும்
புழுக்களுக்கா ?

இல்லையென்றால் இந்த உடலில்
பல வருடங்களாக குடிகொண்டிருக்கும்
நமக்கா ?

நமக்கு அனுக்ரஹம் செய்யும் தெய்வத்திற்கா ?

இந்த உடலின் காரணமான
பாப, புண்ணியத்திற்கா ?

தன்னிஷ்டப்படியெல்லாம்
இதை ஆடவைக்கும் அடங்காத
ஆசைகளுக்கா ?

யோசித்துச் சொல் . . .

யாருக்குச் சொந்தம் . . .

இந்த உடல் யாருக்குச் சொந்தம் ?

உன்னுடைய உடல் யாருக்குச் சொந்தம் ? ? ?


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP