ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, May 23, 2011

க்ருஷ்ண பக்தி !

ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
கஷ்டங்கள் வரட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

  
பிரச்சனைகள் படுத்தட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
வியாதிகள் நோகடிக்கட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
துன்பங்கள் விளையாடட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 எது எப்படி வேண்டுமானாலும்
நடக்கட்டும் . . .
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
நான் க்ருஷ்ணனிடம் பணம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் நிம்மதி
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் தைரியம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஆனந்தம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஆரோக்கியம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் வெற்றியைக்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ராஜபதவி
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் உலகில் பெருமை
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் சொத்து
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் மோக்ஷம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஒன்றுமே
கேட்கமாட்டேன் . . .

எனக்கு க்ருஷ்ணனிடமிருந்து
ஒன்றுமே வேண்டாம் . . .

க்ருஷ்ணன் என்னோடு இருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .

க்ருஷ்ணன் என்னை விட்டு நீங்கவே
மாட்டான் என்பதே எனக்குப் போதும் . . .

க்ருஷ்ணன் என் மீது அளவு கடந்த
அன்பை வைத்திருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .
 
என் பக்திக்கு எனக்கு ஒன்றுமே
க்ருஷ்ணனிடமிருந்து வேண்டாம் . . .
 
 
எனக்குப் பக்தியே போதும் . . .
க்ருஷ்ண பக்தியே போதும் . . .
எல்லாப் பிறவியிலும் இது போதும் . . .
 
இதைத் தவிர எதுவும் சுகமில்லை . . .
 
இதை விட்டு எதைக் கேட்டு என்ன சுகம் ? ? ?
 
அதனால் எனக்கு க்ருஷ்ண பக்தி போதும் . . .
 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP