ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, June 30, 2011

அப்பாடா . . .நிம்மதி . . .

ராதேக்ருஷ்ணா

எனக்குக் காமம் அதிகம் !

எனக்குக் கோபம் அதிகம் !

எனக்கு அஹம்பாவம் அதிகம் !

எனக்கு சுயநலம் அதிகம் !

எனக்குப் பெருமை அதிகம் !

எனக்குத் திமிர் அதிகம் !

எனக்கு பொறாமை அதிகம் !

எனக்கு வெறுப்பு அதிகம் !

எனக்கு பேராசை அதிகம் !

எனக்கு பொறுமை கிடையாது !

எனக்கு பணிவு கிடையாது !

எனக்கு சிரத்தை கிடையாது !

எனக்குப் பொறுப்பு கிடையாது !

எனக்கு சோம்பேறித்தனம் பிடிக்கும் !

எனக்கு வெட்டியாயிருக்கப் பிடிக்கும் !

எனக்கு அடுத்தவரை குறைகூறப் பிடிக்கும் !

எனக்கு எல்லோரும் என்னைக்
கொண்டாடுவது ரொம்பப் பிடிக்கும் !

என்னை யாராவது குறை சொன்னால்
எனக்குப் பிடிக்கவே பிடிக்காது !

நான் உடலை வருத்தியெல்லாம்
பக்தி செய்யமாட்டேன் . . .

என் மனம் க்ருஷ்ணனை நினைத்து
கதறியெல்லாம் அழாது . . .

என் புத்தி க்ருஷ்ணனுக்காக
மட்டுமே வாழாது . . .

எப்பொழுதும் க்ருஷ்ண
நாமத்தை ஜபிக்க ஆசை கிடையாது . . .

நான் இத்தனை மோசமானவன் . . .

ஆனாலும் க்ருஷ்ணன் என்னை
கைவிடவில்லை . . .

அவனுடைய நாமத்தை
எப்படியோ என்னை ஜபிக்கவைத்துவிட்டான் !

மறந்துபோய் பல சந்தர்ப்பத்தில்
க்ருஷ்ணா என்று என்னை அழைக்க
வைத்துவிட்டான் !

க்ருஷ்ணன் தன்னுடைய
கோயிலுக்கு என்னை அழைத்துச்
செல்கிறான் !

எனக்கே தெரியாமல் க்ருஷ்ணன்
என்னை அவனை நம்பவைத்துவிட்டான் !

இதுதான் ஆச்சரியம் . . .

இதுதான் அதிசயம் . . .

நான் எப்பொழுதாவது
சொல்லும் க்ருஷ்ண நாமத்திற்கு
எனக்கு அத்தனை செய்துகொண்டிருக்கிறான் !

நான் அவனை மறந்தேபோனாலும்,
அவன் என்னை மறப்பதேயில்லை . . .

ஆஹா . . .
இதல்லவா உண்மையான அன்பு . . .

ஆஹா . . .
இதுதானே உண்மையான காதல் . . .

நான் க்ருஷ்ணன் பின்னால்
செல்வதில்லை . . .

ஆனால் க்ருஷ்ணன் என் பின்னால்
அலைந்துகொண்டேயிருக்கிறான் . . .

என் ஒருவனைத் திருத்த
எத்தனை பாடு படுகிறான் . . .

நான் நல்வழியில் செல்ல
எத்தனை கருணை காட்டுகிறான் . . .

ஒன்று எனக்கு நன்றாகப் புரிந்தது . . .

க்ருஷ்ணன் என்னைவிட பலசாலி . . .
க்ருஷ்ணன் என்னைவிட உத்தமன் . . .
க்ருஷ்ணன் என்னைவிட புத்திசாலி . . .
க்ருஷ்ணன் என்னைவிட உயர்ந்தவன் . . .
க்ருஷ்ணன் என்னைவிட அற்புதமானவன் . . .

க்ருஷ்ணா ! உன் பலம் புரிந்தது . . .

அதனால் இனிமேல் கவலையில்லை !
என்னைப் பற்றி இனிமேல் கவலையில்லை !

நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் !

அப்பாடா . . .நிம்மதி . . .

நான் எப்படியிருந்தாலும்
என்னை சரிசெய்யும் ஒருத்தரைத் தான்
இத்தனை நாள் தேடினேன் . . .

இனியெல்லாம் சுகமே . . .


Read more...

Tuesday, June 28, 2011

உன்னைத் தேடி வருவான் !

ராதேக்ருஷ்ணா
 
உன் கடமையைச் செய் !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
பொறாமையைக் கொன்று போடு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
அஹம்பாவத்தை அழித்துப்போடு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
எல்லோரையும் சமமாகப் பாவி !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
வருபவற்றை அப்படியே ஏற்றுக்கொள் !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
பொறுப்புகளை சந்தோஷமாகக் கவனி !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
பெற்றோரைக் கொண்டாடு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
உலகத்திற்கு உன்னால் முடிந்ததை செய் !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
யாரையும் குறை சொல்லாமலிரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
எப்பொழுதும் பணிவோடு இரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
என்றுமே நம்பிக்கையோடு இரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
நேரத்தை வீணடிக்காமல் இரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
தேவையற்றதை செய்யாமல் இரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
 
யாரையும் அவமதிக்காமல் இரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . . 
 
எல்லா சமயத்திலும் நாமஜபம் செய் !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . . 
 
எது நடந்தாலும் கலங்காமலிரு !
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . . 
 
இதையெல்லாம் செய்யாமல்,
க்ருஷ்ணன் இன்னும் தெரியவில்லை
என்று உளராதே . . .
 
 இவையெல்லாவற்றையும்
செய்துவிட்டால்,
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .

வந்தபிறகு என்னிடம் சொல் . . .
நிச்சயம் வருவான் . . .

உன்னைத் தேடி வருவான் . . .
க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் . . .
உன் க்ருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் !


Read more...

Monday, June 27, 2011

வெற்றி உனதே . . .

ராதேக்ருஷ்ணா

நில் . . .

கொஞ்சம் நில் . . .

உன்னைப் பற்றி
யோசிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கு . . .

உன் உடலின் தேவையில்
ஓடிக்கொண்டிருக்கும்
அறிவுள்ள மனிதா . . .
கொஞ்சம் நில் . . .
ஒழுங்காய் கவனி . . .
சரியாக தீர்மானம் செய் . . .
பிறகு தைரியமாகச் செல் . . .

உன் மனதின் ஓட்டத்தைக்
கவனி !

உன் ஆசையின் எல்லையைக்
கவனி !

உன் எண்ணங்களின் விபரீதத்தைக்
கவனி !

உன் செயல்களின் விளைவுகளைக்
கவனி !

உன் முயற்சிகளின் போக்கைக்
கவனி !

உன் வாழ்க்கையின் பாதையைக்
கவனி !

உன் கோபத்தின் அவசியத்தைக்
கவனி !

உன் தோல்வியின் காரணத்தைக்
கவனி !

உன் நேரத்தின் மதிப்பைக்
கவனி !

உன்னை ஏமாற்றுபவரின் வித்தையைக்
கவனி !

உன்னை கேவலப்படுத்துபவரின்
உள்ளத்தைக் கவனி !

உனது பயத்தைக் கவனி !

உனது தைரியத்தைக் கவனி !

உனது குழப்பத்தைக் கவனி !

உனது அவசரத்தைக் கவனி !

உனது அறியாமையைக் கவனி !

உன் வெறியைக் கவனி !

உன் தேடலைக் கவனி !

பொறுமையாகக் கவனி !
தெளிவாகக் கவனி !
தைரியமாகக் கவனி !

கவனித்தபின் ஒரு
தீர்மானத்திற்கு வா . . .

உன்னுடைய வழியைத்
தீர்மானித்தபின் அதில் செல் . . .

வெற்றி உனதே . . .


Read more...

Monday, June 6, 2011

பிறந்த நாள் ! ! !

ராதேக்ருஷ்ணா


நான் ஏன் பிறந்தேன் ? ? ?


ஒரு வேளை பிறந்திருக்காவிட்டால் ? ! ?
இன்று உயிரோடு
இருந்திருக்கமாட்டேன் . . .


உயிரோடு இல்லையென்றால் ? ! ?
என் குருஜீஅம்மாவை
தரிசித்திருக்கமாட்டேன் . . .


தரிசித்திருக்காவிட்டால் ? ! ?
ராதேக்ருஷ்ணா நாமத்தை
அறிந்திருக்கமாட்டேன் . . .


அறிந்திருக்காவிட்டால் ? ! ?
என்னை புரிந்துகொண்டு
இருக்கமாட்டேன் . . .


புரிந்து கொண்டிருக்காவிட்டால் ? ! ?
க்ருஷ்ணனை அனுபவித்து
இருக்கமாட்டேன் . . .


அனுபவித்திருக்காவிட்டால் ? ! ?
வாழ்வில் பக்தி
செய்திருக்கமாட்டேன். . .


பக்தி செய்திருக்காவிட்டால் ? ! ?
வாழ்வை உணர்ந்து
ரசித்திருக்கமாட்டேன் . . .


ரசித்திருக்காவிட்டால் ? ! ?
நான் மனிதனாக
இருக்கமாட்டேன் . . .


அதனால் நான் மனிதனாய்
இருப்பதற்கு
பிறந்தது பயனாயிற்று . . .

இந்த உடலைத் தாங்கிய
என் தாய்க்கு நன்றி . . .

இந்த உடலைத் தந்த
என் தந்தைக்கு நன்றி . . .

இந்த உடலைக் காப்பாற்றிய
என் க்ருஷ்ணனுக்கு நன்றி . . .

என்னை மனிதனாக்கிய
என் குருஜீஅம்மாவுக்கு நன்றி . . .

நன்றி . . .நன்றி . . .நன்றி . . .

இந்த உடலில் உயிராய்
இருக்கும் க்ருஷ்ணா . . .

உன்னையே சரணடைந்தேன் . . .
உன்னையே நம்புகின்றேன் . . .
உன் திருவடிகளைப் பிடித்துவிட்டேன் . . .

உன் இஷ்டப்படி இந்த உடலையும்,
இந்த ஆத்மாவையும்
வைத்து அனுபவித்துக்கொள் . . .

இதுவே என் பிறந்தநாளுக்கு
நீ தரும் பரிசு . . .

தருவாய் என காத்திருக்கிறேன் . . .Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP